உக்ரைன் அதிபரை கொல்ல "ஸ்கெட்ச்"! புடின் அனுப்பிய கொடூர "Wagner Group".. தோண்ட தோண்ட வெளியாகும் பூதம்
மாஸ்கோ: உக்ரைன் அதிபர் செலன்ஸ்கியை கொலை செய்ய Wagner Group என்று தனியார் ஆர்மியை ரஷ்யா களமிறக்கி உள்ளதாக மேற்கு உலக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
உக்ரைன் அதிபர் செலன்ஸ்கி உயிருக்கு ஆபத்து இருப்பதாக அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது. உக்ரைனை ராணுவ ரீதியாக பிடிப்பதை விட அந்நாட்டு அதிபரை கொலை செய்துவிட்டு, ஆட்சியை கலைத்து, அதன்பின் பிடிக்கும் முயற்சியில் ரஷ்ய அதிபர் புடின் இருப்பதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில்தான் உக்ரைன் அதிபரும் தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாகவும்.. ரஷ்யாவின் முதல் ஸ்கெட்ச் நான்தான்.. இரண்டாவது ஸ்கெட்ச் என் குடும்பம் என்று குறிப்பிட்டு இருக்கிறார். அவரின் இந்த பேச்சுக்கு பின்புதான் வேக்னர் குரூப் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

Wagner Group
Wagner Group என்ற குழு உக்ரைனில் கடந்த சில நாட்களாக அதிக அளவில் ஊடுருவி உள்ளதாக அமெரிக்க உளவுப்படை தெரிவித்துள்ளது. ரஷ்யாவின் உளவுத்துறையான சிஐஏ உதவியுடன் Wagner Group உக்ரைனில் ஊடுருவி உள்ளதாக அந்த குழு தெரிவித்து உள்ளது. ரஷ்யாவின் உதவியுடன் உக்ரைன் அரசை கவிழ்க்கவும், உக்ரைன் அதிபர் செலன்ஸ்கியை கொலை செய்யவும் இந்த குழுவை அனுப்பி உள்ளதாக நேட்டோ படைகளும் குற்றஞ்சாட்டி உள்ளது. உக்ரைன் அதிபருக்கு ஸ்கெட்ச் போட்டு இருக்கும் இந்த Wagner Group பற்றி தோண்ட தோண்ட பூதங்களாக வெளியே வந்து கொண்டு இருக்கின்றன.. யார் அந்த குரூப் என்று பார்க்கலாம்!

ஹாலிவுட்
equalizer, taken, john wick போன்ற படங்களை பார்த்தவர்களுக்கு பிரைவேட் ஆர்மி அல்லது அஸாஸின் கும்பல்கள் பற்றி தெரிந்து இருக்கும். அதாவது இவர்கள் தனியார் ராணுவம், அல்லது காசுக்கு கொலை செய்யும் எலைட் கொலைகார கும்பல். உலகில் பெரிய அரசுகள், பெரிய நபர்கள் தங்களுக்கு வேண்டாதவர்களை தீர்த்து கட்ட பயன்படுத்தும் கும்பல்தான் இவர்கள். நம்ம ஊரில் இருப்பது போல இவர்கள் ஒன்றும் கத்தியால் ராத்திரியில் பைக்கில் செல்லும் போது வெட்டும் கும்பல் கிடையாது. இவர்களில் பலர் முன்னாள் ஆர்மி, பலர் முன்னாள் தீவிரவாத கும்பல்.

யார் இவர்கள்
உலகம் முழுக்க இப்படி பல எலைட் தனியார் ஆர்மி உள்ளது. ஸ்கெட்ச் போட்டு வெளி உலகிற்கே தெரியாமல் கொல்லும் திறன் கொண்டவர்கள் இவர்கள். அப்படி ஒரு கும்பல்தான் இந்த Wagner Group. 2014ல் உருவாக்கப்பட்டது இந்த கும்பல். ரஷ்ய அரசுக்கு மிகவும் நெருக்கமாக பார்க்கப்படும் பிரைவேட் ஆர்மி. ரஷ்யா அரசால் நேரடியாக செய்ய முடியாததை இந்த குழு மறைமுகமாக செய்யும். கொஞ்சம் மூச்சை பிடித்துக்கொள்ளுங்கள்.. 2017 கணக்குப்படி இந்த குழுவில் ஒன்றல்ல.. இரண்டல்ல.. மொத்தம் 6000 கொலைகாரர்கள் இருக்கிறார்கள். கேட்கவே அதிர்ச்சியாக இருக்கிறதா!

எப்படி உருவாக்கப்பட்டது
ஐரோப்பாவில் தடை செய்யப்பட்டது இந்த அமைப்பு. இன்னும் பல சின்ன சின்ன நாடுகளில் இந்த அமைப்பு தடை செய்யப்பட்டு உள்ளது. ரஷ்யா அரசு மூலம் பல illegal கொலைகளுக்கு இந்த குழுதான் அணுகப்பட்டு வருகிறது. முக்கியமாக லிபியா, சிரியா, மாலி, மொசாம்பி, சூடான், ஆப்ரிக்கா போன்ற போர்கள் நடக்க கூடிய நாடுகளில் எல்லாம் இந்த குழு ரஷ்யா மூலம் பயன்படுத்தப்பட்டு வருகிறது. தங்களுக்கு எதிராக இருக்கும் குழுக்களை போட்டுத்தாக்க, அரசியல் தலைவர்களை கொலை செய்ய இந்த Wagner Group குழு பயன்படுத்தப்பட்டு வருகிறது.

சிரியா
2015 -2018 வரை சிரியாவில் ரஷ்யா மற்றும் அந்நாட்டு அதிபர் பாஷர் அல் ஆசாத் குழுவிற்கு உறுதுணையாக ராணுவ ஆபரேஷனை இவர்கள் செய்து வருகின்றனர். இவர்களின் குழுவில் இருக்கும் 6000 பேரில் எல்லோருமே ஒன்று ராணுவத்தில் இருந்தவர்கள் அல்லது உளவுப்படையில் இருந்தவர்கள். இந்த குழுவை உருவாக்கியது டிமிர்ட்டி உட்கின் என்பர். இவர் ரஷ்யாயாவின் ராணுவத்தில் இருந்தவர். அதன்பின் அந்நாட்டு உளவுப்படையில் இருந்தவர்.

2014 கிரிமியா
2014ல் கிரிமியாவை உக்ரைனில் இருந்து பிரிக்க இவரின் செயல்கள் முக்கிய காரணம் என்கிறார்கள். அதேபோல் உக்ரைனில் அரசுக்கு எதிராக இருக்கும் புரட்சி படையை பின்னிருந்து இயக்குவது, ஆயுதம் வழங்குவதும் Wagner Groupதான் என்கிறார்கள். ரஷ்யா ஒரு காலத்தில் நாசிக்கு எதிராக இருந்தாலும் இப்போது புடினை நாசி ஆதரவாளராக மேற்கு உலகம் சித்தரிக்கிறது. அப்படி இருக்க Wagner Group குழுவில் இருக்கும் எல்லோரும் நாசி ஆட்சியை உலகம் முழுக்க உருவாக்க வேண்டும் என்று போராடும் அமைப்பு என்கிறார்கள்.

அமெரிக்கா
அமெரிக்காவும் இது போன்ற தனியார் ராணுவத்தை பயன்படுத்தி வந்தது குறிப்பிடத்தக்கது. உதாரணமாக அமெரிக்கா 2007 ஈராக்கில் பிளாக்வாட்டர் என்ற தனியார் ராணுவத்தை பயன்படுத்தியது. ஆனால் இவர்கள் ஒப்பந்தத்தை மீறி அங்கு பொதுமக்களையே சுட்டுக்கொண்டனர். அதேபோல் Wagner Group அமைப்பும் பல இடங்களில் பொது மக்களை கொன்றுள்ளது. ஐரோப்பாவில் இவர்கள் நடத்திய ஆபரேஷன் காரணமாக பலர் கொலை செய்யப்பட்டனர். இவர்களின் கிளை அமைப்பு மூன்றும் இங்கே தொடங்கப்பட்டது.
Recommended Video

தடை
இதையடுத்து இந்த அமைப்பை ஐரோப்பா தடை செய்தது. பொதுவாக போர் நடக்கும் இடங்களுக்கு இவர்கள் அனுப்பப்படுவார்கள். இந்த அமைப்பை உருவாக்கிய உட்கின் 1999 -2009 வரை ரஷ்யாவின் பல்வேறு ராணுவ பிரிவுகளில், உளவு பிரிவுகளில் வேலை பார்த்து இருக்கிறார். ஜெர்மனி நாசி வீரர்கள் அணிந்து இருக்கும் குறியீட்டை இவரும் டேட்டூவாக அணிந்து இருந்த புகைப்படங்கள் கூட இணையத்தில் வெளியானது. 2016ல் இவரின் "சேவைக்கு" மதிப்பாக அந்நாட்டு ராணுவத்தால் விருது பெற்றது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications