தொடர்ந்து 22 நாளாக ஆன்லைனில் வீடியோ கேம் விளையாடிய சிறுவன் பலி
மாஸ்கோ: ரஷ்யாவில் தொடர்ந்து 22 நாட்கள் ஆன்லைனில் வீடியோ கேம் விளையாடிய 17 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ரஷ்யாவை சேர்ந்த 17 வயது சிறுவன் ருஸ்டம். கம்ப்யூட்டர் கேமில் அதிக ஆர்வம் மிக்க ருஸ்டமிற்கு மிகவும் பிடித்தது 'டிபென்ஸ் ஆப் ஏன்ஷியன்ட்ஸ்' எனும் வீடியோ கேம் தான்.
போர் அரங்கம் போன்ற பின்னணியில் விளையாட வேண்டிய இந்த கேமில் கற்பனையான எதிரிகளை முறியடித்து கொல்ல வேண்டும். தனது ஓய்வு நேரங்களில் எல்லாம் இந்த விளையாட்டை விளையாடுவதையே வழக்கமாகக் கொண்டிருந்துள்ளான் ருஸ்டம்.
கடந்த மாதம் விளையாட்டில் தோற்ற வருத்தத்தில் வீட்டிலிருந்து வெளியே சென்ற ருஸ்டமுக்கு விபத்து ஏற்பட்டது. இதனால், கால் முறிந்து வீட்டில் ஓய்வெடுக்க வேண்டிய நிலை.
எனவே, வீட்டில் ஓய்வில் இருந்த நேரத்தில் ஆன் லைனில் தொடர்ந்து விளையாடி வந்துள்ளான். தொடர்ந்து 22 நாட்களாக சாப்பிடும் நேரம், தூங்கும் நேரத்தைத் தவிர மற்ற நேரங்களில் எல்லாம் வீடியோ கேம் விளையாடுவதிலேயே செலவழித்துள்ளான் ருஸ்டம்.
.
இந்நிலையில், கடந்த 30ம் தேதி சிறுவனின் அறையில் வீடியோ கேம் விளையாடும் சத்தம் திடீரென வராமல் போகவே, அவனது பெற்றோருக்கு சந்தேகம் ஏற்பட்டது. உடனடியாக அவனது அறைக்குள் சென்று பார்த்த போது, சிறுவன் மயங்கிய நிலையில் கிடந்துள்ளான். இதனால், அதிர்ச்சியடைந்த பெற்றோர் உடனடியாக ருஸ்டமை மருத்துவரிடம் அழைத்துச் சென்றுள்ளனர்.
அங்கு ருஸ்டமைப் பரிசோதித்துப் பார்த்த மருத்துவர்கள், ரத்த உறைவால் சிறுவன் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாகத் தெரிவித்துள்ளனர்.
அச்சிறுவன் கடந்த ஓர் ஆண்டில் குறைந்தது 2000 மணிநேரங்கள், அதாவது சராசரியாக தினமும் 6 மணி நேரத்துக்காவது இதே போல விளையாடி இருக்க வேண்டும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை கவனிக்காமல் தனிமையில் விட்டு விடுவதனால் ஏற்படும் பிரச்சினையே இது, எனவே பெற்றோர்கள் கவனத்துடன் இருக்க வேண்டும் என்று உளவியல் நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
கடந்த மார்ச் மாதம், சீனாவில் 23 வயது இளைஞர் சுமார் 19 மணி நேரம் வீடியோ கேம் விளையாடி இதே பிரச்சினையால் உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக












Click it and Unblock the Notifications