"WORLD WAR Z".. உக்ரைனுக்குள் புகுந்த ரஷ்யா பீரங்கிகளில்.. பெரிய ரகசிய குறியீடு.. பரபரப்பு பின்னணி!

Subscribe to Oneindia Tamil

மாஸ்கோ: உக்ரைனுக்குள் புகுந்த ரஷ்யா பீரங்கிகளில் இருக்கும் ரகசிய குறியீடுகள் பெரிய அளவில் விவாதங்களை ஏற்படுத்தி உள்ளது. உக்ரைன் மக்களுக்கும், இந்த போரை தீவிரமாக கவனித்து வரும் வல்லுனர்களும் கூட இந்த குறியீட்டை வைத்து கேள்விகளை எழுப்பி உள்ளனர்.

Recommended Video

    Ukraine-க்குள் புகுந்த ரஷ்யா பீரங்கிகளில்.. பெரிய ரகசிய குறியீடு.. பரபரப்பு பின்னணி!

    உக்ரைனில் தற்போது போர் தீவிரமாக நடந்து வருகிறது. இரண்டு நாட்களாக நடைபெற்ற போர் இன்று உச்சம் தொட்டுள்ளது. அங்கு ரஷ்யா கடுமையான வான்வெளி, ராணுவ தாக்குதல்களை நடத்தி வருகிறது.

    ஏவுகணைகள், பீரங்கிகள், குண்டுகள் மூலம் ரஷ்யா தாக்கி வருகிறது. உக்ரைனின் தலைநகர் கீவ் இன்னும் சில நாட்களில் ரஷ்யாவின் கட்டுப்பாட்டிற்கு சென்று விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    என்ன நடக்கிறது?

    என்ன நடக்கிறது?

    இந்த நிலையில் உக்ரைனுக்குள் புகுந்து இருக்கும் ரஷ்யாவின் பீரங்கிகள், வாகனங்கள், போர் கருவிகள் அனைத்திலும் Z என்ற குறியீடு உள்ளது. சில வாகனங்களில் வட்டம் போட்டு அதில் Z என்ற குறியீட்டை வைத்து உள்ளனர். இன்னும் சில வாகனங்களில் முக்கோணம் என்ற சிம்பிளை வைத்து உள்ளே Z என்ற குறியீட்டை வைத்து இருக்கின்றனர். ரஷ்ய வாகனங்களில் இந்த குறியீடு மிகப்பெரிய அளவில் பார்த்ததும் தெரியும் அளவிற்கு வைக்கப்பட்டு இருக்கிறது.

    குறியீடு

    குறியீடு

    இந்த குறியீடு ஏன் இப்படி போடப்பட்டு இருக்கிறது என்று பலர் கேள்வி எழுப்பி வருகின்றனர். இந்த நிலையில் இதற்கு 4 காரணங்கள் சொல்லப்படுகிறது. ரஷ்யாவின் பாதுகாப்பு ஆலோசனை குழுவில் இருக்கும் ராப் லீ என்ற நபர் இந்த காரணங்களை விளக்கி உள்ளார். காரணம் 1 - ரஷ்யா தனது வாகனங்களை அடையாளம் கண்டுகொள்ள இந்த குறையீட்டை பயன்படுத்திக்கிறது. அதாவது எதிரி நாட்டு வாகனங்களுக்கும், ரஷ்ய வாகனங்களுக்கும் வேறுபாட்டை கண்டுபிடிக்கும் வகையில் இந்த குறியீடு இடம்பெற்றுள்ளது என்று கூறப்படுகிறது.

    காரணங்கள்

    காரணங்கள்

    காரணம் 2 - ஆனால் இதே குறியீட்டை எதிரி நாட்டு வாகனங்களும் பயன்படுத்தி குழப்ப முடியும் என்பதால், ரஷ்யா இப்படி செய்திருக்க வாய்ப்பு இல்லை என்கிறார்கள். இது பெரும்பாலும் வாகனங்கள் செல்ல போகும் இடத்தை குறிக்கும். ரஷ்யாவின் பிளானை பின்பற்றும் வகையில் இப்படி குறியீடுகளை போட்டு இருக்கலாம். பீரங்கி எந்த பகுதிக்கு செல்கிறது என்பதை குறிக்க இப்படி குறியீடுகளை அவர்கள் சங்கேதமாக பின்பற்றலாம் என்றும் கூறுகிறார்கள்.

    ரஷ்யா என்ன செய்கிறது

    ரஷ்யா என்ன செய்கிறது

    காரணம் 3 - இன்னொரு பக்கம் இது ரஷ்யா உக்ரைனில் இருக்கும் டோன்ஸ்டாகே, லுஹான்ஸ்டாக் ஆகிய பகுதிகளை சுதந்திரமான பகுதியாக அறிவித்துள்ளது. இந்த பகுதிகளுக்கு அனுப்பும் வாகனங்களை ரஷ்யா இப்படி குறிப்பிடலாம். ரஷ்யா பல ஜெயில் வாகனங்களையும் இங்கு பயன்படுத்துகிறது. இதனால் ரஷ்யா பெரிய பிளானோடு, முறையான திட்டமிடலோடுதான் இந்த போரை நடத்தி வருகிறது என்றும் கூறுகிறார்கள்.

    விளக்கம்

    விளக்கம்

    காரணம் 4 - ராப் லீ இன்னொரு காரணத்தையும் விளக்கி உள்ளார். அதன்படி சிலர் இதை WORLD WAR Z என்று கூறுகிறார்கள். ரஷ்யா தங்களின் படையெடுப்பிற்கு இப்படி பேர் வைத்து இருக்கலாம். சோவியத்தை மொத்தமாக மீட்க ரஷ்யா செய்யும் கடைசி போர் என்பதை குறிக்கும் வகையில் இருக்கலாம் என்றும் சிலர் இணையத்தில் குறிப்பிட்டு உள்ளனர் என்று அவர் விளக்கி உள்ளார். ரஷ்யா முறையான திட்டத்துடன் இந்த போரை நடத்தி வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+