தலை மாற்று ஆபரேஷன் செய்து கொள்ள முன்வந்த இளம் விஞ்ஞானி
லண்டன்: தசை அழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ள ரஷ்யாவைச் சேர்ந்த 30 வயது கம்ப்யூட்டர் விஞ்ஞானி தலைமாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள முன்வந்துள்ளார். தலை மாற்று அறுவை சிகிச்சை செய்யப்படும் முதல் நபர் அவர் தான்.
ரஷ்யாவில் உள்ள விளாடிமிர் நகரைச் சேர்ந்த கம்ப்யூட்டர் விஞ்ஞானி வேலரி ஸ்பிரிடோனோவ்(30). அவர் வெர்ட்னிக்-ஹாஃப்மேன் தசை சிதைவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். சக்கர நாற்காலியில் காலத்தை கழித்து வருகிறார். அவரின் நிலைமை நாளுக்கு நாள் மோசமாகிக் கொண்டிருக்கிறது.

இந்நிலையில் இத்தாலியைச் சேர்ந்த அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் செர்ஜியோ கனாவெரோ மனிதர்களிடையே தலை மாற்று அறுவை சிகிச்சை செய்யத் தேவையான தொழில்நுட்பத்தை தான் கண்டுபிடித்துள்ளதாக அறிவித்துள்ளார். மேலும் அடுத்த இரண்டு ஆண்டுகளில் இந்த தலை மாற்றும் அறுவை சிகிச்சை செய்வது சாத்தியம் என்று அவர் தெரிவித்துள்ளார்.
கனாவெரோவின் வார்த்தைகள் வேலரிக்கு நம்பிக்கை அளித்துள்ளது. இதையடுத்து அவர் கனாவெரோவை அணுகி தலை மாற்று அறுவை சிகிச்சை செய்ய தான் தயார் என்று கூறியுள்ளார். இதன் மூலம் வேலரியின் தலை வேறு ஒருவரின் உடலில் பொருத்தப்படும்.
இது குறித்து வேலரி கூறுகையில்,
தலை மாற்று அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்ற என் முடிவு இறுதியானது. என் மனதை நான் மாற்றிக் கொள்ளப் போவது இல்லை. இதை நான் செய்யவில்லை என்றால் என் நிலைமை மோசமாகிவிடும் என்றார்.
தலை மாற்று அறுவை சிகிச்சை குறித்து பல திருநங்கைகள் கனாவெரோவுக்கு இமெயில் அனுப்பியுள்ளனர். ஆனால் தசை சிதைவு நோயால் பாதிக்கப்பட்டவருக்கு அவர் முன்னுரிமை கொடுக்க உள்ளார்.












Click it and Unblock the Notifications