அரிதிலும் அரிதாக உடலுக்கு வெளியே அமைந்த இதயம்.. 8 வயது சிறுமிக்கு நேர்ந்த சோகம்
ரஷ்யாவில் உள்ள ஒரு சிறுமிக்கு அரிதிலும் அரிதாக வெளியே அமைந்துள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Recommended Video

ப்ளோரிடா: அமெரிக்காவில் வசிக்கும் ரஷ்ய சிறுமிக்கு பிறந்ததிலிருந்து இதயம் வெளியே துடித்து வருகிறது. இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது.
ரஷ்யாவை சேர்ந்தவர் விர்சாவியா போரன். 8 வயது சிறுமியான இவர் அரிய வகை பிறவி நோயான பென்டாலஜி ஆப் கான்ட்ரல் என்ற நோயால் பாதிக்கப்பட்டுள்ளார்.
அதாவது இவருக்கு இதயம் உடலுக்கு வெளியே வளர்ந்து துடித்துக் கொண்டிருக்கிறது. இது போன்ற அரிய வகை நோயால் 5.5 கோடி பேரில் 10 லட்சம் பேருக்கு ஏற்படும்.

2015-இல் தெரியப்படுத்தினார்
நெஞ்சை உருகும் கதையுடன் இந்த சிறுமியின் இதயம் குறித்த வீடியோ கடந்த 2015-இல் வைரலாக பரவியது. சுமார் 43 வினாடிகள் கொண்ட அந்த வீடியோவில் விர்சாவியாவின் இதயம் உள்ளேயும், வெளியேயும் துடிப்பது போன்று உள்ளது.

அறுவை சிகிச்சைக்காக அமெரிக்கா பயணம்
உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் இந்த அரிய வகை குறைபாட்டை அறுவை சிகிச்சை செய்ய ரஷ்ய மருத்துவமனைகள் மறுப்பு தெரிவித்துவிட்டன. இதனால் தன் தாயுடன் அமெரிக்காவின் ப்ளோரிடாவுக்கு அந்த சிறுமி குடிபெயர்ந்துள்ளார்.
உயர் ரத்த அழுத்தம்
பாஸ்டனில் உள்ள மருத்துவர்களிடம் சென்று சிறுமியை காட்டியபோது சிறுமியின் நுரையீரல் தமனியில் உயர் ரத்த அழுத்தம் உள்ளதால் அவருக்கு அறுவை சிகிச்சை செய்ய இயலாது என்று கைவிரித்து விட்டனர்.

தாயின் நம்பிக்கை
மருத்துவர்கள் கைவிட்டாலும் விர்சாவியாவின் தாய் தனது மகளுக்கு உரிய சிகிச்சை கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன் உள்ளார். இவர் பிறந்தவுடன் சிறிது காலத்தில் இறந்து விடுவார் என்று மருத்துவர்கள் கூறிய நிலையில் சிறுமிக்கு தற்போது 8 வயதாகிறது என்று அவரது தாய் தெரிவித்தார். சிறுமி நன்றாக பாடவும், களிமண் கொண்டு செய்யும் கலையை நன்கு செய்கிறார். இத்துடன் ஓவியமும் நன்றாக வரைகிறார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications