Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

போரை முடிச்சிக்கலாம்.... பேச்சுவார்த்தைக்கு தயார்... ரஷ்யாவிடம் உக்ரைன் அதிபர் வெளிப்படை

Subscribe to Oneindia Tamil

கீவ்: ‛‛உக்ரைன் மக்கள் மோசமான சூழலை சந்தித்து வருகின்றனர். போரை முடித்து கொள்ளலாம். பேச்சுவார்த்தைக்கு நான் தயார்'' என உக்ரைன் அதிபர் விலாடிமிர் ஜெலன்ஸ்கி ரஷ்ய அதிபர் விலாடிமிர் புடினுக்கு மீண்டும் அழைப்பு விடுத்துள்ளார்.

உக்ரைன் மீது ரஷ்யா போர் துவங்கி 2 மாதம் ஆகிவிட்டது. ரஷ்யா தனது போர் நடவடிக்கையை கைவிட வேண்டும் என உலக நாடுகள் கூறி வருகின்றன. ஆனால் ரஷ்யா அதை கண்டு கொள்ளவில்லை. இதனால் தொடர்ந்து உக்ரைனில் படைகளை முன்னேற்றி செல்கிறது.

இதனால் உக்ரைன் நகரில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. பொதுமக்களில் ஒரு தரப்பினர் துப்பாக்கி ஏந்தி தாய்நாட்டை காக்கின்றனர். முதியவர்கள், பெண்கள், சிறுவர், சிறுமிகள் என பல லட்சம் மக்கள் அண்டை நாடுகளில் தஞ்சமைடைந்துள்ளனர்.

பேச்சுவார்த்தை

பேச்சுவார்த்தை

இதற்கிடையே உக்ரைன்-ரஷ்யா இடையே போர் தொடர்பாக பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. இதில் சுமூக முடிவு இன்னும் எட்டப்படவில்லை. இதனால் போர் முடிவுக்கு வருவதில் சிக்கல் நிலவுகிறது. இதற்கிடையே உக்ரைனுக்கு ஆயுதம் வழங்குவதோடு, ரஷ்யா மீது அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் கடுமையான பொருளாதார தடைகளை விதித்து வருகிறது. இது ரஷ்ய அதிபர் விலாடிமிர் புதினை மேலும் கோபமடைய செய்துள்ளது.

 உதவி கோரும் உக்ரைன்

உதவி கோரும் உக்ரைன்

இதனால் உக்ரைனில் போர் இன்னும் தீவிரமாகலாம் என கூறப்படுகிறது. தற்போது மரியுபோல் நகரில் போர் தீவிரமடைந்துள்ளது. இது ஒருபுறம் இருந்தாலும் உக்ரைன் அதிபர் விலாடிமிர் ஜெலன்ஸ்கியும் தொடர்ந்து நாட்டு மக்களிடம் உரையாற்றி உத்வேகம் வழங்குகிறார். மேலும் அவர் உலக நாடுகளின் தலைவர்களில் பேசி வருவதோடு, போர் நடவடிக்கையை முடிவுக்கு கொண்டு வர உதவ வலியுறுத்தி வருகிறார்.

 பேச்சுவார்த்தைக்கு தயார்

பேச்சுவார்த்தைக்கு தயார்

இந்நிலையில் உக்ரைன் தலைநகர் கீவ் மையப்பகுதியில் மெட்ரோ நிலையத்தில் நிருபர்களை அவர் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: ‛‛இந்த போரை முடிவுக்கு கொண்டு வர வேண்டும். யார் போரை துவக்கினாலும் அதை முடிவுக்கு கொண்டு வர முடியும் என நான் நினைக்கிறேன். துவக்கம் முதலலே ரஷ்ய அதிபருடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று நான் கூறி வருகிறேன். போரை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்பதற்காக தான் நான் அவரை சந்திக்க விரும்புகிறேன். மற்றபடி அவரை சந்திக்கும் எண்ணம் எனக்கு கிடையாது. ஏனென்றால் எங்களது நட்பு நாடுகள் மீது எங்களுக்கு நம்பிக்கை உள்ளது. ஆனால் ரஷ்யா மீது எங்களுக்கு நம்பிக்கை இல்லை.

பொறுப்பு உள்ளது

பொறுப்பு உள்ளது

ரஷ்யாவின் போர் நடவடிக்கையில் இருந்து நாட்டு மக்களை காப்பாற்றும் பொறுப்பு எனக்கு உள்ளது. மோசமான சூழலை சந்திக்கும் மக்களை எந்த வகையிலாவது காப்பாற்ற வேண்டும் என நான் நினைக்கிறேன். இதனால் ரஷ்யாவுடன் பேச்சுவார்த்தைக்கு தயாராக இருக்கிறேன். மரியுபோல் நகரில் உள்ள உக்ரைன் வீரர்கள் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தினால் நாங்கள் கடுமையாக எதிர்ப்போம். எந்தவித பேச்சுவார்த்தைக்கு உக்ரைன் உடன்படாது.

அமெரிக்காவினர் வருகை

அமெரிக்காவினர் வருகை

ரஷ்யாவின் போர் நடவடிக்கை துவங்கி 2 மாதம் முழுமையாக முடிய உள்ளது. இந்நிலையில் தான் அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் ஆண்டனி பிளிங்கன், அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் லாயிட் ஆஸ்டின் ஆகியோர் கீவ் வருகை தர உள்ளனர். ஐநா பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரஸ் முதலில் ரஷ்யா சென்றுவிட்டு உக்ரைன் வருவது தவறானது. இதில் நியாயமும், தர்க்கமும் இல்லை'' என்றார்.இதுபற்றி அமெரிக்கா தரப்பில் கேட்டதற்கு கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டது. ரஷ்யாவின் போர் நடவடிக்கை துவங்கிய பிறகு அமெரிக்கா தரப்பில் யாரும் உக்ரைனுக்கு செல்லவில்லை. இந்நிலையில் இவர்கள் 2 பேரும் உக்ரைன் செல்ல உள்ளதாக விலாடிமிர் ஜெலன்ஸ்கி கூறியுள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+