முக்கிய துறைமுக நகரம்.. மரியூபோலை கைப்பற்றிய ரஷ்யா.. உக்ரைனுக்கு தொடர்ந்து விழும் அடி
கீவ்: உக்ரைனில் இன்று காலை நடந்த 10வது நாள் போரில் மரியூபோல் எனும் முக்கிய துறைமுக நகரை ரஷ்ய படை கைப்பற்றியுள்ளது.
Recommended Video
உக்ரைன் மீது ரஷ்யா தொடர்ந்து போர் தொடுத்து வருகிறது. இன்று காலை 10வது நாளாக போர் தொடர்ந்தது. தலைநகர் கீவ் உள்பட பல்வேறு முக்கிய நகரங்களை இன்னும் ரஷ்ய வீரர்கள் கைப்பற்றவில்லை. கீவ் நகரை கைப்பற்ற தொடர்ந்து ரஷ்ய வீரர்கள் போராடி வருகின்றனர்.
உக்ரைன் படைகளும் தொடர்ந்து தாக்குதல் நடத்துகின்றன. இருதரப்பு மோதலில் ராணுவ வீரர்கள், அப்பாவி மக்கள் பலியாகி உள்ளனர். இதனால் ரஷ்யாவின் நடவடிக்கைக்கு பல்வேறு நாடுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இருப்பினும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் போரை தொடர்ந்தார்.

அணு உலைகள்...
இதனால் சில நாட்களுக்கு முன்பு செர்னோபில் அணு உலையை ரஷ்யா கைப்பற்றியது. இதன் தொடர்ச்சியாக உக்ரைனின் தென்கிழக்கில் உள்ள இனிரோடர் நகரில் அமைந்திருக்கும் ஜபோரிசியா எனும் அணு உலையை ரஷ்ய படை சண்டையிட்டு கைப்பற்றியது. இது ஐரோப்பாவின் மிகப்பெரியது மட்டுமின்றி உலகில் 9வது மிகப்பெரிய அணு உலை என்பது குறிப்பிடத்தக்கது.

ரஷ்யாவிடம் துறைமுக நகரம்
இன்று தற்காலிகமாக போர் நிறுத்துவதற்கு முன்பு உக்ரைனில் மரியூபோல் துறைமுகத்தை ரஷ்யா படை கைப்பற்றியுள்ளது. இதை அதன் மேயர் வாடிம் பாய்சென்கோ உறுதி செய்துள்ளார். அவர் கூறுகையில், ‛‛ரஷ்ய படையினர் மின்சாரம், உணவு, தண்ணீர் சப்ளையை துண்டித்துள்ளனர். இதன்மூலம் இவர்களை 2ம் உலகப்போரின் நாசி படையுடன் ஒப்பிடலாம். மனிதாபிமான பிரச்சனைகளுக்கு தீர்வு தேடி வருகிறேன். மரியூபோல் நகரை ரஷ்யாவிடம் இருந்து கைப்பற்றுவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறேன்.''

ஏன் முக்கிய நகரம்
அசோவ் கடல் அருகே உள்ள இந்த நகரில் 4 லட்சத்து 50 ஆயிரம் மக்கள் உள்ளனர் . இங்கிருந்து தான் உக்ரைனின் கடற்வழி வாணிபங்கள் நடக்கிறது. இந்த நகரை கைப்பற்றியது மூலம் உக்ரைனின் கடல்வழி பயணம், வாணிபம் முடங்க உள்ளது. இது ரஷ்ய படைகளுக்கு தெம்பூட்டியுள்ளது. முன்னதாக உக்ரைனின் தெற்கு கருங்கடல் கடற்கரையில் உள்ள பெர்டியன்ஸ்க் மற்றும் கெர்சன் ஆகிய இரண்டு முக்கிய நகரங்களை ரஷ்யா கைப்பற்றி இருந்தது.

தற்காலிக போர் நிறுத்தம்
இந்நிலையில் உக்ரைனுடனான அமைதி பேச்சுவார்த்தையில் ஒப்புகொண்டபடி பொதுமக்களை பாதுகாப்பாக வெளியேறும் வகையில் இன்று போர் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. அதன்படி வோல்னோவாகா, மரியூபோல் நகரங்களில் போர் நிறுத்தப்பட்டுள்ளது. அதேவேளையில் சுமி, கீவ், செர்னிஹிவ் நகரங்களில் ஏவுகணை தாக்குதல் நடத்துவதற்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
-
ராயல் என்பீல்டு முதலீடு ஆந்திரா சென்றதா? அமைச்சர் கீர்த்தனா பற்றி உண்மையை உடைத்த MP மாணிக்கம் தாகூர் -
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி












Click it and Unblock the Notifications