ஐஸ் பக்கெட் சாவாலில் ஜெயித்த ‘சாம்சங்’ மொபைல்... ஐபோன், நோக்கியாவுக்கு சவால்!!
நியூயார்க்: சமீபத்திய பரபரப்புகள் மூலம் விளம்பரம் செய்து கொள்வதும் ஒரு வகை வியாபார யுக்தி தான். அந்தவகையில், சாம்சங் மொபைல் நிறுவனம் தனது வாட்டர் புரூப் தன்மையை நிரூபிக்கும் வகையில் ஐஸ் பக்கெட் சவாலை மேற்கொண்டு பரபரப்பை உண்டாக்கியுள்ளது.
இணைய உலகின் இப்போதைய ட்ரென்ட் ஐஸ் பக்கெட் சவால் தான். ஏ.எல்.எஸ். நோய் தொடர்பான விழிப்புணார்வை ஏற்படுத்துவதற்காக ஏ.எல்.எஸ். அமைப்பு அறிமுகப் படுத்தியது தான் இந்த ஐஸ்பக்கெட் சவால்.
இந்தச் சவாலில் தோற்பவர்கள் இந்த அமைப்பிற்கு நிதி தர வேண்டும். இந்த நிதி ரூ. 100 கோடியைத் தாண்டி விட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மாறாக இந்தச் சவாலில் ஜெயிப்பவர்கள் வேறு மூவரை இந்தச் சவாலை மேற்கொள்ளுமாறு அழைப்பு விடுக்க வேண்டும்.
இந்நிலையில், சாம்சங் மொபைல் போன் இந்த ஐஸ் பக்கெட் சவாலை மேற்கொண்டுள்ளது. இது தொடர்பான வீடியோ யூடியூப்பில் வெளியிடப்பட்டுள்ளது.

வாட்டர் புரூப்...
சாம்சங் நிறுவனத்தின் புதிய அறிமுகமான சாம்சங் காலெக்ஸி எஸ் 5 ஸ்மார்ட் போன் நீரினால் பாதிப்படையாதது. அதனை நிரூபிக்கும் வகையில் இந்த போன் ஐஸ் பக்கெட் சவால் செய்துள்ளது.

ஐஸ் பக்கெட் சவால்...
இது தொடர்பான வீடியோவில் சாம்சங் காலெக்ஸி போன் ஐஸ் தண்ணியில் குளித்தும் ஒன்றும் ஆகாமல் அப்படியே உள்ளது போன்ற காட்சிகள் உள்ளன. இந்த வீடியோஅவை சுமார் 28 லட்சத்துக்கும் அதிகமானோர் பார்வையிட்டுள்ளனர்.

நீங்க ரெடியா...?
பின்னர், சாம்சங் போனானது இதே சவாலை நீங்களும் செய்து காட்டுங்கள் பார்க்கலாம் என ஐபோன் 5 எஸ், நோக்கியா லூமியா 930 மற்றும் எச்டிஎஸ் ஒன் 8 ஆகியவற்றிற்கு சவால் விடுத்துள்ளது.

விமர்சனங்கள்...
நல்ல நோக்கத்திற்காக மேற்கொள்ளப்படும் இந்த ஐஸ் பக்கெட் சவாலை, இப்படி விளம்பர நோக்கில் பயன்படுத்தலாமா என்ற கேள்விக்கும் விமர்சனத்திற்கும் சாம்சங் இலக்காகியுள்ளது குறிப்பிடத்தக்கது..
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications