மாபெரும் குற்றம்.. போரை நிறுத்துங்கள்! உக்ரைன் துயரம் கண்டு சொந்த நாட்டின் மீது கோவப்பட்ட ரஷ்ய பைலட்
கீவ்: உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர் என்பது முழுக்க முழுக்க தவறான குற்றம் என ரஷ்ய விமானி ஒருவர் கூறும் வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.
உக்ரைன் மீது ரஷ்யா கந்த பிப். 24ஆம் தேதி முழு வீச்சில் போரை ஆரம்பித்தது. உலகில் மிகப் பெரிய ராணுவங்களில் ஒன்றான ரஷ்யா ராணுவத்தை எதிர்த்து உக்ரைன் வீரர்கள் துணிச்சலாகப் போராடி வருகின்றனர்.
இதனால் இந்தப் போர் போர் 3ஆவது வாரமாகத் தொடர்கிறது. உக்ரைன் நாட்டின் பல முக்கிய நகரங்களைக் குறிவைத்து ரஷ்யா தீவிரமாகத் தாக்குதல் நடத்தி வருகிறது.

மக்கள் பாதிப்பு
இது தொடர்பாக இரு தரப்பிற்கும் இடையே பல கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றது. குறிப்பாக இரு நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சர்களும் கடந்த மார்ச் 10ஆம் தேதி துருக்கியில் சந்தித்துப் பேசினர். இருப்பினும் இந்த பேச்சுவார்த்தைகளில் இதுவரை எவ்வித உடன்பாடும் ஏற்படவில்லை. இதன் காரணமாக ரஷ்யாவின் போர் நடவடிக்கை தொடர்ந்து கொண்டே இருக்கிறது. இதனால் உக்ரைனில் உள்ள அப்பாவி மக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ரஷ்ய விமானி
இந்நிலையில் உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர் என்பது முழுக்க முழுக்க தவறான குற்றம் என ரஷ்ய விமானி ஒருவர் கூறும் வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. மேலும், ரஷ்யாவின் நடவடிக்கை தவறானது என்றும் அவர் வீடியோவில் குறிப்பிடுகிறார். மேலும், உக்ரைன் மீதான ரஷ்யாவின் போரை உடனடியாக முடிவுக்குக் கொண்டு வர வேண்டும் என்றும் அவர் அந்த வீடியோவில் அழைப்பு விடுக்கிறார்.

வீடியோ
இணையத்தில் வேகமாகப் பரவும் அந்த வீடியோவில் ரஷ்ய விமானி, "மக்களே, உக்ரைனில் போர் என்பது ஒரு குற்றம். அறிவார்ந்த மக்கள் அனைவரும் இந்த விஷயத்தில் என்னுடன் உடன்படுவார்கள் என நினைக்கிறேன். இந்தப் போரைத் தடுக்க நாம் நம்மால் முடிந்த அனைத்தையும் செய்ய வேண்டும்" என்று அவர் அந்த வீடியோவில் தெரிவித்துள்ளார். இந்த வீடியோவை இணையத்தில் பலரும் பகிர்ந்து வருகின்றனர்..
Recommended Video

ரஷ்ய விமான நிறுவனம்
ரஷ்ய விமான நிறுவனமான ஏரோஃப்ளோட்டின் (Aeroflot) துணை நிறுவனமான போபேடாவில் (Pobeda) அவர் விமானி பணிபுரிவதாக உக்ரைன் தூதர் ஓலெக்சாண்டர் ஷெர்ப் தெரிவித்துள்ளார். உக்ரைன் மீது ரஷ்யா போரை ஆரம்பித்த உடனேயே உலக அளவில் பல்வேறு நாடுகளும் பொருளாதாரத் தடைகளை விதிக்க தொடங்கின. அப்படி முதலில் அனைத்து நாடுகளும் பொருளாதாரத் தடையை விதித்த ரஷ்ய நிறுவனங்களில் இந்த ஏரோஃப்ளோட் நிறுவனம் முதன்மையானதாகும்.
-
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள் -
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மீண்டும் வந்த அதே வரலாற்று சிக்னல்.. தங்கம் விலை மிகப்பெரிய அளவில் சரிகிறது.. இப்போ வாங்கலாமா? -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
கேஸ் சிலிண்டர் விலை ரூ.1,600.. விலை உயர்வை அறிவித்த கையோடு.. மத்திய அரசு சொன்ன முக்கியமான பாயிண்டு












Click it and Unblock the Notifications