ரஷ்ய ராணுவ விமானம் கருங்கடலில் விழுந்து நொறுங்கியது.. 91 பேர் பலி
91 பேர் பயணம் செய்த ரஷ்ய ராணுவ விமானம் நொறுங்கி கருங்கடலில் விழுந்து 91 பேருடன் விமானக் குழுவினர் பலியாகியுள்ளனர்.
மாஸ்கோ: ரஷ்யாவின் ராணுவ விமானம் புறப்பட்ட சற்று நேரத்திற்கெல்லாம் ராடர் கருவியின் தொடர்பில் இருந்து துண்டிக்கப்பட்டு மாயமானது. அந்த விமானம் விபத்திற்குள்ளாகி நொறுங்கி கருங்கடலில் விழுந்துள்ளதாக ரஷ்ய செய்தி நிறுவனங்கள் செய்திகள் வெளியிட்டுள்ளன. இதில் பயணம் செய்த 91 பேர் மற்றும் குழுவினர் பலியாகியுள்ளதால் ரஷ்யாவில் பரபரப்பு நிலவி வருகிறது.
ரஷ்யாவின் ராணுவ விமானம் டியு-154. இது சோச்சி என்ற விமான தளத்தில் இருந்து 91 பயணிகளுடன் புறப்பட்டது. சிரியாவில் உள்ள லடாகியா என்ற இடத்தை நோக்கி மாஸ்கோ நேரப்படி அதிகாலை 5. 20க்கு விமானம் மேலெழுந்து பறக்கத் தொடங்கியது.

பின்னர், சரியாக 20 நிமிடம் கழித்து விமானம் 5.40 மணிக்கு விமானத்தின் தொடர்பு ராடர் கருவியில் இருந்து துண்டிக்கப்பட்டது. இதனால் விமானத்திற்கு என்ன நேர்ந்தது என்று யாருக்கும் தெரியவில்லை. மேலும், இதில் பயணம் செய்த 91 பேர் மற்றும் விமானக் குழுவினரின் கதி என்ன ஆனது என்பது குறித்து தெரியவில்லை.
இந்நிலையில், இந்த விமானம் விபத்து ஏற்பட்டு நொறுங்கி கருங்கடலில் விழுந்துள்ளது என்று ரஷ்ய செய்தி நிறுவனங்கள் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் இதில் பயணம் செய்த 91 பேருடன் விமானக் குழுவினர் 8 பேரும் மடிந்துள்ளனர்.
ரஷ்ய ராணுவ விமானம் டியு-154 நொறுங்கி விழுந்து 91 பேர் பலியாகியுள்ளது ரஷ்யாவில் பரபரப்பு நிலவி வருகிறது.
-
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி! -
ரயிலில் உங்க சீட்டில் வேறு யாரேனும் இருந்தால் ரூ.20,000 இழப்பீடு? இந்த உத்தரவு பற்றி தெரியுமா












Click it and Unblock the Notifications