டிரம்ப் போட்ட போன் கால்.. 2 மணி நேரமாக புதின் உடன் பேச்சு! போர் நிறுத்தத்துக்கு தயாராகிறது ரஷ்யா!

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்: ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுடன் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தொலைபேசியில் பேசியுள்ளார். உக்ரைனுடன் போர் நிறுத்தத்திற்கு தயார் என்று ரஷ்யா அறிவித்த நிலையில் டிரம்ப், புதினுடன் சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக தொலைபேசி வாயிலாகப் பேசியுள்ளார்.

இந்த 2 மணி நேர உரையாடலுக்குப் பிறகு ரஷ்ய அதிபர் புதின், போர் நிறுத்தத்திற்கான பேச்சுவார்த்தைக்கு தயாராக இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

Russia Ukraine war ceasefire Trump-Putin call over after more than two hours

2022 ஆம் ஆண்டு தொடங்கிய ரஷ்யா - உக்ரைன் போர், மூன்று ஆண்டுகள் கடந்து இன்று வரை தொடர்ந்து வருகிறது. இடையில் எத்தனையோ சமாதான பேச்சுவார்த்தைகள் நடந்தும், எதற்கும் பலனில்லை. இந்நிலையில் போர் நிறுத்தம் சமீபத்திருப்பதாக டிரம்பின் நடவடிக்கைகள் காட்டுகின்றன.

திங்கட்கிழமை அன்று, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினுடனான தனது அழைப்பு மிகவும் சிறப்பாக நடந்ததாகவும், ரஷ்யாவும் உக்ரைனும் உடனடியாக போர்நிறுத்தம் மற்றும் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான பேச்சுவார்த்தைகளைத் தொடங்கும் என்றும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறி உள்ளார்.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் அழுத்தத்தின் கீழ், ரஷ்யா - உக்ரைன் நாடுகளின் பிரதிநிதிகள் கடந்த வாரம் இஸ்தான்புல்லில் 2022 ஆம் ஆண்டுக்குப் பிறகு முதல் முறையாக சந்திப்பு மேற்கொண்டு பேச்சுவார்த்தை நடத்தினர். இருப்பினும் அவர்கள் ஒரு போர் நிறுத்த உடன்பாட்டை எட்டவில்லை.

இப்போது போர் நிறுத்தத்திற்குத் தயாராக இருப்பதாக உக்ரைன் கூறுகிறது. முதலில் நிபந்தனைகள் பூர்த்தி செய்யப்பட வேண்டும் என்று ரஷ்யா கூறுகிறது. இந்நிலையில், "ரஷ்யாவிற்கும் உக்ரைனுக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகள் உடனடியாகத் தொடங்கும்" என்று டிரம்ப் புதின் உடனான இரண்டு மணி நேரம் நீடித்த அழைப்பைத் தொடர்ந்து எக்ஸ் சமூக வலைதளப் பதிவில் கூறியுள்ளார்.

புதின் உடனான தனது அழைப்பைத் தொடர்ந்து, உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி மற்றும் ஐரோப்பிய ஒன்றியம், பிரான்ஸ், இத்தாலி, ஜெர்மனி மற்றும் பின்லாந்து தலைவர்களுடன் கூட்டு அழைப்பை மேற்கொண்டதாக டிரம்ப் கூறினார். பேச்சுவார்த்தைகள் உடனடியாக தொடங்கும் என்று அந்தத் தலைவர்களிடம் டிரம்ப் தெரிவித்ததாக கூறியுள்ளார்.

புதின் உடனான உரையாடலின் தொனியும் உணர்வும் சிறப்பாக இருந்தது" என்றும், போர் முடிந்ததும் ரஷ்யா அமெரிக்காவுடன் "பெரிய அளவிலான" வர்த்தகத்தை மேற்கொள்ள விரும்புகிறது என்றும் டொனால்ட் டிரம்ப் கூறியுள்ளார்.

டொனால்ட் டிரம்புடனான இரண்டு மணி நேர தொலைபேசி அழைப்பிற்குப் பிறகு, ஒரு திடீர் திருப்பமாக, ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புதின் இதுவரை இல்லாத அளவுக்கு வெளிப்படையான தகவலை அந்நாட்டு ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார். "பரஸ்பரம் ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒப்பந்தங்கள்" எட்டப்பட்டால் உக்ரைனுடன் போர்நிறுத்தம் சாத்தியமாகும் என்பதற்கான சமிக்ஞையாக இது அமைந்துள்ளது.

மாஸ்கோ - கீவ் நேரடி பேச்சுவார்த்தைகளை மீண்டும் தொடங்குவதற்கு டிரம்ப் அளித்த ஆதரவை புதின் பாராட்டி உள்ளார். மேலும் "அனைவருக்கும் பொருந்தக்கூடிய சமரசங்களை" இரு தரப்பினரும் கண்டுபிடிக்க வேண்டும் என்று அவர் அழைப்பு விடுத்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+