Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அடேங்கப்பா! பிரமாண்ட பேலஸ் டூ தங்க கழிவறை வரை! ரஷ்ய அதிபர் புதினின் சொத்து ரூ.15 லட்சம் கோடியா?ஆஹா

Subscribe to Oneindia Tamil

மாஸ்கோ: உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து ஒன்றரை ஆண்டை தொட உள்ளது. இந்நிலையில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினின் சொகுசு வாழ்க்கை பற்றிய பல்வேறு தகவல்கள் வெளியாகி உள்ளது. அதன்படி பார்த்தால் சவூதி இளவரசரையே விஞ்சும் அளவுக்கு அரண்மனை, தங்க கழிவறையை விளாடிமிர் புதின் பயன்படுத்தும் தகவல் தான் அனைவரையும் அசர வைத்துள்ளது.

உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து வருகிறது. கடந்த ஆண்டு பிப்ரவரி 24ல் தொடங்கிய போர் நடவடிக்கை இன்னும் முடிவடையவில்லை. உக்ரைனை எளிதாக வீழ்த்தி விடலாம் என்ற ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினின் திட்டம் இன்னும் கைக்கூடவில்லை. இதனால் ஓராண்டு 4 மாதங்கள் கடந்தும் கூட தொடர்ந்து உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து வருகிறது.

இதற்கிடையே தான் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் தொடர்பாக புதிய தகவல் வெளியாகி உள்ளது. அதாவது அவர் வாழும் ஆடம்பர சொகுசு பங்களா முதல் அவர் தனது கையில் அணியும் வாட்ச் வரையிலான பல்வேறு பொருட்களின் மதிப்பு பற்றிய முக்கிய தகவல் வெளியாகி உள்ளது. ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் ஆடம்பர வாழ்க்கையில் அதீத நாட்டம் கொண்டவராக உள்ளார். சொல்லப்போனால் சவூதி இளவரசருக்கே ‛டஃப்' கொடுக்கும் வகையிலான சொகுசு வாழ்க்கையை விளாடிமிர் புதின் வாழ்ந்து வருவதாக கூறப்படுகிறது.

 Russia President Vladimir Putin assest worth is 200 Bilion America dollar? and uses gold toilet

இதற்கிடையே தான் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் தொடர்பாக புதிய தகவல் வெளியாகி உள்ளது. அதாவது அவர் வாழும் ஆடம்பர சொகுசு பங்களா முதல் அவர் தனது கையில் அணியும் வாட்ச் வரையிலான பல்வேறு பொருட்களின் மதிப்பு பற்றிய முக்கிய தகவல் வெளியாகி உள்ளது. ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் ஆடம்பர வாழ்க்கையில் அதீத நாட்டம் கொண்டவராக உள்ளார். சொல்லப்போனால் சவூதி இளவரருக்கே ‛டப்' கொடுக்கும் வகையிலான சொகுசு வாழ்க்கையை விளாடிமிர் புதின் வாழ்ந்து வருவதாக கூறப்படுகிறது.

உளவு அதிகாரி டூ அதிபர்: ரஷ்யாவின் உளவு அமைப்பில் அதிகாரியாக பணியாற்றிய புதின் அரசியலில் நுழைந்து பிரதமர் பதவியை எட்டிப்பிடித்தார். அதன்பிறகு ரஷ்யாவின் அதிபராக உயர்ந்த புதின் தற்போது உலகளவில் மிகப்பெரிய அரசியல் தலைவராக உள்ளார். 1999-2000ம் ஆண்டு வரை பொறுப்பு அதிபராக செயல்பட்ட விளாடிமிர் புதின் 2000ல் முதல் முதலாக அதிபரானார். அதன்பிறகு தொடர்ந்து தற்போது வரை 4வது முறையாக அதிபராக உள்ளார். இவரது பதவிக்காலம் அடுத்த ஆண்டு முடிகிறது.

வாகனங்கள் என்னென்ன?: இந்நிலையில் தான் விளாடிமிர் புதின் சொத்து மதிப்பு உள்ளிட்ட தகவல்கள் வெளியாகி உள்ளன. அதன்படி ரஷ்யாவின் விளாடிமிர் புதின் 20 சொகுசு பங்களாக்களை வைத்துள்ளாராம். மேலும் போக்குவரத்துக்காக 43 விமானங்கள், 15 ஹெலிகாப்டர்கள், 700 கார்கள், இத்தாலியில் சொகுசு கப்பல் வைத்துள்ளாக கூறப்படுகிறது. குறிப்பாக புதின் அரண்மனை போன்ற இல்லத்துக்கு ‛புதின் பேலஸ்' என பெயரிட்டுள்ளாராம். இந்த சொகுசு பங்களாவில் இருந்து பார்த்தால் கருங்கடல் பகுதி தெரியும். இந்த சொகுசு அரண்மனை மொத்தம் 74 ஹேக்டர் (180 ஏக்கர்)பரப்பளவில் பரந்து விரிந்துள்ளது.

சுரங்கபாதை: இதில் அரண்மனை மட்டும் 17,700 சதுரமீட்டர் (1,91,000 சதுரஅடி) பரப்பளவில் மிகவும் பிரமாண்டமாக அமைந்துள்ளது. இந்த அரண்மனையில் அனைத்து விதமான சொகுசு வசதிகளும் உள்ளன. சர்ச், இயற்கையையோடு ஒன்றி அமைக்கப்பட்ட வீடு, நீச்சல் குளம், ஸ்பா, பாடல்கள் கேட்கும் அறை, தியேட்டர், விருந்தினர் அறை உள்ளிட்டவை உள்ளன. அதோடு எதிரிகளில் இருந்து தப்பும் வகையில் 80 மீட்டர் (260 அடி) சுரங்கபாதை உள்ளதாக கூறப்படுகிறது. இதனை பார்ச்சூன் பத்திரிகை வெளியிட்ட செய்தியில் கூறியுள்ளது. இதனை பல பத்திரிகைகள் செய்தியாக வெளியிட்டுள்ளன. மேலும் புதினின் எதிரியாக கருதப்படும் பலரும் இதனை பொதுவெளியில் கூறியுள்ளனர். ஆனால் புதின் மட்டும் பதில் சொல்லவேயில்லை.

தங்க கழிவறை: இதுதவிர விளாடிமிர் புதினின் ஆடம்பர வாழ்க்கை தொடர்பாகவும், அவரது சொத்துகள் குறித்தும் கடந்த 2012ல் ஒரு
தகவல் வெளியானது. அந்த தகவலின்படி பார்த்தால் விளாடிமிர் புதினிடம் 42 ஜெட் விமானங்கள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் புதினின் பேவரைட் விமானம் என்பது ‛நியோ கிளாசிக்கல்' ஸ்டைல் விமானம் தானாம். இதனை புதின் செல்லமாக ‛பறக்கும் கிரெம்ளின்' என அழைப்பாராம். நியூஸ்வீக் செய்தி நிறுவனத்தின்படி இந்த விமானத்தின் மதிப்பு ரூ.3 ஆயிரம் கோடி என கூறப்படுகிறது. அதோடு இந்த விமானம் குறித்து வெளியான இன்னொரு தகவல் தான் அனைவரையும் வியக்க வைத்தது. அதாவது ‛நியோ கிளாசிக்கல்' விமானத்தில் தங்க முலாம் பூசப்பட்ட கழிவறைகள் உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இந்த விமானம் மணிக்கு 600 மைல் வேகத்தில் மின்னல்போல் பறக்க கூடியது. விமானத்தில் ஜிம், பார், படுக்கையறை வசதிகளும் உள்ளன.

 Russia President Vladimir Putin assest worth is 200 Bilion America dollar? and uses gold toilet

சம்பளம் எவ்வளவு?: இதுதுவிர பார்ச்சூன் பத்திரிகை செய்தியின்படி விளாடிமிர் புதின் ஆண்டுக்கு 1 லட்சத்து 40 ஆயிரம் அமெரிக்க டாலர்களை சம்பளமாக பெறுகிறார். இருப்பினும் அவர் தனது அதிகாரப்பூர்வ சொத்துகளாக 800 சதுரஅடி அடுக்குமாடி குடியிருப்பு, மூன்று கார், ஒரு டிரக் உள்ளிட்டவற்றை மட்டுமே கூறியுள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. அதேவேளையில் 10 ஆண்டுகளுக்கு முன்பு ஏபிசி நியூஸ் சார்பில் ரஷ்ய எதிர்ப்பு குழுவான சாலிடாரிட்டி தரப்பில் வெளியிடப்பட்ட வீடியோவில் புதின் ஒரு கைக்கடிகார பிரியர் என்பதும், அவரிடம் 7 லட்சம் அமெரிக்க டாலர் மதிப்பிலான கைக்கடிகாரங்கள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. அதன்படி பார்த்தால் கைக்கடிகாரத்தின் மொத்த மதிப்பு என்பது புதின் வாங்கும் சம்பளத்தை விட 6 மடங்கு அதிகமாகும். குறிப்பாக புதின் ஏ லாங்கே & சோஹ்னே 1815 தயாரித்த அப்/டவுன் எனும் விலையுயர்ந்த கைக்கடிகாரத்தை அணிவதில் ஆர்வமாக இருப்பாராம். இந்த கைக்கடிகாரம் முதலையின் தோளில் பிளாட்டின கற்கள் பதிக்கப்பட்டு தயாரிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

ரூ.15 லட்சம் கோடி?: இதனால் தான் விளாடிமிர் புதின் உலகின் மிகப்பெரிய பணக்காரர்களில் ஒருவராக கருதப்படுகிறார். புதினின் தற்போதைய சொத்து மதிப்பு 200 பில்லியன் அமெரிக்க டாலர்(இந்திய மதிப்பில் சுமார் ரூ.15 லட்சம் கோடி) மதிப்புடையது என சொத்து மேலாண் நிறுவனமான ஹெர்மிடேஜ் கேபிடலின் தலைமை செயல் அதிகாரி பில் பிரவுடன் கூறியிருந்தார். இந்த தகவலை அவர் அமெரிக்கா செனட்டின் நீதித்துறை குழுவின் முன் கூறியிருந்தார். இவர் ரஷ்யாவில் முக்கிய முதலீட்டாளராக நீண்டகாலம் இருந்தார். இதனால் அவரது தகவல் அனைவரையின் புருவத்தையும் உயர்த்தியது. மேலும் தற்போது புதின் சொத்து மதிப்பு முதல் 210 பில்லியன் அமெரிக்க டாலர் வரை உயர்ந்து இருக்கும் என சொல்லப்படுகிறது. இந்நிலையில் தான் விளாடிமிர் புதினை அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றன. மேலும் அவரது சொத்துகள் குறித்த விபரங்களையும் உளவு அமைப்புகள் மூலம் சேகரித்து வருகின்றன.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+