ரஷ்யாவின் போருக்கு நடுவே.. வேகமாக பரவும் உக்ரைன் அதிபரின் நடன வீடியோ.. என்ன நடந்தது? - பின்னணி
கீவ்: ரஷ்யாவின் போர் நடவடிக்கையால் உக்ரைன் நாடு சிதைந்து வருகிறது. இந்நிலையில் உக்ரைன் அதிபர் விலாதிமிர் ஜெலன்ஸ்கியின் நடன வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
Recommended Video
ரஷ்யாவின் போர் பிடியில் உக்ரைன் சிக்கியுள்ளது. 4வது நாளான இன்றும் ரஷ்யாவின் போர் தாகம் தீரவில்லை. ஏவுகணை, வெடிகுண்டுகள் மூலம் ரஷ்ய வீரர்கள் உக்ரைனை உருக்குலைத்து வருகின்றனர்.
உக்ரைனும் ரஷ்யாவின் போர் நடவடிக்கையை எதிர்த்து சண்டையிட்டு வருகிறது. உக்ரைன் ராணுவ வீரர்கள், பொதுமக்கள் ஆயுதம் ஏந்தி ரஷ்ய வீரர்களை விரட்டியடிக்கின்றனர். பீரங்கி வண்டிகள் மீது பெட்ரோல் குண்டுகள் வீசி தாக்குதல் நடத்துகின்றனர்.

சண்டை செய்வோம்
உக்ரைன் தலைநகர் கீவ்வை ரஷ்ய ராணுவம் கைப்பற்ற முயற்சித்துள்ளது. இதனால் உக்ரைன் போர் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. அந்நாட்டு மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மக்கள் அந்நாட்டை விட்டு வெளியேறி வருகின்றனர். பலர் மெட்ரோ சுரங்க பாதைகளில் தஞ்சமடைந்துள்ளனர். இந்நிலையில் ஆயுதங்களை கீழே போட்டுவிட்டு ரஷ்யாவிடம் சரணடைந்தால் போரை முடித்து கொள்வதாக ரஷ்யா கூறுகிறது. இதற்கு உக்ரைன் அதிபர் விலாதிமிர் ஜெலன்ஸ்கி ஒப்புக்கொள்ளவில்லை. ‛‛உக்ரைன் எங்கள் நாடு. இதை எளிதாக விட்டு கொடுக்கமாட்டோம். தொடர்ந்து சண்டை செய்வோம். ரஷ்ய ராணுவத்திடம் சரணடைய மாட்டோம்'' என அவர் வீடியோ மூலம் கூறி வருகிறார்.

நடன வீடியோ
இந்த பரபரப்பான சூழலுக்கு நடுவே உக்ரைன் அதிபர் விலாதிமிர் ஜெலன்ஸ்கியின் நடன வீடியோ அந்நாட்டு மக்களிடம் தீயாக பரவி வருகிறது. இவர் அரசியலுக்கு வருவதற்கு முன்பு ரியாலிட்டி ஷோக்களில் பங்கேற்று பிரபலமடைந்தார். 2006ல் ‛டான்ஸிங் வித் தி ஸ்டார்ஸ்'எனும் ரியாலிட்டி ஷோவில் ஒலேனா சாப்டென்கோ என்பவருடன் சேர்ந்து பாடல்களுக்கு நடனமாடி ரசிகர்களின் இதயங்களை வென்றார். இந்த ரியாலிட்டி ஷோவில் அவர் வெற்றியும் பெற்றார்.

வலைதளங்களில் வைரல்
இந்நிலையில் அந்த ஷோவில் அவர் நடனமாடியது ஒரு தொகுப்பாக இணையதளங்களில் வைரலாகியுள்ளது. இசைக்கேற்ப அவரது வேகமான நடனத்தை பலர் பாராட்டி வருகின்றனர். சிலர் நாடு இருக்கும் சூழலில் இந்த நடன வீடியோ தேவைதான என கேள்வி எழுப்பியுள்ளனர். உக்ரைன் அதிபராக உள்ள விலாடிமிர் ஜெலன்ஸ்கி அடிப்படையில் காமெடி நடிகராவார். 2009ல் ‛லவ் இன் தி பிக் சிட்டி' எனும் படத்தின் மூலம் திரைத்துறையிலும் கால்பதித்தார்.

அதிபரின் முன்கதை என்ன
இதுவரை 8 படங்களில் நடித்துள்ளார். இவை அனைத்தும் காமெடியை மையமாக கொண்ட படங்களாகும். இதன்மூலம் காமெடி நடிகராக மக்கள் மத்தியில் பிரபலமானார். அதன்பின் 2015 முதல் 19 வரை ‛‛சர்வன்ட் ஆப்தி பீப்பிள்'' நிகழ்ச்சி மூலம் ஊழலை எதிர்க்கும் நடிப்பை காமெடியாக வெளிப்படுத்தி இருந்தார். அதே ஆண்டு நடந்த தேர்தலில் களமிறங்கிய விலாடிமிர் ஜெலன்ஸ்கி முதல் முயற்சியிலேயே வெற்றி பெற்று உக்ரைனின் அதிபரானது குறிப்பிடத்தக்கது.
-
"மோடியை மிரட்டுவது ஆபத்து.." புதின் சொன்ன வார்த்தை.. அப்படியே டிரம்ப் மீதும் பாய்ச்சல் -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் வாங்கியோருக்கு குட் நியூஸ்! பணம் கட்டலயா? ஏலத்திலிருந்து நகை மீட்க ஈஸி வழி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம்












Click it and Unblock the Notifications