Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ரஷ்யா பயங்கர திட்டத்தில் உள்ளது.. மோசமாக தாக்க போகிறார்கள்.. புடினிடம் பேசிய டிரம்ப்.. ஷாக் தகவல்

Subscribe to Oneindia Tamil

மாஸ்கோ: அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மற்றும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் ஆகியோர் நேற்று போன் மூலம் அவசரமாக உரையாடினர். , ரஷ்ய போர் விமானங்களுக்கு எதிரான உக்ரைனின் டிரோன் தாக்குதல் குறித்து ஒரு மணி நேரத்திற்கும் மேலாக இவர்கள் பேசியுள்ளனர்.

donald trump vladimir putin ukraine russia war

ட்ரம்பின் சமூக ஊடக பதிவு

டொனால்ட் ட்ரம்ப் தனது ட்ரூத் சோஷியல் மீடியா தளத்தில், இந்த அழைப்பு சுமார் ஒரு மணி நேரம் 15 நிமிடங்கள் நீடித்தது என்று குறிப்பிட்டுள்ளார். இரு தலைவர்களும் ரஷ்ய விமான தளங்கள் மீது உக்ரைன் நடத்திய டிரோன் தாக்குதல், இரு தரப்பினரும் நடத்திய பல்வேறு தாக்குதல்கள் குறித்தும் விவாதித்தனர்.

ரஷ்யாவில் உக்ரைன் நடத்திய திட்டமிட்ட டிரோன் தாக்குதல் காரணமாக 41 ரஷ்ய போர் விமானங்கள் அழிக்கப்பட்டு உள்ளது. ரஷ்யா - உக்ரைன் போரில் ரஷ்யாவிற்கு ஏற்பட்ட மிகப்பெரிய இழப்புகளில் ஒன்றாக இது பார்க்கப்படுகிறது. ஆபரேஷன் ஸ்பைடர் வெப் என்ற பெயரில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டது.

ரஷ்யா உக்ரைன் போர் உச்சம் அடைந்து உள்ளது. இரண்டு நாடுகளுக்கு இடையிலான போர் ஒப்பந்தங்கள், அமைதி பேச்சுவார்த்தைகள் எதுவும் பயனளிக்கவில்லை. இப்படிப்பட்ட நிலையில்தான் உக்ரைன் நாட்டின் டிரோன்கள் ரஷ்யா மீது இரவு கடுமையான தாக்குதல்களை மேற்கொண்டது. இதில் ரஷ்யாவின் 41 போர் விமானங்கள் அழிக்கப்பட்டது. முக்கியமாக ரஷ்யாவின் குண்டு போடும் போர் விமானங்களான Tu-95 மற்றும் Tu-22 அழிக்கப்பட்டது. உக்ரைன் மீது குண்டுகளை வீச ரஷ்யா இந்த போர் விமானங்களை பயன்படுத்தி வந்தது.

பதிலடி தரப்போகும் புடின்

மர்மன்ஸ்க், இர்குட்ஸ்க், இவானோவோ, ரியாசான் மற்றும் அமுர் பகுதிகளில் உள்ள ரஷ்ய இராணுவ விமானநிலையங்களை குறிவைத்து ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் உறுதிப்படுத்தி உள்ளது. மர்மன்ஸ்க் மற்றும் இர்குட்ஸ்கில் நடத்தப்பட்ட தாக்குதல்களைத் தவிர, நாட்டின் அனைத்து இடங்களில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களை முறியடித்துவிட்டதாக ரஷ்யா கூறி உள்ளது.

விளாடிமிர் புடின் இந்த விமான நிலையத் தாக்குதல்களுக்கு மிகவும் வலுவாக பதிலளிக்கும் திட்டத்தில் இருப்பதாக குறிப்பிட்டதாகக் கூறிய டொனால்ட் ட்ரம்ப், இது ஒரு நல்ல உரையாடல், ஆனால் உடனடியாக அமைதிக்கு வழிவகுக்கும் உரையாடல் அல்ல என்று கூறினார்.

அணு ஆயுதத்தை கையில் எடுக்கும் ரஷ்யா?

சிறிய ரக சூசைட் டிரோன்களை கருப்பு உள்ளிட்ட நிறங்களில் பெயிண்ட் செய்து, மிக தாழ்வாக ரேடாரில் படமால் பறக்கவிட்டு, போர் விமானங்கள் ஹேங்கரில் இருக்கும் போது அருகில் சென்று அதை தாக்கி அழித்து உள்ளது உக்ரைன். சிறிய ரக டிரோன்கள் என்பதால் இதனால் மொத்தமாக போர் விமானங்களை அழிக்க முடியாது.

ஆனால் இவை சூசைட் டிரோன்கள். நேராக போர் விமானங்கள் மீது விழுந்து வெடித்து விமானங்களை தீ பிடிக்க வைக்கும். அப்படித்தான் இந்த தாக்குதல்கள் உக்ரைன் நடத்தி உள்ளது. இதில் மர்மன்ஸ்க், இர்குட்ஸ்க், இவானோவோ, ரியாசான் மற்றும் அமுர் ஆகியவை ரஷ்யாவின் போர் விமானப்படை தளங்களில் முக்கியமானது ஆகும். இதனால் ரஷ்யாவின் விமானப்படை மிக மோசமான, எதிர்பார்க்காத சேதங்களை சந்தித்து உள்ளது.

300க்கும் மேற்பட்ட டிரோன்களை ஒரே சமயத்தில் அனுப்பி ரஷ்யாவின் விமானப்படையை உக்ரைன் அடித்து நொறுக்கி உள்ளது. இதன் மெல்லாம் இரண்டு நாட்டு போர் அடுத்த கட்டத்திற்கு சென்று உள்ளது. போர் கடுமையான நிலையை அடைந்து உள்ளது.

இதற்கு பதிலடி தர ரஷ்யா மிக கடுமையான முடிவுகளை எடுக்கலாம் என்று கூறப்படுகிறது. அதாவது உக்ரைனுக்கு பதிலடி கொடுக்க ரஷ்யா அடுத்த எந்த கட்டத்திற்கும் செல்லும் என்றும் கூறப்படுகிறது.

ஈரான் அணு ஆயுத பேச்சுவார்த்தை

ஈரானுடனான அணு ஆயுத பேச்சுவார்த்தை குறித்தும் இந்த விவாதத்தில் பேசப்பட்டது. விளாடிமிர் புடின் பேச்சுவார்த்தையில் பங்கேற்க முன்வந்ததாகவும், புடின் பேச்சுவார்த்தைக்கு வருவது இந்த பிரச்னையை விரைவாக ஒரு முடிவுக்கு கொண்டுவர உதவிகரமாக இருக்கலாம் என்றும் டொனால்ட் ட்ரம்ப் கூறினார்.

உக்ரைன் நெருக்கடிக்கு தீர்வு காண வெள்ளை மாளிகை தொடர்ந்து முயற்சித்து வரும் நிலையில்,ரஷ்ய மற்றும் உக்ரைன் அதிகாரிகள் இடையே நேரடி தொடர்புகள் இருந்தபோதிலும், போர் நிறுத்த உடன்பாடு இன்னும் எட்டப்படவில்லை. ரஷ்யா தனது படைகளை எல்லைகளில் குவித்து பிப்ரவரி 2022 இல் உக்ரைன் மீது முழு அளவிலான படையெடுப்பைத் தொடங்கியது. இந்த போர் மூன்றாம் ஆண்டில் நுழைந்துள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+