ரஷ்யாவில் அதிகரிக்கும் கொரோனா மரணங்கள்- ஒரே நாளில் 1,160 பேர் பலி- அமெரிக்காவில் சட்டென குறைந்தது!
மாஸ்கோ: ரஷ்யாவில் கொரோனா மரணங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. ரஷ்யாவில் நேற்று மட்டும் ஒரே நாளில் 1,160 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.
உலக நாடுகளில் புதிய உருமாறிய கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருகிறது. உலகின் பல நாடுகளிலும் லாக்டவுன் உள்ளிட்ட கட்டுப்பாடுகள் மீண்டும் விதிக்கப்பட்டு வருகின்றன.

உலகம் முழுவதும் நேற்று மட்டும் 3,83,922 பேருக்கு கொரோனா தொற்று புதியதாக கண்டறியப்பட்டது. உலக நாடுகளில் மொத்தம் 5,973 பேர் நேற்று கொரோனாவால் உயிரிழந்தனர். மேலும் 3,24,414 பேர் கொரோனா சிகிச்சைக்குப் பின் குணமடைந்துள்ளனர்.
உலக நாடுகளில் இங்கிலாந்தில்தான் நேற்று அதிக அளவில் கொரோனா தொற்று பதிவாகி இருந்தது. இங்கிலாந்தில் நேற்று மட்டும் 41,278 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டது. இங்கிலாந்தில் நேற்று 166 பேர் கொரோனாவால் உயிரிழந்தனர்.
இங்கிலாந்தை தொடர்ந்து ரஷ்யாவில் 40,251 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டது தெரியவந்தது. ஆனால் ரஷ்யாவில் உலக நாடுகளிலேயே மிக அதிகமாக 1,160 பேர் கொரோனாவால் நேற்று உயிரிழந்தனர். அமெரிக்காவில் 26,787; உக்ரைனில் 26,198; துருக்கியில் 23,096 பேருக்கு நேற்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
கொரோனா மரணங்கள் பட்டியலில் ரஷ்யாவுக்கு அடுத்ததாக உக்ரைன் உள்ளது. உக்ரைனில் நேற்று மட்டும் 541 பேர் கொரோனாவால் மரணம் அடைந்தனர். கொரோனா மரணங்கள் பட்டியலில் இந்தியா 3-வது இடத்தில் உள்ளது. இந்தியாவில் நேற்று கொரோனாவுக்கு 446 பேர் உயிரிழந்தனர். ஒருநாள் கொரோனா பாதிப்பு பட்டியலில் இந்தியா 7-வது இடத்தில் இருக்கிறது. இந்தியாவில் நேற்று கொரோனா பாதிப்பு 13,000க்கும் கீழே இருந்தது.
உலகம் முழுவதும் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 24,71,36,432. உலக நாடுகளில் கொரோனா மரணங்கள் எண்ணிக்கை 50,10,533. உலக அளவில் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டவர்கள் எண்ணிக்கை 22,38,65,332. மொத்த கொரோனா பாதிப்பில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. அமெரிக்காவில் 4,67,99,970 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 2-வது இடத்தில் உள்ள இந்தியாவில் மொத்தம் 3,42,72,677 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. 3-வது இடத்தில் உள்ள பிரேசிலில் மொத்தம் 2,18,04,094 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது.
-
மீண்டும் வெடிக்கும் போர்.. இரவோடு இரவாக பாய்ந்த ஏவுகணைகள்! அமெரிக்க தளங்களை குறிவைத்து தூக்கிய ஈரான் -
இனி இந்தியாவை தொட முடியாது.. ரஷ்யா அனுப்பிய புதிய எஸ் 400 வான்வெளி பாதுகாப்பு சிஸ்டம்.. செம -
"மோடியை மிரட்டுவது ஆபத்து.." புதின் சொன்ன வார்த்தை.. அப்படியே டிரம்ப் மீதும் பாய்ச்சல் -
கொத்தடிமை முறையை ஒழிக்க இந்தியா தவறிவிட்டதாம்.. கூடுதல் வரிக்கு காரணம் சொல்லும் டிரம்ப்! -
நெதன்யாகுவை திட்டியது உண்மைதான்.. லெபனான் விவகாரத்தில் நடந்தது என்ன? ஓபனாக பேசிய டிரம்ப்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் வாங்கியோருக்கு குட் நியூஸ்! பணம் கட்டலயா? ஏலத்திலிருந்து நகை மீட்க ஈஸி வழி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications