சான்ஃப்ரான்சிஸ்கோவின் ஒருநாள் மேயர் ஆன நாய் ஃப்ரீடா!
சான்ஃப்ரான்சிஸ்கோ: நம் ஊரில் ஒருநாள் முதல்வர்கள், தற்காலிக முதல்வர்களை பார்த்திப்போம். சிறுவனின் ஆசையை பூர்த்தி செய்ய ஒருநாள் போலீஸ் கமிஷனராக நியமிக்கப்பட்டதை கூட அறிந்திருப்போம். ஆனால் நாய் ஒன்று ஒருநாள் மேயராக பதவி வகித்துள்ளது. அமெரிக்காவில்தான் இந்த சுவாரஸ்யம் நிகழ்ந்துள்ளது.
அமெரிக்காவின் சான் ஃப்ரான்சிஸ்கோ நகரில் நேற்று (வியாழக்கிழமை) ஒரு நாள் மேயராக 'ஃப்ரீடா' என்ற நாய் நியமிக்கப்பட்டது. காலை முதலே 'ஃப்ரீடா'-வை புகைப்படம் எடுக்க கூட்டம் கூட்டமாக அங்கு பத்திரிகையாளர்களும் பொது மக்களும் சான்ஃப்ரான்சிஸ்கோ மேயர் அலுவலகத்துக்கு விரைந்தனர். இதனால் நேற்று 'ஃப்ரீடா'-வுக்கான தினமாக சான் ஃப்ரான்சிஸ்கோவில் கொண்டாடப்பட்டது.

சான் ஃப்ரான்சிஸ்கோ நகரில் ஏ.சி.சி. என்ற விலங்குகள் பராமரிப்பு மற்றும் காப்பகம் நடத்தப்பட்டு வருகிறது. இங்கு நாடு முழுவதும் உள்ள ஆதரவற்ற வீட்டு விலங்குகளுக்கு ஆதரவு அளிக்கப்பட்டு பாதுகாக்கப்படுகிறது. ஏ.சி.சி. அமைப்பு இந்த வருடம் 25-ம் ஆண்டு விழாவில் அடியெடுத்து வைத்துள்ளதை அடுத்து, இந்த வருடம் சான் ஃப்ரான்சிஸ்கோ நகரில் உள்ள இருக்கும் நாய்கள் உரிமையாளர்களிடம் நிதி திரட்டப்பட்டது.
இந்த நிலையில், சான் ஃப்ரான்சிஸ்கோவைச் சேர்ந்த டீன் க்ளார்க் என்ற வீட்டு விலங்குகள் ஆர்வலர் ஏ.சி.சி. அமைப்புக்கு தாராள நிதி வழங்கி உள்ளார். இதனால் அவருக்கு ஏ.சி.சி. அமைப்பால் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
சாலை ஓரம் இருந்த ஆதரவற்ற நாய் ஒன்றை அவர் தத்தெடுத்து அதற்கு 'ஃப்ரீடா' என்று பெயர் சூட்டி ஆர்வத்துடன் வளர்த்து வருவது ஏ.சி.சி. அமைப்புக்கு தெரியவந்தது.
'ஃப்ரீடா'-வுக்கு அழகான ஆடைகளை அணிவித்தும் ஃபேஸ்புக் பிரபலமடைய செய்துள்ளார். இதுதான் செல்லப் பிராணிகள் மீதான அன்பை வெளிப்படுத்தும் வகையிலும், டீன் க்ளார்க்கின் சேவைக்கு பாராட்டு தெரிவிக்கும் வகையிலும், 'சான் ஃப்ரான்சிஸ்கோ நகரின் ஒரு நாள் மேயராக ஃப்ரீடா' தேர்வு செய்யப்பட்டது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications