Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

போதும் போரை முடிச்சிப்போம்.. அணு ஆயுத ஏவுகணையை களமிறக்கும் ரஷ்யா! புதின் போட்ட பக்கா பிளான்

Subscribe to Oneindia Tamil

மாஸ்கோ: உக்ரைனுடன் கடந்த 2022ம் ஆண்டு தொடங்கிய போர், மூன்றரை ஆண்டுகளாக நீடித்து வருகிறது. இந்நிலையில், இந்த போரை விரைவில் முடிக்கும் விதமாக, ரஷ்யா அணு ஆயுத ஏவுகணையை களமிறக்க திட்டமிட்டிருக்கிறது. இதற்காக அணுசக்தி மூலம் இயங்கும் ஒரு ஏவுகணையைச் சோதித்திருப்பதாக அந்நாட்டு அதிபர் புதின் கூறியிருக்கிறார்.

புரவெஸ்ட்னிக் என பெயரிடப்பட்டிருக்கும் இந்த ஏவுகணை 14,000 கி.மீ தூரத்திற்கு பயணித்திருக்கிறது. இவ்வளவு தூரம் என்பது உலகின் பாதி நாடுகளை உள்ளடக்கிய தூரமாகும். அதாவது

Russia nuclear NATO
  • ஐரோப்பிய கண்டத்தில் - பிரான்ஸ், ஜெர்மனி, இங்கிலாந்து, இத்தாலி, ஸ்பெயின், நார்வே, உக்ரைன்
  • ஆசிய கண்டத்தில் - இந்தியா, சீனா, ஜப்பான், சவுதி அரேபியா, இந்தோனேசியா, தென்கொரியா, வியட்நாம்
  • ஆப்பிரிக்கா கண்டத்தில் - எகிப்து, தென் ஆப்பிரிக்கா, நைஜீரியா, மொராக்கோ
  • வட அமெரிக்கா கண்டத்தில் -அமெரிக்கா, கனடா, மெக்ஸிகோ
  • தென் அமெரிக்கா கண்டத்தில் - பிரேசில், அர்ஜென்டினா, சிலி

ஆகிய நாடுகள் இந்த பரப்பளவுக்குள் வரும். இந்த நாடுகளை எல்லாம் ரஷ்யாவின் புதிய வகை அணுசக்தி ஏவுகணையால் தாக்க முடியும். கடந்த செவ்வாய்கிழமை இந்த ஏவுகணை சோதனை செய்து பார்க்கப்பட்டிருக்கிறது. இதனை இறுதி சோதனை செய்து விரைவில் படையில் இணைக்க வேண்டும் என்றும் புதின் உத்தரவிட்டிருக்கிறார்.

புரவெஸ்ட்னிக் ஏவுகணை பற்றிய தகவல்கள்:

9M730 புரவெஸ்ட்னிக் என பெயரிடப்பட்டிருக்கும் இந்த ஏவுகணை, தரையிலிருந்து ஏவப்படும் குறைந்த உயரத்தில் பறக்கும் ஒரு ஏவுகணையாகும். இது அணுசக்தி மூலம் இயங்கக்கூடியது.

இந்த ஏவுகணையின் பெயர் "புயல் பறவை" என்று பொருள்படும். நேட்டோ இதை SSC-X-9 ஸ்கைஃபால் என்று குறிப்பிடுகிறது.

இதன் அணுசக்தி உந்துவிசை, வழக்கமான டர்போஜெட் அல்லது டர்போஃபேன் என்ஜின்களை விட நீண்ட தூரம் மற்றும் நீண்ட நேரம் பறக்க வடிவமைக்கப்பட்டுள்ளது. இது எரிபொருள் வரம்புகள் இல்லாமல் இலக்கை அடையும் முன் நீண்ட நேரம் "சுற்றித் திரிய" உதவுகிறது.

அமெரிக்காவைச் சேர்ந்த பாதுகாப்பு அமைப்பான நியூக்ளியர் த்ரெட் இனிஷியேட்டிவ், இந்த ஏவுகணை குறித்து பல தகவல்களை தெரிவித்திருக்கிறது. அதாவது இந்த ஏவுகணையால் பல நாட்கள் காற்றில் சுற்றிக்கொண்டே இருக்க முடியும்.

இந்த ஏவுகணை அணு ஆயுதத்தை சுமந்து கொண்டு, குறைந்த உயரத்தில் உலகத்தைச் சுற்றி வந்து, ஏவுகணை பாதுகாப்பு அம்சத்தை தவிர்த்து, நிலப்பரப்பைக் கடந்து, கணிக்க முடியாத இடத்தில் அணு ஆயுதத்தை கொ்ணடு தாக்கும்.

புரவெஸ்ட்னிக் 20,000 கி.மீ வரை செல்லக்கூடியது என்றும், ரஷ்யாவின் எந்தப் பகுதியிலிருந்தும் அமெரிக்காவில் உள்ள இலக்குகளைத் தாக்கக்கூடியது என்றும் சொல்லப்படுகிறது. இது 50 முதல் 100 மீட்டர் உயரத்தில் பறக்கக்கூடியது என்பதால், வான் பாதுகாப்பு ரேடார்கள் இதை கண்டறிவது கடினம் என்பது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+