அணு ஆயுத ராக்கெட்.. உலகிலேயே பவர்புல் ஏவுகணையை டெஸ்ட் செய்த ரஷ்யா.. ஜாக்கிரதை.. புடின் எச்சரிக்கை

Subscribe to Oneindia Tamil

மாஸ்கோ: உக்ரைன் உடன் போர் நடந்து வரும் நிலையில் ரஷ்யா புதிய ஏவுகணை ஒன்றை சோதனை செய்துள்ளது. அணு ஆயுதங்களை சுமந்து சென்று தாக்கிய கூடிய Sarmat என்ற ஏவுகணையை ரஷ்யா சோதனை செய்துள்ளது.

உக்ரைன் ரஷ்யா இடையிலான போர் இரண்டு மாதமாக நடந்து கொண்டு இருக்கிறது. ரஷ்யாவால் உக்ரைனின் பெரிய நகரம் எதையும் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர முடியவில்லை.

இந்த போரில் கிட்டத்தட்ட ரஷ்யா முதல்கட்ட தோல்வியை நோக்கி சென்று கொண்டு இருப்பதாகவே மேற்கு உலக நாடுகள் தெரிவித்துள்ளன. ஆனால் ரஷ்யாவோ போர் திட்டமிட்டபடி செல்வதாக தெரிவித்துள்ளது.

ஏவுகணை சோதனை

ஏவுகணை சோதனை

இந்த நிலையில்தான் நேற்று ரஷ்யா திடீரென Sarmat ஏவுகணையை சோதனை செய்தது. இது கண்டம் விட்டு கண்டம் சென்று தாக்கும் ஏவுகணை ஆகும். அணு ஆயுதங்களை சுமந்து சென்று தாக்கும் வல்லமை கொண்டது. இந்த சோதனை வெற்றிகரமாக முடிந்ததாக ரஷ்யா தெரிவித்துள்ளது. ஒரே ஏவுகணையில் 10 வார் ஹெட்களை வைக்க முடியும்.

சேதம்

சேதம்

இதனால் அதிக அளவிலான சேதங்களை இது ஏற்படுத்தும். ரஷ்யா இந்த ஏவுகணையை 2000ம் தொடக்கத்திலேயே உருவாக்கிவிட்டது. அதன்பின் பல புதிய தொழில்நுட்பங்களை புகுத்தி இதை ரஷ்யா தொடர்ந்து அப்டேட் செய்து வந்தது. இதில் கவனிக்க வேண்டிய விஷயம் இந்த ஏவுகணை எதிரி நாட்டின் ஆண்டி மிஸைல் ஏவுகணை சிஸ்டத்தை தாண்டி தாக்க கூடியது.

எவ்வளவு சக்தி வாய்ந்தது

எவ்வளவு சக்தி வாய்ந்தது

இதில் இருக்கும் ஆரம்பநிலை பூஸ்டர்கள் சில நொடிகள் மட்டுமே இயங்கும். இதனால் ஏவுகணை வருகிறதா, இல்லையா என்பதே தெரியாது. இதன் காரணமாக இந்த ஏவுகணையை டிராக் செய்வது கடினம். இதன் எடை 230 டன் என்பது குறிப்பிடத்தக்கது. உலகில் எந்த மூலையில் இருக்கும் டார்க்கெட்டையும் இதன் மூலம் தாக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. உலகிலேயே அதிக தூரம் தாக்க கூடிய ஏவுகணைகளில், அதிக சக்தி கொண்ட ஏவுகணை இதுதான் என்று ரஷ்யா தெரிவித்துள்ளது.

Recommended Video

    சீறிப்பாய்ந்த Brahmos Missile | Submarine India VS China | INS Vagsheer | Oneindia Tamil
    அணு ஆயுதம்

    அணு ஆயுதம்

    இந்த ஏவுகணையை வடக்கு ரஷ்யாவில் அந்நாட்டு பாதுகாப்புத்துறை மேற்கொண்டது. இது தொடர்பாக ரஷ்ய அதிபர் புடின் அளித்த பேட்டியில், ரஷ்யாவின் பாதுகாப்பை இது உறுதி செய்யும். ரஷ்யாவின் போர் செய்யும் திறனை இது உறுதிப்படுத்தும். இது உலகிலேயே அதிக சக்தி வாய்ந்தது. அதனால் ரஷ்யாவை சீண்டலாம் என்று நினைப்பவர்கள் இரண்டு முறை யோசிக்க வேண்டும்.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+