வோட்கா அதிகம் குடிப்பதால் ஆயுள் குறையுமாம்...

Subscribe to Oneindia Tamil

மாஸ்கோ: 20 வருடங்கள் தொடர்ந்து வோட்கா அருந்தினால் ஆண்களின் ஆயுள் குறையும் என ரஷ்ய ஆராய்ச்சியாளர்கள் எச்சரித்துள்ளனர்.

ரஷ்யாவில் ஆண்கள் அதிக அளவில் வோட்கா மதுவை அருந்துகின்றனர். ஒருவாரத்திற்கு அவர்கள் 3 பாட்டில்கள் வரை குடித்து தீர்க்கின்றனர். இவ்வாறு தொடர்ந்து 20 வருடங்கள் வோட்கா அருந்தினால் ஆண்களின் ஆயுள் குறையும் என ரஷ்ய ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்து உள்ளனர்

ரஷியாவில் உள்ள ஆண்களில் நான்கில் ஒரு பங்கினர் தங்களது 55ஆவது வயதிற்குள் இறப்பதாகவும், அதற்கு முக்கியமான காரணம் வோட்கா என்ற மது வகைதான் காரணம் என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

ரஷ்யாவில் ஆய்வு

ரஷ்யாவில் ஆய்வு

ரஷ்யாவில் உள்ள முக்கிய நகரங்களான பர்னவுல்,பியிஸ்க்,டொமாஸ்க் ஆராய்ச்சியாளர்கள் 2 லட்சம் ஆண்களிடம் கடந்த பத்து ஆண்டுகளில் அவர்களின் வோட்கா அருந்திய அளவு கண்காணிக்கப்பட்டது.

1,50000 ஆண்கள்

1,50000 ஆண்கள்

ரஷ்யாவில் 1,50000 ஆண்களிடம் இது தொடர்பான ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அவர்களில் பெரும்பாலனவர்கள் வாரத்திற்கு மூன்றுக்கும் மேற்பட்ட வோட்கா பாட்டில்களை காலி செய்பவர்கள்.

அகால மரணங்கள்

அகால மரணங்கள்

இவர்களில் அதிக அளவு வோட்கா மது அருந்துபவர்கள் மத்தியில், அதிக அளவில் அகால மரண விகிதங்கள் காணப்பட்டது.என ஆய்வாளர்கள் தெரிவித்து உள்ளனர்.

ஒரு வாரத்தில் ஒன்று

ஒரு வாரத்தில் ஒன்று

வோட்கா வாரத்திற்கு ஒரு பாட்டிலுக்கும் குறைவாக குடித்த 54 35 வயதுடைய ஆண்கள் அடுத்த 20 ஆண்டுகளில் 16 சதவீதம் இறக்க வாய்ப்பு உள்ளது. 3 பாட்டிலகள் அருந்தியவர்கள் 35 சதவீதமாக உயர்ந்தது. என ஆய்வில் தெரியவந்து உள்ளது

எமனாகும் வோட்கா

எமனாகும் வோட்கா

ரஷ்ய கேன்சர் ஆராய்ச்சி மையத்தை சேர்ந்த விஞ்ஞானிகள் இந்த ஆய்வினை மேற்கொண்டனர். 1980 முதல் மாஸ்கோவில் நடைபெற்ற அகால மரணங்களையும் அதற்கான காரணங்களையும் அவர்கள் கண்டறிந்தனர். இதில் வோட்கா தான் பெரும்பாலனவர்களின் ஆயுளுக்கு எமனாக அமைந்திருக்கிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+