சைபர் வார்.. புடினுக்கு தண்ணீர் காட்டிய ஹேக்கர்ஸ்.. ரஷ்யாவை 48 மணி நேரத்தில் கலங்கடித்த அனானிமஸ்!
மாஸ்கோ: உக்ரைன் போருக்கு எதிராக அனானிமஸ் என்ற ஹேக்கர் குழு சைபர் போரை ரஷ்யா மீது தொடுப்பதாக அறிவித்துள்ளது
Recommended Video
உலகம் முழுக்க இருக்கும் தலை சிறந்த ஹேக்கர்கள், அதிகார அத்துமீறலுக்கு எதிரான கொள்கை கொண்ட டெக்கிகள், போர்களை, மக்கள் மீதான தாக்குதல்களை எதிர்க்கும் கணினி ஜாம்பவான்கள் மூலம் இயக்கப்பட்டு வரும் அமைப்புதான் அனானிமஸ் (Anonymous).
இந்த அமைப்பு ஒருவரால் நிர்வகிக்கப்படவில்லை. அதேபோல் இந்த அமைப்பிற்கு என்று இப்போது தனிப்பட்ட நாடு, தலைவர் எல்லாம் இல்லை. உலகம் முழுக்க இந்த அமைப்பு பறந்து விரிந்து காணப்படுகிறது.

உக்ரைன்
நாங்கள் பலர் என்று பொருள்படும் "we are legion" என்பதுதான் இவர்களின் வாசகம். ஆம் இதில் உலகம் முழுக்க பல ஹேக்கர்கள் இருக்கிறார்கள். இந்த நிலையில்தான் தற்போது ரஷ்யாவில் தொடர்ந்து இவர்கள் பல்வேறு ஹேக்கிங்குகளை செய்து வருகிறார்கள். ரஷ்யாவின் உக்ரைன் போருக்கு எதிராக இந்த குழு சைபர் போரை ரஷ்யா மீது தொடுப்பதாக அறிவித்துள்ளது. இந்த குழுவில் உலகம் முழுக்க இருக்கும் உறுப்பினர்கள் ரஷ்யாவின் பல்வேறு பக்கங்களை ஹேக் செய்து வருகிறார்கள்.

ரஷ்யா
ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சக பக்கம், அந்நாட்டின் அதிகாரபூர்வ செய்தி சேனல் பக்கம், பல்வேறு எண்ணெய் கிணறு நிறுவனங்களின் பக்கம் ஆகியவற்றை ஹேக் செய்துள்ளனர். இதனால் ரஷ்யாவில் பல இடங்களில் எண்ணெய் கிணறுகள் பாதிக்கப்பட்டு உள்ளன. முக்கியமாக ரஷ்யாவின் செய்தி சேனல்களை ஹேக் செய்து அதில் உக்ரைன் மக்கள் படும் கஷ்டங்களை இவர்கள் வீடியோவாக வெளியிட்டுள்ளனர். ரஷ்ய மக்கள் இதை தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக உக்ரைன் மக்கள் இப்படி செய்துள்ளனர்.

சைபர் போர்
முக்கியமாக ரஷ்ய அரசுக்கு சொந்தமான பல்வேறு நிறுவனங்கள், 40க்கும் அதிகமான வங்கிகள் என்று 300 பக்கங்களை ஹேக் செய்துள்ளதாக இந்த அமைப்பு கூறியுள்ளது. இதனால் அந்த நாட்டிற்கு பல கோடி நஷ்டம் என்று அந்த குழு தெரிவித்துள்ளது. எங்கள் நாட்டில் எதிர்பார்க்காத அளவிற்கு சைபர் தாக்குதல் நடக்கிறது என்று ரஷ்ய நாட்டு பாதுகாப்பு துறையும் ஒப்புக்கொண்டு உள்ளது. ரஷ்யாவிற்கு எதிராக மிகப்பெரிய அளவில் இந்த சைபர் வார் கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ளது. கடந்த 48 மணி நேரமாக இந்த ஹேக்கிங் தீவிரமாக நடந்து வருகிறது.

வி ஃபார் வென்டேட்டா
ஹாலிவுட்டில் வெளியான வி ஃபார் வென்டேட்டா (V fo Vendetta) படத்தை பார்த்து இருக்க வாய்ப்புள்ளது. கருப்பு உடை அணிந்து வெள்ளை நிற முகமூடி அணிந்த ஒரு நபர் அரசுக்கு எதிராக புரட்சி செய்வதாக இந்த படம் எடுக்கப்பட்டு இருக்கும். எழுத்தாளர் ஆலன் மூர் எழுதிய நாவலின் அடிப்படையில் எடுக்கப்பட்ட படம் தான் வி ஃபார் வென்டேட்டா. இந்த படத்தில் ஹீரோ அணிந்திருக்கும் அதே மாஸ்க் அணிந்து கொண்டு உலகம் முழுக்க இயங்கி வரும் பறந்து விரிந்த ஹேக்கிங் குழுதான் இந்த அனானிமஸ் (Anonymous) ஹேக்கிங் குழு.

அனானிமஸ்
ஆனால் அந்த மாஸ்க் வெறுமனே இவர்களின் அடையாளங்களில் ஒன்றுதான். அந்த படம் வருவதற்கு முன்பே 2003லேயே இந்த குழு உருவாக்கப்பட்டுவிட்டது. இந்த குழுவில் உலகம் முழுக்க இதற்கு உறுப்பினர்கள் இருப்பதாக நம்பப்படுகிறது. ஆனால் இதன் உறுப்பினர்கள் யார் என்பது யாருக்கும் தெரியாது. இவர்கள் எப்படி ஒன்று சேர்க்கிறார்கள் என்பதும் யாருக்கும் தெரியாது.

ஹேக்கிங்
பல நாட்டு அரசுகளை, நிறுவனங்களை தங்களின் ஹேக்கிங் மூலம் ஆட்டிப்படைத்த அனானிமஸ் (Anonymous) ஹேக்கர் குழு பொதுவாக மக்கள் பிரச்சனைகளில் அடிக்கடி குரல் கொடுப்பார்கள். அமெரிக்காவில் ஜார்ஜ் பிளாய்டு இறந்த போது அதற்காக குரல் கொடுத்தனர். உலகில் பல நாட்டு அரசு பக்கங்கள், நிறுவனங்கள் ஆகியவற்றை ஹேக் செய்துள்ளனர். ஹேக்கிங் மூலம் நீதியை பெற்று தருவது, சர்வாதிகார ஆட்சியை ஒடுக்குவது என்று பல விஷயங்களை இவர்கள் செய்கிறார்கள்.
-
"மோடியை மிரட்டுவது ஆபத்து.." புதின் சொன்ன வார்த்தை.. அப்படியே டிரம்ப் மீதும் பாய்ச்சல் -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் வாங்கியோருக்கு குட் நியூஸ்! பணம் கட்டலயா? ஏலத்திலிருந்து நகை மீட்க ஈஸி வழி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம்












Click it and Unblock the Notifications