ரஷ்யாவின்....ஸ்புட்னிக் வி தடுப்பு மருந்து...நோய் எதிர்ப்பு சக்தி அளிக்கிறது...ஆய்வில் தகவல்!!
மாஸ்கோ: ரஷ்யா கண்டுபிடித்து இருக்கும் கொரோனா தடுப்பு மருந்தான ஸ்புட்னிக் வி பாதுகாப்பானது என்றும் எந்தவித பக்க விளைவுகளையும் ஏற்படுத்தவில்லை என்பது முதல் கட்ட ஆய்வின் முடிவில் தெரிய வந்து இருப்பதாக மருத்துவ வார இதழான தி லான்செட் தெரிவித்துள்ளது.
உலகின் முதல் கொரோனா தடுப்பு மருந்தாக பதிவு செய்யப்பட்டு இருக்கும் ரஷ்யாவின் ஸ்புட்னிக் வி தடுப்பு மருந்தை தொடர்ந்து 42 நாட்கள் ஆய்வு செய்து வந்ததாகவும், இது பாதுகாப்பானது என்றும் முதல் கட்ட ஆய்வின் முடிவு குறித்து ரஷ்யா தெரிவித்துள்ளது. இந்த செய்தி தி லான்செட் மருத்துவ வார இதழில் இடம் பெற்றுள்ளது.

மனித பரிசோதனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட அனைவருக்கும் 21 நாட்களில் நோய் எதிர்ப்பு சக்தி கிடைத்து இருப்பதாக லான்செட் தெரிவித்துள்ளது. அக்டோபர் மாதத்தில் பெரிய அளவில் 40,000 பேருக்கு இந்த மருந்து செலுத்தி ஆய்வு மேற்கொள்ளப்பட இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. அப்போது, இந்த மருந்து இந்தியாவிலும் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் இந்த மருந்தை மூன்றாவது மனித பரிசோதனைக்கு உட்படுத்துவது குறித்து மத்திய அரசுடன் பேசப்பட்டு வருகிறது என்று ரஷ்ய அரசு தெரிவித்து இருந்தது.
ஆனால், குறைந்த மதிப்பீடுகளின் அடிப்படையில் இந்த மருந்தை பதிவு செய்து இருப்பதாகவும், இது எந்தளவிற்கு கொரோனாவை கட்டுப்படுத்தும் என்பது சந்தேகமே என்று அறிவியல் விஞ்ஞானிகள் முன்பு கருத்து தெரிவித்து இருந்தனர். இந்த தடுப்பு மருந்து 28 நாட்களில் டி செல்களை உருவாக்குகிறது என்றும் தெரிவிக்கப்பட்டு இருந்தது. இந்த மருந்தைதான் தனது மகள் போட்டுக் கொண்டதாக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் தெரிவித்து இருந்தார்.
-
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு!












Click it and Unblock the Notifications