கெத்து காட்டும் இந்திய நிறுவனம்.. ரஷ்ய ராணுவ வீரர்களுக்கு ஏற்றுமதியாகும் ஷூக்கள்.. என்ன ஸ்பெஷல்?
மாஸ்கோ: ரஷ்ய ராணுவத்தில் பணியாற்றும் வீரர்கள், அனைத்து விதமான தட்பவெப்ப நிலையும் தாங்கும் திறன் கொண்ட பிரத்யேக ஷூக்கள் பயன்படுத்துகிறார்கள். இந்த ஷூக்கள் இந்தியாவில் உள்ள ஒரு நிறுவனம் தான் ஏற்றுமதி செய்கிறது என்ற விவரம் வெளியாகியுள்ளது. இது பற்றிய விவரங்களை பார்க்கலாம்.
ரஷ்யாவுக்கும் இந்தியாவுக்கும் நீண்ட காலமாக நல்லுறவு உள்ளது. சமீபத்தில் பிரதமர் மோடி ரஷ்யாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு அந்நாட்டு அதிபர் புதினை சந்தித்து பேசியிருந்தார். இந்த சந்திப்பின் போது இந்தியா - ரஷ்யா இடையே பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. இரு நாடுகளுக்கு இடையேயான வலுவான நல்லுறவை வெளிபடுத்தும் விதமாக அமைந்து இருந்தது.

ரஷ்யாவை பொறுத்தவரை சர்வதேச அளவில் சக்தி வாய்ந்த நாடுகளில் ஒன்றாக உள்ளது. கச்சா எண்னெய் ஏற்றுமதி, இயற்கை எரிவாயு என பல்வேறு பொருட்களை ஏற்றுமதி செய்வதில் ரஷ்யா முன்னிலையில் உள்ளது. எனினும், ரஷ்ய ராணுவத்திற்கு இந்தியாவின் பீகாரில் உள்ள ஒரு நிறுவனத்தில் இருந்து காலணிகள் தயாரித்து அனுப்பப்படுகிறது என்ற தகவல் வெளியாகியுள்ளது. இது பற்றிய விவரம் வருமாறு:-
பீகாரின் ஹஜிபுர் நகரம் வேளாண்மை உற்பத்தியில் முன்னிலை வகிக்கிறது. ஆனால் இதே நகரத்தில் இருந்துதான் ரஷ்ய ராணுவத்திற்கு பாதுகாப்பு மிக்க ஷூக்கள் தயாரித்து அனுப்பப்படுகிறது. Competence Exports என்ற தனியார் நிறுவனம் தான் ரஷ்யாவில் உள்ள கம்பெனிகளுக்கும், ஐரோப்பிய சந்தைகளுக்கும் ஷூக்களை ஏற்றுமதி செய்து வருகிறது. இது தொடர்பாக நிறுவனத்தின் பொது மேலாளர் ஷாயிப் குமார் ராய் கூறியதாவது:-
ஹஜிபூர் தொழிற்சாலையை நாங்கள் 2018-ல் ஆரம்பித்தோம். பாதுகாப்பான ஷூக்களை தயாரித்து ரஷ்யாவிற்கு ஏற்றுமதி செய்கிறோம். வீரர்கள் அதை அணிந்து செல்லும் போது கால் வழுக்காமல் இருக்காத வகையிலும் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. லைட் வெயிட் மற்றும் கடுமையான தட்பவெப்ப நிலையிலும் நீடித்து உழைக்க கூடிய வகையில் இந்த ஷூக்கள் தயாரிக்கப்பட்டுள்ளன.
ரஷியாவில் 40 டிகிரி செல்சியஸ் வரை குளிர் நிலவும் என்பதால் இதை எல்லாம் கவனத்தில் கொண்டுதான் ஷூக்களை தயாரித்துள்ளோம். ரஷ்யாவுக்கு ஏற்றுமதி செய்யும் பெரிய நிறுவனங்களில் ஒன்றாக எங்கள் நிறுவனமும் உள்ளது. ஆண்டக்கு 1.5 மில்லியன் ஜோடி ஷூக்களை ஏற்றுமதி செய்கிறோம்.
இதன் மதிப்பு ரூ.100 கோடியாகும். இதை இரு மடங்கு ஆக்குவதே எங்களின் இலக்கு. பீகாரில் உள்கட்டமைப்புகளை மேம்படுத்த வேண்டியுள்ளது. தொலைத் தொடர்பும் மேம்படுத்தப்பட வேண்டும்" ரஷ்யா மட்டும் இன்றி ஐரோப்பிய நாடுகளின் சந்தைகளுக்கும் இந்த நிறுவனத்தின் ஷூக்கள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.
-
வீரர்களே இல்லாமல் ரஷ்யாவை அலறவிடும் உக்ரைன்! புதினே எதிர்பார்க்காத சீக்ரெட் ஆயுதம் இறக்கிய ஜெலன்ஸ்கி -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்?












Click it and Unblock the Notifications