அமைதி பேச்சுவார்த்தை.. இடம், தேதியை முடிவு செய்து அனுப்பிய ரஷ்யா! உக்ரைன் பதிலுக்கு வெயிட்டிங்
மாஸ்கோ: ரஷ்யா-உக்ரைன் இடையே போர் தீவிரமடைந்து வருகிறது. போரை நிறுத்த வேண்டும் என்று டிரம்ப் உட்பட பலரும் வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில், போர் நிறுத்த பேச்சுவார்த்தைக்கான தேதியும், இடமும் ரஷ்யாவால் நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது. இது தொடர்பான தகவல் உக்ரைனுக்கு அனுப்பி வைக்கப்பட்டிருக்கிறது.
இந்த தகவலை உக்ரைனுடனான அமைதிப் பேச்சுவார்த்தைகளுக்கான ரஷ்ய தூதுக்குழுவின் தலைவர் விளாடிமிர் மெடின்ஸ்கி உறுதி செய்திருக்கிறார்.

கடைசியாக இரு தரப்பினரும் பங்கேற்ற அமைதி பேச்சுவார்த்தை கூட்டம் துருக்கியில் நடைபெற்றது. இதில் போர் நிறுத்தம் குறித்து முடிவு எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அப்படியான எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. உக்ரைன் அதிகாரிகள் தங்கள் நாடு பாதிக்கப்பட்டதை வெளிப்படுத்த ராணுவ உடையில் வந்திருந்தனர். அதேபோல ரஷ்யா தனது நிலைப்பாட்டில் கடைசி வரை இறங்கி வராமல் நிலையாக இருந்தது.
மட்டுமல்லாது இந்த பேச்சுவார்த்தையில் ரஷ்ய அதிபர் புதின் பங்கேற்க வேண்டும் என்று உக்ரைன் வலியுறுத்தியிருந்தது. ஆனால் புதின் பங்கேற்கவில்லை. எனவே உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியும் பங்கேற்கவில்லை. வெறும் 1 மணி நேரம் 40 நிமிடம் என கூட்டம் நடந்தது. இதில் பெரிதாக எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. ஆனால் 1000 கைதிகளை பரிமாறிக்கொள்வது என்று முடிவெடுக்கப்பட்டது. அதன்படி கைதிகள் பரிமாற்றமும் நடந்தது.
அதே நேரம் போர் தொடங்கியதிலிருந்து நேரடி பேச்சுவார்த்தை நடைபெறாமல் இருந்தது. ஆனால் சமீபத்தில் இத நடந்திருக்கிறது. எனவே அடுத்தக்கட்டமாக பேச்சுவார்த்தை தீவிரமடைந்து போர் நிறுத்தம் சாத்தியமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ரஷ்யாவை பொறுத்தவரை உக்ரைனின் கெர்சன், ஜபோரிஜியா, டொனெட்ஸ்க், லுஹான்ஸ்க் ஆகிய பகுதிகளை கடந்த 2022ம் ஆண்டு ஆக்கிரமித்தது. அதேபோல இப்போதும் சில பகுதிகளை ஆக்கிரமித்திருக்கிறது. எனவே, இந்த பகுதியை ரஷ்யாவின் பகுதி என அறிவிக்க வேண்டும் என்றும், எதிர்காலத்தில் நேட்டோவில உக்ரைன் இணைய கூடாது என்றும் வலியுறுத்தி இருக்கிறது. மற்றும் டி-மிலிட்டரைசேஷன், டி-நாசிஃபிகேஷன் நடவடிக்கையை உக்ரைன் மேற்கொள்ள வேண்டும் என்றும் என்றும் வலியுறுத்தியுள்ளது.
ஆனால் உக்ரைன் இதற்கு சம்மதிக்கவில்லை. மாறாக, போர் குற்றத்திற்காக ரஷ்ய அதிகாரிகள் விசாரிக்கப்பட வேண்டும் என்றும், எதிர்காலத்தில் எந்த ஆக்கிரமிப்பும் நடக்காது என உத்தரவாதம் கொடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக












Click it and Unblock the Notifications