காதலை ப்ரபோஸ் செய்ய 16 டேங்கர்களை இதய வடிவில் நிறுத்திய ரஷ்ய வீரர்.. ஷாக்கான காதலியின் பதில் இதுதான்
Recommended Video
மாஸ்கோ: ரஷ்யாவில் ராணுவ வீரர் ஒருவர் தனது காதலியிடம் தனது காதலை சொல்வதற்காக 16 ராணுவ டேங்கர்களை இதய வடிவில் நிறுத்தி ப்ரபோஸ் செய்த வீடியோ காட்சிகள் வேகமாக பரவி வருகிறது.
உலகம் முழுவதும் 14-ஆம் தேதி காதலர் தினம் கொண்டாடப்பட்டது.. அன்றைய தினம் இளைஞர்கள், பெண்கள் காதல் வயப்பட்டிருந்தால் அவர்கள் தங்கள் இணைக்கு பரிசுகளை பரிமாறிக் கொள்வது வழக்கம்.
அதுபோல் புதிதாக யாருக்கேனும் காதல் மலர்ந்தாலும் அதை அன்றைய தினத்தில் ப்ரபோஸ் செய்து அது வொர்க் அவுட் ஆனால் அடுத்த காதலர் தினத்தை சிறப்பாக கொண்டாடுவதும் உண்டு.

வித்தியாசம்
இந்த காதலை சொல்வதில் பலர் பெரும்பாலும் பயன்படுத்துவது ரோஜா பூக்கள்தான். இதற்காக வெளிநாடுகள், வெளிமாநிலங்களில் இருந்து இறக்குமதியும் செய்யப்படுகிறது. அது போல் ஏற்றுமதியும் செய்யப்படுகிறது. இன்னும் சிலர் வித்தியாசமான முறையில் காதலர் தினத்தை கொண்டாடுவர். அந்த வகையில் ரஷ்யாவைச் சேர்ந்த ராணுவ வீரர் தனது காதலை வித்தியாசமான முறையில் கூறியுள்ளார்.

காதலி
அவர் என்ன செய்தார் என்பதை நீங்களே பாருங்கள். ரஷ்யாவின் அலபினோ பகுதியில் உள்ள ராணு படைப்பிரிவில் வீரராக பணி புரிபவர் டெனிஸ் கென்ஸ்சேவ் (23). இவர் அலெஸ்சாண்டிரியா (19) என்பவரை காதலித்து வந்தார். இது வரை காதலியிடம் தனது காதலை சொல்லாத அந்த இளைஞர், காதலியை காதலர் தினத்தன்று தான் பணியாற்றும் ராணுவத் தளத்திற்கு வரவழைத்துள்ளார்.

16 பீரங்கிகள்
அப்போது ராணுவ தளத்திற்கு வந்த காதலியின் கண்களை மூடியவாறு அந்த இளைஞர் அதன் மையப்பகுதிக்கு அழைத்து சென்றார். அங்கு சக வீரர்களின் உதவியுடன் 16 ராணுவ டேங்கர்கள் அதாவது பீரங்கிகளை ஹார்ட் வடிவில் நிறுத்தி வைத்திருந்தார். அப்போது மெதுவாக கண்களை திறந்த அலெஸ்சாண்டிரியாவுக்கு இதய வடிவிலான பீரங்கிகளை பார்த்ததும் ஆச்சரியம்.
|
ரோஜாப்பூ கொத்து
மேலும் முட்டி போட்டபடி டெனிஸ் கையில் ரோஜாப்பூ கொத்துடன் என்னை காதலிக்கிறாயா என கேட்டார். இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த பெண் உடனே ஆம் என கூறி காதலுக்கு பச்சைக் கொடி காண்பித்தார். இதையடுத்து இருவரும் பரிசுகளை பரிமாறிக் கொண்டனர். 16 ராணுவ டேங்கர்களை ஹார்ட் வடிவில் நிறுத்தி காதலை ப்ரபோஸ் செய்த வீடியோ வைரலாகி வருகிறது.
-
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை -
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி












Click it and Unblock the Notifications