தீராத பிரச்சினை.. தீவிர மனஉளைச்சல்.. வெறுப்பில் ரூ. 2.42 கோடி மதிப்புள்ள சொகுசு காரை கொளுத்திய நபர்!
ரஷ்ய யூடியூபர் ஒருவர் தனது பென்ஸ் காரை தீயிட்டு கொளுத்தும் வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
மாஸ்கோ: தொடர்ந்து பிரச்சினை கொடுத்ததால் அதிக விலை கொடுத்து வாங்கிய தனது சொகுசு காரை ரஷ்ய யூடியூபர் ஒருவர் தீயிட்டு கொளுத்தி அதிர்ச்சி கொடுத்துள்ளார்.
Recommended Video
ரஷ்ய நாட்டை சேர்ந்தவர் மிகைல் லித்வின். பிரபல யூடியூபரான இவரை மிஷா என ரசிகர்கள் அழைக்கின்றனர். இவருக்கென ரசிகர்கள் ஏராளம். இந்த சூழ்நிலையில் தான், வெறுப்பில் மிகைல் செய்த ஒரு காரியம் தான் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதாவது கடந்தாண்டு மிகைல் ஒரு மெர்சிடஸ் பென்ஸ் காரை ரூ.2.42 கோடி ரூபாய் கொடுத்து வாங்கினார். ஆனால் அந்த கார், வாங்கியது முதலே தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்துள்ளது. பலமுறை சர்வீஸ் கொடுத்தும் பிரச்சினை தீர்ந்தபாடில்லை.

மன உளைச்சல்
இதுகுறித்து பென்ஸ் நிறுவனத்திடன் மிகைல் பலமுறை தெரியப்படுத்தி இருக்கிறார். அவர்களும் காரை சர்வீஸ் செய்து அனுப்பி இருக்கிறார்கள். ஆனாலும் அந்த கார் அடிக்கடி பிரேக் டவுனாகி வந்திருக்கிறது. இதனால் மிகைல் தீவிர மனஉளைச்சலுக்கு ஆளாகி இருக்கிறார்.

வெறுப்பில் முடிவு
அதிக விலைக் கொடுத்து வாங்கிய கார் தொடர்ந்து பிரச்சினை செய்ததால் வெறுத்துப்போன மிகைல் அந்த காரை தீயிட்டு கொளுத்த முடிவு செய்தார். ஒரு திறந்த வெளி மைதானத்திற்கு காரை எடுத்துச் சென்ற மிகைல், அதன் மீது எரிபொருளை ஊற்றி தீ வைத்துவிட்டார்.

அதிக பார்வைகள்
இதனை வீடியோ பதிவு செய்து தனது யூடியூப் சேனலில் மிகைல் பதிவேற்றிவிட்டார். இந்த வீடியோ ஒரு கோடி பார்வைகளை கடந்து சென்றுகொண்டிருக்கிறது. இதில் வரும் வருமானத்தை வைத்தே அவர் இன்னொரு சொகுசு கார் வாங்கிவிட முடியும் என நெட்டிசன்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

நெட்டிசன்கள் அதிர்ச்சி
விலையுயர்ந்த கார், செல்போன், லேப்டாப் போன்றவற்றை உடைத்து அதனை வீடியோவாக யூடியூப்பில் பதிவேற்றம் செய்வதற்கென்றே சில யூடியூப்பர்கள் இருக்கிறார்கள். ஆனால் அவர்கள் எல்லாம் அதிக பார்வைகளைப் பெறுவதற்காக அப்படி செய்வார்கள். ஆனால் மிகைல் கோபத்தில் இப்படிச் செய்தது தான் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சுமார் இரண்டரை கோடி ரூபாய் காரை இப்படி தீயிட்டு கொளுத்த எப்படி தான் மனசு வந்ததோ என நெட்டிசன்கள் அதிர்ச்சியந்துள்ளனர்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக












Click it and Unblock the Notifications