நிற்கவே முடியாமல் நடுங்கும் ரஷ்ய அதிபர் புதின்.. உடல்நிலை இவ்ளோ மோசமா?- பரபரப்பை ஏற்படுத்திய வீடியோ!

Subscribe to Oneindia Tamil

மாஸ்கோ : உடல்நிலை பாதிக்கப்பட்டிருப்பதாக கூறப்பட்டு வந்த நிலையில், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினின் சமீபத்திய வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் தீயாகப் பரவி வருகிறது.

விளாடிமிர் புதின் பற்றி சமீபகாலமாக உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் அதிகளவில் உலா வரும் நிலையில், புதிய வீடியோ ஒன்று அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அந்த வீடியோவில் அதிபர் புதினின் கால்கள் நிற்க முடியாமல் நடுங்குவது தெரிகிறது. இந்த வீடியோ சர்வதேச அளவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ரஷ்ய அதிபர் புதின்

ரஷ்ய அதிபர் புதின்


ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினின் உடல்நிலை குறித்து சமீபகாலமாக பல விதமான செய்திகள் வந்த வண்ணம் இருக்கின்றன. உக்ரைன் போரின் மத்தியில், புதினின் உடல்நிலை தொடர்ந்து மோசமடைந்து வருவதாக ஒரு தகவல் வெளியானது. ரஷ்ய அதிபர் புதினுக்கு புற்றுநோய் இருப்பதாகவும், தனது உடல்நலப் பிரச்சினைகள் காரணமாக, ​​முன்னாள் கேஜிபி உளவாளியிடம் ரஷ்யாவின் ஆட்சி அதிகாரத்தை ஒப்படைக்கப் போகிறார் என்றும் ஒரு தகவல் பரவியது.

மயங்கி விழுந்தார்

மயங்கி விழுந்தார்

ஒரு ராணுவக் கூட்டத்தின்போது அதிபர் புதின் மயங்கி விழும் நிலைக்குச் சென்றதாகச் செய்திகள் பரவின. இதையடுத்து, நீண்ட நேரம் பொது இடங்களில் செல்ல வேண்டாம், வீட்டிலேயே ஓய்வெடுக்க வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளதாகவும் தகவல் வெளியானது. இருப்பினும், புதினின் உடல்நிலை குறித்து ரஷ்யா தரப்பில் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை.

கேன்சர்

கேன்சர்

ரஷ்ய அதிபர் புதின் முன்பு போல் ஆரோக்கியமாக இல்லை என்பது இந்தத் தகவல்களின் மூலம் உறுதியாகியுள்ளது. சமீபகாலமாக வெளியாகி வரும் புதினின் புகைப்படங்களில் அவரது முகம் வீங்கி இருப்பது போன்று தோற்றமளித்தது. புதினுக்கு புற்றுநோய் மற்றும் பார்கின்சன் போன்ற கடுமையான நோய்கள் இருக்கலாம் என்றும் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.

 கணைய புற்றுநோய்

கணைய புற்றுநோய்

புதின் கணைய புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அவருக்கு ஏற்பட்டுள்ள நோய்ப் பாதிப்பு தொடர்ந்து தீவிரமடைந்து வருகிறது என்றும் ஒரு தகவல் வெளியானது. அதிகபட்சம் மூன்று முதல் நான்கு மாதங்களில் அவருக்கு ஒரு சிக்கலான அறுவை சிகிச்சை நடத்தப்படும் என்றும் கூறப்பட்டது. மாஸ்கோவில் உள்ள மருத்துவமனை ஒன்றில் புதினுக்கு எப்போது வேண்டுமானாலும் அறுவை சிகிச்சை நடத்தப்படலாம் எனத் தகவல் வெளியானது.

கால்கள் நடுக்கம்

கால்கள் நடுக்கம்

இந்நிலையில், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் இடம்பெற்று இருக்கும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் தீயாகப் பரவி வருகிறது. ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் கிரெம்லினில் நடைபெற்ற விருது வழங்கும் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார். அந்த நிகழ்ச்சியின் போது எடுக்கப்பட்ட வீடியோ ஒன்றில், அதிபர் புதினின் கால்கள் நடுங்குவதும், அவர் நிற்பதற்கே சிரமப்படுவதும் பதிவாகி உள்ளது.

வீடியோ

வீடியோ


ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் திரைப்பட இயக்குனர் நிகிதா மகாய்லோவுக்கு விருது வழங்கிச் சிறப்பித்தார். இந்த விருது வழங்கும் நிகழ்ச்சி கடந்த ஞாயிற்றுக் கிழமை நடைபெற்றது. விழா மேடையில் நின்று கொண்டிருக்கும் போது தான் அதிபர் விளாடிமிர் புதின் கால்கள் நடுங்குவது தெரிகிறது. உடல்நிலை சீராக இல்லை என்பதால், நீண்ட நேரம் வெளியில் செல்வதை தவிர்க்குமாறு அதிபர் விளாடிமிர் புதினுக்கு மருத்துவர்கள் வலியுறுத்தி உள்ளதாக கூறப்பட்ட நிலையில் இந்த வீடியோ அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கழிவை சேகரிக்க


புதினின் உடல்நிலை குறித்து பல்வேறு வதந்திகள் அதிகமாக வெளியாகி வருகிறது. அந்தவகையில் சமீபத்தில் அதிபர் புதினின் கழிவை சேகரிக்க தனியாக ஒருவர் நியமிக்கப்பட்டு இருப்பதாக கூறப்பட்டது. இவர் அதிபர் விளாடிமிர் புதின் வெளிநாட்டு சுற்றுப் பயணங்களின்போது, அவரின் சிறுநீர் மற்றும் கழிவை சேகரித்து அங்கிருந்து மாஸ்கோ கொண்டு வந்து அழித்து விடுவார் எனக் கூறப்பட்டது. அதிபர் விளாடிமிர் புதினின் கழிவுகளை கொண்டு அவரின் உடல்நிலை எப்படி இருக்கிறது என்ற விவரங்களை எதிரிகள் அறிந்து கொள்ளும் வாய்ப்பு இருப்பதால் இவ்வாறு செய்யப்படுவதாக கூறப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+