108 பெண்களை பலாத்காரம் செய்த 67 வயது நபர் கைது- பிறந்த நாளில் இதை கட்டாயம் செய்வானாம்!
மாஸ்கோ: ரஷ்யாவில் 108 பெண்களை பாலியல் பலாத்காரம் செய்த கொடூரன் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
ரஷ்யாவில் கிட்டதட்ட 108 பெண்களை கடுமையாக பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளாக்கியவர் வேல்ரி மெக்ரன்கோவ் என்ற 67 வயதான மனிதன்.
மனித உருவில் உள்ள இந்த கொடூரனை போலீசார் கைது செய்துள்ளனர்.சுமார் 27 வருடங்களாக இவர் காவல்துறையிடம் மாட்டாமல் இக்கொடூர செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளார்.
முகமூடி கொடூரன்:
பெண்களுக்கு முகத்தைக் காட்டாமல், முகமூடி அணிந்து கொண்டு பாலியல் வன்முறையில் இவர் ஈடுபட்டுள்ளார்.மேலும், பலாத்காரத்திற்குப் பின் அப்பெண்களின் நகைகளையும் இவர் திருடி உள்ளார்.
பொறியில் மாட்டிய எலி:
அப்படி பல பெண்களின் வாழ்க்கையில் விளையாடிய இவர், ஒரு பெண்ணின் மூலமே போலீசில் மாட்டிக் கொண்டுள்ளார்.29 வயதான ஒரு பெண்ணை பலாத்காரம் செய்ய முயன்ற போது, அப்பெண் இவருடைய முகமூடியை கழற்றியதும் இல்லாமல் காவலர்களிடமும் அடையாளங்களைக் கூறி பிடித்துக் கொடுத்துள்ளார்.
வயசாகி போய்டுச்சு:
உடனே விரைந்து செயல்பட்ட போலீசார் சம்பவம் நடந்த இடத்திற்கு அருகே சுற்றிக்கொண்டிருந்த இவரை பிடித்துள்ளனர். நீண்ட காலமாக போலீசில் சிக்காமல் தப்பித்துவந்த இவர், வயதான காரணத்தால் தான் அப்பெண்ணிடம் சிக்கி அடி வாங்க நேர்ந்ததென்றும், போலீசிலும் சிக்க நேர்ந்ததாகவும் தெரிய வந்துள்ளது.
பிறந்தநாள் அன்று பலாத்காரம்:
தன்னை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றது இவர் தான் என அப்பெண் போலீசிடம் அடையாளம் காட்டி உறுதிப்படுத்தினார். போலீசார் நடத்திய விசாரணையில் தன்னுடைய பிறந்த நாளன்று எப்போதும் இவர் பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது.
இதெல்லாம் ஒரு அர்ப்பணிப்பு:
மேலும், பிறந்தநாள் பரிசாக தன்னையே பெண்களுக்கு அர்ப்பணித்தாகவும் கூறி தன்னுடைய செயலை நியாயப்படுத்த முயற்சித்துள்ளார்.தற்போது, இவர் போலீஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications