இது லிஸ்டுலேயே இல்லையே.. அமெரிக்காவை மிரள வைத்த ரஷ்யாவின் மூவ்.. கருங்கடலால் "சிவந்த" பிடன் முகம்
ரஷ்யாவிடமும் ட்ரோன் உள்ள நிலையில் அமெரிக்கா என்ன மாதிரியான கருவிகளை பயன்படுத்துகிறது என்று தெரிந்து கொள்ள முடியும்.
மாஸ்கோ: அமெரிக்காவின் ட்ரோன் விமானத்தை ரஷ்யாவின் சுகோய் தாக்கி அழித்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவத்தில் அமெரிக்காவிற்கு இன்னொரு அதிர்ச்சியை கொடுத்துள்ளது ரஷ்யா.
ரஷ்யா அருகே இருக்கும் கருங்கடலில் இந்த சம்பவம் நடந்து உள்ளது. அமெரிக்காவின் ட்ரோனை அதிவேகத்தில் மோதி ரஷ்ய விமானம் தாக்குதல் நடத்தி உள்ளது. திடீர் தாக்குதல் காரணமாக கருங்கடலில் பதற்றம் ஏற்பட்டு உள்ளது. அமெரிக்காவின் MQ-9 Reaper எனப்படும் தாக்குதல் திறன் கொண்ட ட்ரோன் மீதுதான் இந்த தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது.
இந்த ட்ரோன் ஒரு விதமான கண்காணிப்பு ட்ரோன் ஆகும். அதோடு இதில் சிறிய அளவிலான ராக்கெட்டுகள், குண்டுகள் இருக்கும். இது சர்வதேச எல்லையில் பறந்து கொண்டு இருந்தாலும், ரஷ்யாவின் கடற்படையை இந்த விமானங்கள் நோட்டமிட்டதாக கூறப்படுகிறது.

தாக்குதல்
இந்த நிலையில்தான் இங்கே ரஷ்யாவின் இரண்டு சுகோய் விமானங்கள் வேகமாக பறந்து அமெரிக்க ட்ரோனை இடைமறித்து உள்ளன. அதன்படி அமெரிக்காவின் ட்ரோனை அதிவேகத்தில் மோதி ரஷ்ய விமானம் தாக்குதல் நடத்தி உள்ளது. ரஷ்யாவின் இரண்டு சுகோய் 27 விமானங்கள் இந்த தாக்குதலை நடத்தி உள்ளது. இந்த தாக்குதலுக்கு முன்பாக இரண்டு விமானங்களும் அந்த ட்ரோனை நெருக்கமாக சுற்றி வந்துள்ளன. அதன்பின் மேலே இருந்து ட்ரோன் மீது எரிபொருளை ஊற்றி உள்ளன. கடைசியில் வேகமாக வந்து அந்த ட்ரோனை மோதி தாக்கி உள்ளன.

தாக்குதல்
மோதுவதற்கு முன்பாக அருகில் சென்று மிக மோசமாக தாக்குவது போல பறந்து உள்ளன. ட்ரோனை திசை மாற்ற விடாமல் ரஷ்ய விமானங்கள் செய்ததாக கூறப்படுகிறது. இதில் ட்ரோன் மொத்தமாக உடைந்து நாசமாகி உள்ளது. ஆனால் ரஷ்யாவின் விமானம் சிறிய சேதங்களுடன் தப்பித்து உள்ளது. தற்போது அந்த ட்ரோன் கடலில் விழுந்துவிட்டதாக கூறப்படுகிறது. MQ-9 ட்ரோன் அங்கே ரோந்து பணிகளை செய்து கொண்டு இருந்தது. அப்போது ரஷ்யா விமானங்கள் இரண்டு அதை சுற்றி சுற்றி வந்து தாக்கி உள்ளன. கருங்கடலில் பெரும் மோதல் நடந்து வந்த நிலையில்தான் சம்பவம் நடந்துள்ளது.

மோதல் காரணம்
பல்வேறு நாடுகளின் எல்லையாக இருக்கும் கருங்கடலை ரஷ்யா தனது அதிகார மையமாக பார்த்து வருகிறது. துருக்கி, பல்கெரியா, உக்ரைன் என்று பல நாடுகளின் எல்லையில் கருங்கடல் உள்ளது. ரஷ்யா இதன் இன்னொரு எல்லையில் உள்ளது. இந்த கருங்கடலில் யாருக்கு ஆதிக்கம் அதிகம் என்பதில் ரஷ்யா, பிரிட்டன், அமெரிக்கா, துருக்கி இடையே கடும் மோதல் நிலவி வருகிறது. ஒவ்வொரு நாடும் தங்கள் கடல் எல்லையில் கடற்படை தளங்களையும் அமைத்து உள்ளது. இதுதான் இங்கு நடக்கும் மோதலுக்கு காரணமாக பார்க்கப்படுகிறது.

ரஷ்யா பிளான்
இந்த நிலையில்தான் ரஷ்யா இந்த விவகாரத்தில் அடுத்த அதிர்ச்சியை அமெரிக்காவிற்கு கொடுத்துள்ளது. அதன்படி ரஷ்யா தனது போர் கப்பல்களை சர்வதேச எல்லைக்கு அனுப்பி அதில் இருந்து சிறிய அளவிலான மீட்பு கப்பல்கள் மூலம் உள்ளே கடலில் விழுந்த ட்ரோனை மீட்க முடிவு செய்துள்ளனர். அமெரிக்கா இந்த ட்ரோனை கைப்பற்ற நினைத்துக்கொண்டு இருக்கும் நிலையில்தான் ரஷ்யா சார்பாக அதற்கான முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இந்த ட்ரோனை மீட்கும் பட்சத்தில் ரஷ்யா அமெரிக்காவின் தொழில்நுட்பத்தின் தெரிந்து கொள்ள முடியும்.

தொழில்நுட்பம்
ரஷ்யாவிடமும் ட்ரோன் உள்ள நிலையில் அமெரிக்கா என்ன மாதிரியான கருவிகளை பயன்படுத்துகிறது என்று தெரிந்து கொள்ள முடியும். அதோடு உள்ளே என்ன மாதிரியான தொலைத்தொடர்பு சாதனங்கள் உள்ளன என்றும் தெரிந்து கொள்ள முடியும். இதன் மூலம் அமெரிக்காவின் மற்ற ட்ரோன்களை எதிர்கொள்வது எப்படி என்று ரஷ்யா புரிந்துகொள்ள முடியும். அதுமட்டுமன்றி தேவைப்பட்டால் ஹேக்கிங் கூட செய்ய முடியும். இதுதான் தற்போது அமெரிக்காவை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது. ட்ரோனை தாக்கி வீழ்த்தியது மட்டுமின்றி அதை தற்போது மீட்க வேறு ரஷ்யா சென்று இருப்பது அமெரிக்காவை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது.












Click it and Unblock the Notifications