"கமான்.. எல்லாரும் கை தட்டுங்க.." பேசிய பின் ஆர்வமாக பார்த்த அதிபர் புதின்.. ஆனால் கடைசியில் பாருங்க
மாஸ்கோ: ரஷ்ய அதிபராக இருக்கும் புதின், அந்த நாட்டிலேயே மிகவும் வலிமையான ஒரு தலைவராக இருக்கிறார். ஆனால், அவருக்கே ஒரு தர்மசங்கடமான சூழல் ஏற்பட்டுள்ளது. இது தொடர்பான வீடியோ இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது.
ரஷ்ய அதிபராக விளாடிமிர் புதின் இருந்து வருகிறார். கடந்த 2000ஆம் ஆண்டு முதலில் ரஷ்ய அதிபராகப் பொறுப்பேற்ற அவர், அதன் பிறகு அதிகாரத்தைத் தனது கட்டுப்பாட்டிலேயே வைத்துக் கொண்டார்.
எப்போதும் அதிபர் பதவியில் இருக்கத் தேவையான சட்டத் திருத்தங்களைக் கூட புதின் கொண்டு வந்தார். அதாவது, ரஷ்ய சட்டப்படி ஒருவர் இரண்டு முறைக்கு மேல் தொடர்ந்து அதிபராக இருக்க முடியாது. இதன் காரணமாக புதின் 2008க்கு பின் 4 ஆண்டுகள் பிரதமராக இருந்து கொண்டு தனது நெருங்கிய நண்பரை அதிபராக்கினார்.

புதின்: 4 ஆண்டுகள் கழித்து மீண்டும் அவர் அதிபராகிக் கொண்டார். ஒவ்வொரு முறையும் இப்படிச் செய்தால் ரிஸ்க் என்பதால் அந்த விதியையே மாற்றிவிட்டார். இதன் மூலம் புதின் எப்போதுமே அதிபராக இருந்து வருகிறார். ரஷ்யாவில் புதின் மிக மிக ஆதிக்கம் செலுத்தும் ஒரு தலைவராகவே இருந்து வருகிறார். ஆனால், அவருக்கே அங்கு ஒரு தர்மசங்கடமான சூழல் ஏற்பட்டுள்ளது.
இது தொடர்பான வீடியோவும் இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது. அந்த வீடியோவில், நிகழ்ச்சி ஒன்றில் பேசும் புதின், கைதட்டிற்காக பேச்சை சில நொடிகள் நிறுத்துகிறார். ஆனால், பாருங்க கடைசி வரை அவருக்கு அந்த கைதட்டு கிடைக்கவே இல்லை. அங்கே உள்ள கிராண்ட் கிரெம்ளின் அரண்மனையில் புதிதாக நியமிக்கப்பட்ட 17 வெளிநாட்டுத் தூதுவர்களுக்கான நிகழ்ச்சியில் புதின் உரையாற்றினார்.

கைதட்டல் வரவே இல்லை: அந்த வீடியோவில் ரஷ்ய அதிபர் உரையை முடித்ததும் லேசாகச் சிரித்துக் கொண்டிருப்பதை நாம் பார்க்கலாம்.. ரஷ்ய மொழியில் உரையாற்றி வந்த புதின், கடைசியாக "ஆல் தி பெஸ்ட்" என்று ஆங்கிலத்தில் வாழ்த்து சொல்லி தனது உரையை முடித்தார். அதன் பின்னர் கைத்தட்டல் வரும் என புதின் ஆர்வமாகச் சிரித்துக் கொண்டே பார்த்தார். இருப்பினும், கடைசி வரை அந்த கைத்தட்டல் வரவே இல்லை.
இந்த வீடியோவை தங்கள் ட்விட்டரில் பகிர்ந்துள்ள உக்ரைனின் உள் துறை அமைச்சரின் ஆலோசகர் அன்டன் ஜெராஷ்செங்கோ, "ரஷ்ய அதிபர் மாளிகையில் தூதர்கள் கலந்து கொண்ட விழாவில் புடினின் உரையை முடித்த பிறகு கூட யாருமே புதினை பாராட்டி கைதட்டவில்லை" என்று பதிவிட்டு இது தொடர்பான வீடியோவையும் பகிர்ந்துள்ளார். பேசி முடித்த பிறகு புதின் கைத்தட்டலுக்காகக் காத்திருந்தார் என்றும் இருப்பினும் கடைசி வரை புதினுக்கு கைத்தட்டல் கிடைக்கவே இல்லை என்றும் பதிவிட்டுள்ளார்.

அமெரிக்கா மீது தாக்கு: புதின் தனது பேச்சில் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளை மிகக் கடுமையாகச் சாடியிருந்தார். கடந்தாண்டு பிப். மாதம் ஏற்பட்ட போருக்குப் பின், உலகின் பெரும்பாலான நாடுகள் ரஷ்யா மீது பல பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளன. இந்தச் சூழலில் உக்ரைன் போருக்கு அமெரிக்காவும் ஐரோப்பிய ஒன்றியமுமே காரணம் என்று புதின் விமர்சித்துப் பேசினார்.
மேலும், உக்ரைன் சண்டையைப் புரட்சி என்று குறிப்பிட்ட புதின், உக்ரைனில் நிலவும் பிரச்சினைக்கு இது மட்டுமே முடிவு என்பதால் அனைவரும் ரஷ்யாவுக்கு ஆதரவு தர வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். இதையெல்லாம் பேசிவிட்டுத் தான் கடைசியில் கைத்தட்டலுக்காக புதின் காத்திருந்தார். ஆனால், கடைசி வரை அது கிடைக்கவே இல்லை. இது தொடர்பான வீடியோ இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது.
புதின் உடல்நிலை: ஏற்கனவே, கடந்த சில காலமாகவே புதின் உடல்நிலை குறித்து தொடர்ந்து சர்ச்சை கருத்துகள் பரவியே வருகிறது. அதாவது புதினுக்கு மோசமான உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டு உள்ளதாக, குறிப்பாக இரு வகையான கேன்சர் பாதிப்பு, இதனால் அவர் சில காலம் மட்டுமே உயிர் வாழ்வார் என்றெல்லாம் கூட தகவல் வெளியானது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications