உக்ரைன் அதிபர் கதையை முடிச்சிருங்க.. கொல்ல போடப்பட்ட தடையை நீக்கிய புதின்! ஷாக் பின்னணி

Subscribe to Oneindia Tamil

மாஸ்கோ: ரஷ்யா - உக்ரைன் போர் 4 ஆண்டுகளை கடந்தும் தீவிரமாக நடந்து வருகிறது. இந்நிலையில் தான் உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி மற்றும் அந்த நாட்டின் ராணுவ தளபதிகளை கொல்ல விதிக்கப்பட்ட தடையை திடீரென்று ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் நீக்கி உள்ளார். இதன்மூலம் உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி மற்றும் அந்த நாட்டின் 'டாப்' ராணுவ அதிகாரிகளை கொல்ல புதின் பச்சைக்கொடி காட்டி உள்ள பரபரப்பான தகவல்கள் வெளியாகி உள்ளது.

அண்டை நாடுகளான ரஷ்யா - உக்ரைன் இடையே கடந்த 4 ஆண்டுகளுக்கும் மேலாக போர் நடந்து வருகிறது. உக்ரைன் மீது ரஷ்யா கடந்த 2022ம் ஆண்டு பிப்வரி மாதம் போரை தொடங்கியது. இந்த போர் இன்னும் முடிவுக்கு வரவில்லை.

Russia

உக்ரைன் மீது ரஷ்யாவும், ரஷ்யா மீது உக்ரைனும் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றன. இந்த போரின் தொடக்கத்தில் ரஷ்யா, உக்ரைன் அதிபர் விளாடிமிர் புதினை சிறைப்பிடித்து கொல்ல முயன்றது. ஆனால் அந்த திட்டம் கைக்கொடுக்கவில்லை.

அதன்பிறகு உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி மற்றும் உயர் ராணுவ அதிகாரிகளை கொல்லும் திட்டத்தை ரஷ்ய ராணுவம் கைவிட்டது. அதோடு அவர்களை கொல்வதற்கு ரஷ்ய பாதுகாப்பு படைகளுக்கு அதிபர் புதின் தடை போட்டதாக கூறப்படுகிறது. இதனால் ஜெலன்ஸ்கி மற்றும் ராணுவ அதிகாரிகளை கொல்வதை கைவிட்டு உக்ரைனின் நிலப்பகுதியை கைப்பற்றுவதை மட்டுமே ரஷ்யா குறியாக வைத்து செயல்பட்டு வந்தது.

இந்நிலையில் தான் தற்போது திடீரென்று உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி மற்றும் ராணுவ அதிகாரிகளை கொல்ல விதிக்கப்பட்ட தடையை புதின் நீக்கி உள்ளதாக கூறப்படுகிறது. ரஷ்யாவில் அந்த நாட்டின் பாதுகாப்புகவுனசில் கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் அதிபர் புதின் தலைமை வகித்தார். அப்போது தான் விளாடிமிர் ஜெலன்ஸ்கி மற்றும் உக்ரைன் ராணுவ அதிகாரிகளை கொல்ல விதிக்கப்பட்ட தடையை புதின் நீக்கி உள்ளதாக கூறப்படுகிறது.

இதன்மூலம் உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி, ராணுவ அதிகாரிகளை இனி ராணுவம் குறிவைத்து கொல்ல முயற்சிக்க வாய்ப்புள்ளது. இதனை ரஷ்யா ஆதரவு ஊடகங்கள் செய்தியாக வெளியிட்டுள்ளன. அதில் புதினின் இந்த திடீர் உத்தரவின் பின்னணியில் முக்கிய விஷயம் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதாவது ரஷ்யா மீது உக்ரைன் பதிலடி தாக்குதல் நடத்தி வருகிறது. குறிப்பாக சமீபத்தில் தாக்குதல் அதிகரிக்கப்பட்டது. அப்போது உக்ரைன் பால்டிக் கடல் பகுதியில் ரஷ்யாவின் முக்கிய கச்சா எண்ணெய் ஏற்றுமதி மையம் மற்றும் விளாடிமிர் புதினின் சொந்த ஊரான செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில் உள்ள முக்கிய துறைமுகமான உஸ்ட்- லுகா மீது தொடர்ந்து உக்ரைன் தாக்குதல் நடத்தி வருகிறது. 10வது முறையாக உஸ்ட் - லுகா துறைமுகம் மீது தாக்கதல தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

ரஷ்யாவை எடுத்து கொண்டால் உஸ்ட் - லுகா துறைமுகம் மிகவும் முக்கியம். ரஷ்யா மீது பல நாடுகள் தற்போது பொருளாதார தடைகளை விதித்துள்ளன. இந்த சமயத்தில் உஸ்ட் - லுகா துறைமுகத்தில் இருந்து தான் ரஷயா கச்சா எண்ணெய்களை ஆசிய நாடுகளுக்கு விற்பனை செய்து பணம் சம்பாதிக்கிறது. ஆனால் உக்ரைன் அதனை டார்க்கெட் செய்து ரஷ்யாவை முடக்க நினைக்கிறது. இதனால் டென்ஷனாகி உள்ள விளாடிமிர் புதின், உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி மற்றும் அந்த நாட்டின் ராணுவ அதிகாரிகளை கொன்று போரை விரைவில் முடிக்க திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+