"டேமேஜ் ரொம்ப அதிகம்!" ரஷ்யாவின் மோஸ்கவா கப்பல்.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய உக்ரைன்?
கீவ்: உக்ரைன் போர் விரைவில் முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ரஷ்ய கடற்படை பெரிய பின்னடைவை எதிர்கொண்டுள்ளது.
கடந்த பிப். இறுதியில் உக்ரைன் போர் தொடங்கியது. ரஷ்ய அதிபர் புதின் உத்தரவைத் தொடர்ந்து உக்ரைன் மீது ரஷ்யா முழு வீச்சிலான தாக்குதலைத் தொடங்கியது.
இதன் காரணமாக உக்ரைன் மக்கள் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். பல லட்சம் பேர் அகதிகளாக அந்நாட்டை விட்டு வெளியேறி உள்ளனர்.

உக்ரைன் போர்
இந்தப் போர் ஒரு மாதத்திற்கு மேலாகத் தொடர்ந்து தீவிரமாக நடைபெற்று வருகிறது. போர் தொடங்கிய சில நாட்களிலேயே இரு தரப்பிற்கும் இடையே அமைதி பேச்சுவார்த்தையும் தொடங்கி நடைபெற்று வருகிறது. முதற்கட்ட பேச்சுவார்த்தையில் இரு தரப்பிற்கும் இடையே பெரியளவில் உடன்பாடு ஏற்படாத நிலையில், கடந்த சில வாரங்களுக்கு முன்பு, துருக்கியில் நடைபெற்ற அமைதிப் பேச்சுவார்த்தையில் பல விகாரங்களில் உடன்பாடு ஏற்பட்டது.

தொடரும் சிக்கல்
மேலும், உக்ரைன் தலைநகர் கீவ் அருகே இருக்கும் ராணுவத்தைக் குறைக்கவும் ரஷ்ய ராணுவம் ஒப்புக்கொண்டது. இதனால் உக்ரைன் போர் மிக விரைவில் முடிவுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இருப்பினும், உக்ரைன் மற்றும் ரஷ்யா இரு தரப்பும் தாக்குதலை முழுமையாக நிறுத்தவில்லை. இதன் காரணமாக உக்ரைன் போர் முடிவுக்கு வருவதில் சிக்கல் தொடர்ந்து கொண்டே வந்தது.

ரஷ்ய கடற்படை
இந்தச் சூழலில் ரஷ்யக் கடற்படைக்குச் சொந்தமான முக்கிய கப்பல் ஒன்றை உக்ரைன் தாக்கியுள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. இந்தத் தாக்குதலில் ரஷ்யாவின் கருங்கடல் பகுதியில் பாதுகாப்பில் ஈடுபட்டு வந்த கப்பல் மிக மோசமாகச் சேதமடைந்துள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. மோஸ்கவா கப்பலை குறி வைத்து உக்ரைன் ராணுவம் தாக்குதல் நடத்தியதாகவும் இதனால் ஏற்பட்ட தீவிபத்தில் அந்தக் கப்பல் மிக மோசமாக சேதமடைந்து உள்ளதாகவும் ரஷ்யா தரப்பில் கூறப்பட்டுள்ளது.

நடந்தது என்ன
உக்ரைன் படைகளின் ஏவுகணை கப்பலைத் தாக்கியதாக ஒடெஸாவின் ஆளுநர் தெரிவித்தார். அதேநேரம் சிலர் அங்கு என்ன தாக்குதல் நடந்தது என்றே தெரியவில்லை என்று தெரிவித்தனர். இந்த கப்பல் போர் தொடங்கிய போது, உக்ரைனுக்கு எதிராக விரைவாக ஆயுதங்களை எடுத்துச் செல்ல பெரியளவில் உதவியது குறிப்பிடத்தக்கது. முன்னதாக சிரியா நாட்டில் போர் நடைபெற்ற போதும், இதே கப்பல் தான் முக்கியமாகப் பயன்பட்டது குறிப்பிடத்தக்கது.
Recommended Video

போர் என்ன ஆகும்
கீவ் நகரில் இருந்து ரஷ்யா தனது ராணுவத்தைக் குறைத்துக் கொண்டது. அதேநேரம் உக்ரைனின் மரியுபோல் நகரைக் குறிவைத்து ரஷ்யா தனது தாக்குதலைத் தீவிரப்படுத்தி உள்ளது. உக்ரைன் நாட்டின் முக்கிய துறைமுக நகரமான மரியுபோல் நகரைக் கைப்பற்ற ரஷ்ய ராணுவம் கடந்த சில வாரங்களாகவே தொடர்ந்து முயன்று வருகிறது. இந்தச் சூழலில் தான் ரஷ்யாவின் முக்கிய கப்பலை உக்ரைன் தாக்கி உள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
-
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்!












Click it and Unblock the Notifications