For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

காதலன் பக்கத்தில் இருக்கும்போதே நடிகையை மடக்க முயன்ற ட்ரம்ப்!

By Veera Kumar
Google Oneindia Tamil News

வாஷிங்டன்: காதலரோடு இருந்தபோதே தன்னை டொனால்ட் ட்ரம்ப் டேட்டிங்கிற்கு அழைத்தார் என்று ஹாலிவுட் நடிகை சல்மா ஹயக் தெரிவித்துள்ளது சர்ச்சையை கிளப்பியுள்ளது.

திரைப்பட விழா ஒன்றில் கலந்துகொண்ட சல்மா, தன்னிடம் டிரம்ப் செய்த சேட்டைகளைப் பற்றி விளக்கி கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அவர் கூறுகையில், "நிகழ்ச்சி ஒன்றில் நான் என் அப்போதைய காதலருடன் அமர்ந்திருந்தபோது, திடீரென பின்னால் இருந்து ஒருவர் என் மீது கோர்ட்டை தூக்கிப் போட்டார். நான் திடுக்கிட்டு திரும்பிப் பார்த்தேன். அங்கு டொனால்ட் டிரம்ப் உட்கார்ந்திருந்தார்.

குளிருக்காக போர்த்தினாராம்

குளிருக்காக போர்த்தினாராம்

இதைப் பார்த்ததும், என் காதலர், டிரம்பை பார்த்து ‘ஹலோ' என்று கூறினார். இதைப் பார்த்து சற்று திடுக்கிட்டார் ட்ரம்ப். ‘மன்னிக்கவும், அது உங்கள் காதலியா? குளிரால் நடுங்கினார், எனவேதான், என்னுடைய கோர்ட்டை அவர் மீது போர்த்தினேன் என்று கூறி சமாளித்தார்.

செல்போன் எண்கள்

செல்போன் எண்கள்

இதன்பிறகு, அன்றிரவு உணவு விருந்துக்கு, என்னையும், என் காதலரையும் அழைத்திருந்தார் டிரம்ப். இரவு உணவு சாப்பிடும்போது, என் காதலருடன் மட்டுமே பேசிக் கொண்டிருந்தார். இறுதியில் எங்கள் இருவரின் செல்போன் எண்களையும் கேட்டு வாங்கிக் கொண்டார். அதன் பிறகு டிரம்ப், என்னுடைய காதலருடன் பேசவே இல்லை.
ஆனால் நைசாக எனக்கு போன் செய்து டேட்டிங் வருமாறு கூப்பிட்டார்.

கட்டளை

கட்டளை

நானோ, "எனக்கு காதலர் இருக்கிறார்' என்றேன். அதற்கு அவர், ‘உங்கள் காதலர் பெரிய ஆளே இல்லை. நீங்கள் என்னுடன் தான் வெளியே செல்ல வேண்டும்' என்று கட்டளையிடும் தொனியில் பேசினார். இருப்பினும் அதை நான் மறுத்துவிட்டேன்" என்று சல்மா தெரிவித்துள்ளார்.

தவறாக எழுதினார்

தவறாக எழுதினார்

இவ்வாறு சல்மா தெரிவித்ததால்தான், நேஷனல் என்கொய்ரர் பத்திரிகையில், சல்மா ஹயக் பற்றி டொனால்ட் தவறாக எழுதியுள்ளதாாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. ஆனால், சல்மா ஹயக், குள்ளமாக இருப்பதால்தான் அவரை நான் நிராகரித்தேன் என்று அதிபர் டிரம்ப் கூறியிருந்தார்.

English summary
When Salma Hayek refused to go out with him, Donald Trump put out an article against her in the National Enquirer.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X