4300 ரஷ்ய வீரர்கள் பலி.. பெரிய நகரங்கள் எங்கள் கண்ட்ரோலில்.. உக்ரைன் ராணுவ அமைச்சர் பரபர தகவல்

Subscribe to Oneindia Tamil

கீவ்: உக்ரைன் நாட்டின் பதில் தாக்குதலில் ரஷ்யாவின் 4,300 ராணுவ வீரர்கள் பலியாகி உள்ளதாக அந்நாட்டு ராணுவ அமைச்சர் கூறியுள்ளார்.

உக்ரைன், ரஷ்யா இடையே இருந்த மோதல் போராக உருவெடுத்துள்ளது. உக்ரைன் மீது ரஷ்ய ராணுவ நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. ரஷ்ய அதிபர் விலாடிமிர் புதின் உத்தரவின் அடிப்படையில் பிப்ரவரி 24 முதல் உக்ரைன் மீதான போர் நடவடிக்கை தொடர்ந்துள்ளது.

உக்ரைன் மீது ரஷ்யா குண்டுமழை பொழிந்து வருகிறது. அவ்வபோது ஏவுகணைகளும் உக்ரைன் நாட்டை பதம்பார்க்கிறது. ரஷ்யாவின் பீரங்கி வண்டிகள் உக்ரைனின் நாலாபுறமும் உருண்டோடி தலைநகர் கிவ் நோக்கி செல்கிறது.

விமானங்கள் மீது சூடு

விமானங்கள் மீது சூடு

ரஷ்யாவிடம் இருந்து உக்ரைனை காப்பாற்ற அந்த நாட்டு ராணுவ வீரர்கள், பொதுமக்கள் தீவிரமாக போராடி வருகின்றனர். உக்ரைன் ராணுவமும் வலுவான முறையில் ரஷ்யா மீது பதில் தாக்குதல் நடத்துகிறது. ரஷ்ய ராணுவத்தின் பீரங்கி வண்டிகள், ஹெலிகாப்டர்கள், விமானங்களை உக்ரைன் ராணுவம் சுட்டு வீழ்த்துகிறது. இந்த போரில் ரஷ்ய வீரர்கள் பலியாகும் நிலையில் உக்ரைனில் ராணுவ வீரர்களும் அப்பாவி மக்களும் உயிரிழந்து வருகின்றனர்.

 4300 வீரர்கள் பலி

4300 வீரர்கள் பலி

தற்போது இதனால் இருநாடுகளுக்கு இடையேயான போர் தீவிரமடைந்துள்ளது. இந்நிலையில் உக்ரைன் பாதுகாப்புக்காக நடத்தப்பட்ட பதில் தாக்குதலில் இதுவரை 4300 ரஷ்ய ராணுவ வீரர்கள் பலியாகி உள்ளனர். இதுவரை 146 பீரங்கிகள், 27 விமானங்கள், 26 ஹெலிகாப்டர்கள் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளதாக உக்ரைன் ராணுவ அமைச்சர் ஹன்னா மலையார் தனது பேஸ்புக் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

உக்ரைனில் எவ்வளவு

உக்ரைனில் எவ்வளவு

முன்னதாக நேற்று உக்ரைன் சுகாதார அமைச்சர் விக்டர் லியாஷ்கோ தனது பேஸ்புக் பக்கத்தில், ‛‛போரில் உக்ரைனை சேர்ந்த 3 குழந்தைகள் உள்பட 198 பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் 33 குழந்தைகள் உள்பட 1,115 பேர் காயமடைந்துள்ளனர். இது துரதிர்ஷ்டவசமானது'' என கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

விமானங்களுக்கு தடை

விமானங்களுக்கு தடை

ரஷ்யாவின் இந்த போர் நடவடிக்கைக்கு எதிராக அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் பொருளாதார தடைகள் விதித்துள்ளன. சொத்துகள் முடக்கப்பட்டு வருகின்றன. இதற்கு அடுத்தபடியாக ரஷ்ய விமானங்களுக்கு தடை விதிப்பதை உலக நாடுகள் கையில் எடுத்துள்ளன. அந்த வகையில் இன்று பெல்ஜியம், பின்லாந்து நாடுகள் ரஷ்யாவின் விமானங்களுக்கு தடை விதித்தது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+