சிரியா போர் காட்சிகளுக்கு பதில் வீடியோ கேமை வெளியிட்ட ரஷ்யா.. நாடகம் அம்பலம்
சிரியாவில் நடந்து வரும் ராணுவ தாக்குதல் குறித்து ரஷ்யா வீடியோ வெளியிட்டு இருக்கிறது.
Recommended Video

டமாஸ்கஸ்: சிரியாவில் நடந்து வரும் ராணுவ தாக்குதல் குறித்து ரஷ்யா வீடியோ வெளியிட்டு இருக்கிறது. ஆனால் அது வெறும் வீடியோ கேம்தான் என்று கண்டுபிடிக்கப்பட்டு இருக்கிறது.
சிரியாவில் அதிபர் பஷர் அல் ஆசாத்தின் ஆட்சிக்கு எதிராக கிளர்ச்சியாளர் படை போராடி வருகிறது. சிரியாவில் அரசுக்கும், கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே சண்டை நடைபெற்று வருகிறது.
இந்த போர் தற்போது உச்ச நிலையை அடைந்து இருக்கிறது. சிரியாவில் நடந்து வரும் ராணுவ தாக்குதல் காரணமாக கடந்த 9 நாட்களில் மட்டும் இதுவரை 700 பேர் மரணம் அடைந்து இருக்கிறார்கள்.

ரஷ்யா தலையீடு
இந்த போரில் சிரியாவின் அரசு படைக்கு ரஷ்யா உதவி வருகிறது. இந்த போரை மிகவும் உக்கிரமான நிலைக்கு கொண்டு சென்றதே ரஷ்யாதான் என்று கூட சொல்லலாம். அந்த அளவிற்கு வான்படை தாக்குதல் நடத்தி வருகிறது.

விருது வழங்கினார்கள்
இந்த நிலையில் இந்த போரில் மிகவும் சிறப்பாக பங்காற்றி வரும் வீரர்களுக்கு விருது அளிக்கப்பட்டது. அதன்படி அலெக்ஸாண்டர் புரோக்கோரென்கோ என்ற வீரருக்கு ''ஹீரோ ஆஃப் ரஷ்ய பெடரேஷன்'' என்று விருது அளிக்கப்பட்டது. இன்னும் சிலருக்கும் பல விருதுகள் அளிக்கப்பட்டது.

மாட்டிக்கொண்டார்
இதில் அலெக்ஸாண்டர் சிரியா போராளி குழுக்களிடம் மாட்டிக் கொண்டதாக காட்டப்படுகிறது. அப்போது அங்கு ரஷ்ய விமான படை வருகிறது. அதே சமயம் அலெக்ஸாண்டர் சுதாரித்து போராளிகள் மீது தாக்குதல் நடத்துகிறார். பின் விமான படை மூலம் அலெக்ஸாண்டர் காப்பாற்றப்படுகிறார். போராளி குழுக்கள் எவ்வளவு மோசம் என்று இந்த வீடியோவில் கூறப்பட்டு இருக்கிறது.
|
எல்லாம் பொய்
ஆனால் இந்த வீடியோ முழுக்க முழுக்க பொய் ஆகும். இதில் ஒரு பிஎஸ்பி வீடியோ கேம் ஆகும். இதை அவர்கள் போர் வீடியோ என்று கூறி ஒளிபரப்பியது அம்பலம் ஆனது. இது தற்போது ரஷ்ய அரசிற்கு மேலும் அவமானத்தை கொண்டு வந்து இருக்கிறது.
|
புதுசு இல்லை
ஏற்கனவே சிரியா- ஈராக் பார்டரில் நடக்கும் சம்பவங்களில் அமெரிக்க எப்படி ஐஎஸ் அமைப்பிற்கு உதவுகிறது என்று வீடியோ வெளியிட்டு இருந்தார்கள். ஆனால் அதுவும் ஒரு வீடியோ கேம் ஆகும். கடைசியில் அந்த வீடியோ கேமை அவர்கள் டெலிட் செய்து மன்னிப்பு கேட்டது குறிப்பிடத்தக்கது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications