ஓரினச்சேர்க்கையாளர்கள் மிருகங்களை விட மோசமானவர்கள்: பிரபல குத்துச் சண்டை வீரர் மேன்னி

Subscribe to Oneindia Tamil

மணிலா: பிலிப்பைன்ஸை சேர்ந்த பிரபல குத்துச் சண்டை வீரர் மேன்னி பாகியாவோ ஓரினச்சேர்க்கையாளர்கள் விலங்குகளை விட மோசமானவர்கள் என்று கூறி சர்ச்சையில் சிக்கியுள்ளார்.

பிலிப்பைன்ஸை சேர்ந்த பிரபல குத்துச் சண்டை வீரர் மேன்னி பாகியாவோ(37) தேர்தலில் போட்டியிடுகிறார். இந்நிலையில் அவர் பேசிய வீடியோ ஒன்றை உள்ளூர் டிவி சேனல் திங்கட்கிழமை ஒளிபரப்பியது.

Same-sex couples are worse than animals, says boxing ace Manny Pacquiao

அந்த வீடியோவில் மேன்னி கூறியிருப்பதாவது,

ஓரினச் சேர்க்கையாளர்கள் விலங்குகளை விட மோசமானவர்கள். விலங்குகளுக்காவது ஆண் எது, பெண் எது என்ற வித்தியாசம் தெரியும் என்று தெரிவித்துள்ளார்.

மேன்னியின் பேச்சை கேட்ட ஓரினச்சேர்க்கையாளர்கள் பலர் அவருக்கு எதிராக பொங்கி எழுந்துள்ளனர். எங்களை பற்றி சரியாகத் தெரியாமல் மேன்னி அவ்வாறு பேசியுள்ளார் என்று ஓரினச்சேர்க்கையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

மேனி ஒரு நயவஞ்சகர் என்று பிலிப்பைன்ஸை சேர்ந்த காமெடி நடிகர் வைஸ் கன்டா மற்றும் பாடகர் ஐசா செகுவேரா ஆகியோர் தெரிவித்துள்ளனர். வைஸும், செகுவேராவும் ஓரினச்சேர்க்கையாளர்கள்.

ஓரினச்சேர்க்கையாளர்கள் கடும் கண்டனம் தெரிவித்த பிறகு தனது பேச்சிற்காக மன்னிப்பு கேட்டுள்ளார் மேன்னி.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+