இதுதான் புதின்! அய்யோ பார்க்க முடியலையே! கதறி அழுத 8 வயது சிறுமிக்கு செம சர்ப்ரைஸ்! சிலிர்க்குதே
மாஸ்கோ: ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினை சுற்றுப்பயணத்தில் அவரை பார்க்க முடியாத வருத்தத்தில் கதறி அழுத 8 வயது சிறுமியின் வீடியோ இணையதளத்தில் வேகமாக பரவியது. இந்நிலையில் சிறுமிக்கு அதிபர் விளாடிமிர் புதின்‛சர்ப்ரைஸ்' கொடுத்து சிலிர்க்க வைத்த வீடியோ இணையதளங்களில் வெளியாகி வேகமாக பரவி வருகிறது.
உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ளது. இந்த போர் நடவடிக்கை தொடங்கி 16 மாதங்கள் நிறைவடைந்துள்ளது. இன்னும் போர் முடிவுக்கு வரவில்லை. எளிதில் உக்ரைனை கைப்பற்றிவிடலாம் என ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் நினைத்தார். ஆனால் அது சாத்தியமாகவில்லை.
Putin met with a girl from Derbent who was unable to see him during his trip to Dagestan
— 🇷🇺 Эсса Али 🆉 Essa Ali 🇦🇪 (@ESSA_A1I) July 4, 2023
Last week, a video of 8 years old Raisat Akipova crying appeared on social media , and today president Putin gave her and her family a tour in the Kremlin
🐻 🇷🇺 🐻 pic.twitter.com/5ruUFojRbs
இதற்கிடையே தான் போர் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள் ரஷ்யா மீது பொருளாதார தடைகளை விதித்துள்ளன. இது ரஷ்யாவுக்கு சிக்கலை ஏற்படுத்தி உள்ளது. இருப்பினும் ரஷ்யா சமாளித்து வருகிறது.
இந்நிலையில் தான் யாரும் எதிர்பாராத வகையின் ரஷ்யாவின் தனியார் ஆர்மி என அழைக்கப்படும் கூலிப்படை குழுவான வாக்னர் கலகத்தை தொடங்கின. ரஷ்யாவின் ராணுவத்துக்கு எதிரான அந்த படை களமிறங்கியது. இதனால் விளாடிமிர் புதின் பெரும் சிக்கலை எதிர்கொண்டார். இருப்பினும் அரசு மற்றும் வாக்னர் குழு இடையே நடந்த பேச்சுவார்த்தையில் சுமூக முடிவு எட்டப்பட்டது. இதையடுத்து வாக்னர் குழுவும் தனது புரட்சியை கைவிட்டது.
இதனால் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் நிம்மதியடைந்துள்ளது. இதன் தொடர்ச்சியாக தான் விளாடிமிர் புதின் ரஷ்யாவின் கீழ் உள்ள தாகெஸ்தான் குடியரசுக்கு சில நாட்களுக்கு முன்பு சுற்றுப்பயணம் செய்தார். அப்போது அவரை பார்க்க டெர்பென்ட்டைச் சேர்ந்த 8 வயது சிறுமி ரைசாட் அகிபோவா காத்திருந்தார். ஆனால் அவரால் புதினை பார்க்க முடியவில்லை.
இதையடுத்து அந்த சிறுமி கதறி அழுதார். அதிபர் விளாடிமிர் புதினை தன்னால் பார்க்க முடியாமல் போனதை நினைத்து அவர் கண்ணீர் சிந்தினார். இதுதொடர்பான வீடியோ இணையதளங்களில் வேகமாக பரவியது. இதையடுத்து அந்த சிறுமியை பார்க்க விளாடிமிர் புதின் முடிவு செய்தார். இதையடுத்து நேற்று ரஷ்யா தலைநகர் மாஸ்கோவிற்கு 8 வயது சிறுமி ரைசாட் அகிபோவா வந்தார்.

அதிபர் மாளிகையில் விளாடிமிர் புதினை பார்த்தவுன் சிறுமி சிரித்த முகத்துடன் வேகமாக ஓடிச்சென்று அவரை கட்டியணைத்தார். இதையடுத்து புதின், சிறுமி மற்றும் அவரது பெற்றோருக்கு பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். இதையடுத்து சிறுமியிடம் புதின் பேசிக்கொண்டிருந்தார். அதன்பிறகு திடீரென நிதி அமைச்சர் அன்டன் சிலுவானோவுக்கு புதின் போன் போட்டு பேசினார்.
அப்போது, ரைசாட் அகிபோவா வசிக்கும் தாகெஸ்தான் குடியிருப்புக்கான திட்ட மானியம் வழங்கும்படி கூறினார். மேலும் சிறுமியையும் நிதி அமைசசர் அன்டர் சிலுவோனாவிடம் பேச வைத்தார். அதோடு கூடுதல் நிதி கேட்கவும் கோரினார். சிறுமியும் மழலை மொழியில் கேட்டார். இதையடுத்து கூடுதல் நிதியுதவி வழங்கவும் அவர் ஒப்புக்கொண்டார். இதன்மூலம் தாகெஸ்தான் குடியரசுக்கு 5 பில்லியன் ரூபிள் (ரஷ்யா பணம்) வரை கிடைத்துள்ளது.
இந்நிலையில் தான் விளாடிமிர் புதினை பார்க்க முடியாத வருத்தத்தில் 8 வயது சிறுமி கதறி அழுதது, அதன்பிறகு சிறுமி விளாடிமிர் புதினை சந்தித்தது, புதின் அவர்களை வரவேற்றது, சிறுமி, புதினை கட்டியணைத்து அன்பை வெளிப்படுத்தியது, இருவரும் நிதி அமைச்சரிடம் உரையாடியது தொடர்பான வீடியோக்கள் இணையதளங்களில் வெளியாகி வேகமாக பரவி வருகிறது.












Click it and Unblock the Notifications