செத்து செத்து விளையாடுவோமா... "டெரர்" கிளப்பும் சீனத்து "முத்துக்காளை"!
ஷாங்காய் சீனாவில் சமாதி 4டி என்ற கேம் ஷோவிற்கு மக்களிடையே அதிக வரவேற்பு கிடைத்துள்ளது. இது அப்படியென்ன விளையாட்டு என்கிறீர்களா... நம்ம பாஷையில் சொல்வதென்றால் செத்து செத்து விளையாடுவது.
மனிதனுக்கு எப்போதுமே சாவு குறித்த சிந்தனை மனதின் ஓரத்தில் இருந்து கொண்டே தான் இருக்கும். மரணத்தின் ருசியை மற்றவர்களுக்கு விவரிக்க முற்பட்ட பலருக்கு தோல்வியே பரிசாகக் கிடைத்திருக்கிறது.
இதனை ஒரு சவாலாகக் கொண்டு சீனாவில் ஒரு கேம் ஷோ நடத்தப்பட்டு வருகிறது. அதன் பெயர் ‘சமாதி 4டி மரண அனுபவம்'.

பேய், பிசாசு...
இந்த கேம்ஷோ நடைபெறும் அரங்கத்தினுள் பேய், பிசாசு முகமூடி அணிந்த மனிதர்கள் ஆங்காங்கே உலவிக் கொண்டே இருப்பார்கள். அது தவிர வெட்டப்பட்ட கை கால்களைப் போன்ற பிளாஸ்டிக் உறுப்புகள் ஆங்காங்கே தொங்கிக் கொண்டிருக்கும்.

வென்றால் மகாதேவி...
மரணத்தில் இருந்து தப்பிப்பது எப்படி என்பதை அடிப்படையாகக் கொண்டு இங்கு போட்டிகள் நடத்தப்படும். இதில் வெற்றி பெறுபவர்களுக்கு பரிசுகள் உண்டு. மாறாக தோல்வி அடைந்தால் செயற்கையான மரண அனுபவம் கிடைக்கும்.

வெப்பக்காற்று...
அதாவது, போட்டியில் தோற்றவர்களை சவப்பெட்டியில் வைத்து மூடி விடுவார்கள். பின் வெப்பக் காற்றை உள்ளே செலுத்துவார்கள். நெருப்பு எரிவது போன்ற விளக்கு வெளிச்சமும் பெட்டிக்கு உள்ளே பாய்ச்சப்படும்.

மறுபிறப்பு...
இது தவிர 4டி முறையில் சில திகில் காட்சிகளையும் பெட்டியில் படுத்திருப்பவர்களுக்குக் காட்டுவார்கள். பிறகு மெல்ல மெல்ல மாத்திரை வடிவத்தில் மறுபிறப்பு உருவாகும். நல்லவேளை மீண்டும் பிறந்து விட்டோம் என அப்போது தான் பெட்டியில் படுத்திருப்பவர்கள் நிம்மதிப் பெருமூச்சு விடுவார்கள்.

பயம்...
அதன்பிறகு பெட்டியைத் திறந்து அவர்களை வெளியே அனுப்புவார்கள். பலர் இந்த மறுபிறப்பு அனுபவத்தை மிகவும் ரசிக்கிறார்களாம். சிலரோ பாதியிலேயே பயத்தில் வெளியேறி விடுகிறார்களாம்.

மகிழ்ச்சி...
இந்த கேம்ஷோ ஆரம்பித்த குறுகிய காலத்திலேயே அதற்கு வரவேற்பு அதிகரித்திருப்பது கேம் ஷோ நடத்துபவர்களை மகிழ்ச்சியடைய வைத்துள்ளது.

ஷாங்காய்க்குப் போய் சாகலாம்!
இந்த வினோதமான, திரில்லான, திகிலான விளையாட்டு ஷாங்காயில் படு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. அடுத்தமுறை சீனாவுக்குப் போனால் ஷாங்காய்க்குப் போய் "செத்துட்டு" வாங்க!
-
சீனாவில் ஆடு மேய்க்கும் வேலைக்கு மாதம் 1 லட்சம் சம்பளம்! பண்ணையில் திரளும் பட்டதாரிகள்! பின்னணி என்ன -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications