ரஷ்ய விமானத்தை ஐஎஸ் தீவிரவாதிகள் குண்டு வைத்து தகர்த்தனர்: அமெரிக்கா
வாஷிங்டன்: ரஷ்ய விமானத்தில் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் வைத்த குண்டு வெடித்து அது விபத்துக்குள்ளானதாக அமெரிக்க உளவுத் துறை தெரிவித்துள்ளது.
எகிப்தில் இருந்து 224 பேருடன் ரஷ்யாவில் உள்ள செயின்ட் பீட்டர்ஸ்பர்கிற்கு கடந்த சனிக்கிழமை கிளம்பிய ரஷ்ய விமானம் சினாய் மாகாணத்தில் வெடித்துச் சிதறியது. இதில் விமானத்தில் இருந்த அனைவரும் பலியாகினர்.
விமானத்தை தாங்கள் தான் சுட்டு வீழ்த்தியாக ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் தெரிவித்தனர். ஆனால் இதை ரஷ்ய அதிகாரிகள் மறுத்தனர்.

இந்நிலையில் இது குறித்து அமெரிக்க உளவுத் துறை அதிகாரி ஒருவர் கூறுகையில்,
ரஷ்ய விமானத்தில் இருந்த உடைமைகள் அல்லது வேறு எங்காவது வைத்த குண்டு தான் வெடித்துச் சிதறியிருக்க வேண்டும் என்றார்.
ரஷ்ய விமானத்தை சினாயில் உள்ள ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் குண்டு வைத்து தகர்த்திருக்கக்கூடும் என்று மற்றொரு அதிகாரி தெரிவித்துள்ளார். ஐஎஸ்ஐஎஸ் அமைப்பினர் தங்களுக்குள் அனுப்பிய மெசேஜ்களை கண்காணித்ததில் இது தெரிய வந்துள்ளதாக அமெரிக்க உளவுத் துறை கூறியுள்ளது.












Click it and Unblock the Notifications