சாதனை மேல் சாதனை...பிரிஸ்பேன் டென்னிசில் சாம்பியன் பட்டத்தை ருசித்தது சானியா - ஹிங்கிஸ் ஜோடி...
பிரிஸ்பேன்: பிரிஸ்பன் சர்வதேச டென்னிஸ் போட்டியில் சானியா மிர்சா-மார்ட்டினா ஹிங்கிஸ் ஜோடி சாம்பியன் பட்டம் வென்றது
ஆஸ்திரேயாவின் பிரிஸ்பேன் நகரில் சர்வதேச டென்னிஸ் போட்டி நடைபெற்றது. இதில் மகளிருக்கான இரட்டையர் பிரிவு இறுதிப் போட்டியில் உலகத் தரவரிசையில் முதல் இடத்தில் இருக்கும் சானியா (இந்தியா) - மார்ட்டினா ஹிங்கிஸ் (ஸ்விட்சர்லாந்து) ஜோடி, ஜெர்மனியைச் சேர்ந்த ஏஞ்ஜலிக்யூ கெர்பர் - அன்ட்ரியா பெட்கோவிக் ஜோடியை எதிர்த்து விளையாடியது.

முதல் செட்டில் அனுபவம் வாய்ந்த சானியா ஜோடிக்கு, ஜெர்மனி ஜோடி கடும் சவால் விடுத்தது. இரு ஜோடியும் மாறிமாறி புள்ளிகளை கைப்பற்றியது. கடும் முயற்சிக்குப்பின் முதல் செட்டை சானியா ஜோடி 7-5 என கைப்பற்றியது. ஆனால், 2-வது செட்டில் சானியா ஜோடி நீண்ட நேரம் எடுத்துக் கொள்ளவில்லை. அந்த செட்டை அதிரடியாக 6-1 என எளிதில் வென்று 2-0 என நேட்செட்டில் சானிய ஜோடி, வெற்றி பெற்று சாம்பியன் படத்த்தை தட்டிச்சென்றது.
இந்த ஆண்டு தனது முதல் சாம்பியன் பட்டத்தை சானியா ஜோடி பதிவு செய்துள்ளது. இதுவரை தொடர்ச்சியாக 25 இறுதிப்போட்டிக்கு இந்த ஜோடி முன்னேறியுள்ளது.
2012ல் இத்தாலியின் ஷரா எரானி-ரோபர்ட்டா வின்ஸி ஜோடி இதேபோன்று தொடர்ச்சியாக 25 வெற்றிகளை பெற்றிருந்தது. இந்த ஜோடியின் வெற்றி விம்பிள்டனில் தடுத்து நிறுத்தப்பட்டது. 1994ம் ஆண்டு ஜிஜி பெர்ணான்டஸ்-நடாஷா ஜிவரெவொ ஜோடி தொடர்ச்சியாக 28 பெற்றிகளை பெற்று சாதனை படைத்தது. இதை எட்டிப் பிடிக்க சானியா ஜோடிக்கு இன்னும் 2 வெற்றிகளை பெற வேண்டியுள்ளது.
கடந்த ஆண்டு சானியா-ஹிங்கிஸ் ஜோடி 9 பட்டங்கள் வென்று அசத்தியது. மேலும் கடைசியாக பங்கேற்ற 5 தொடர்களிலும் கோப்பை வென்றுள்ள இந்த ஜோடி தொடர்ச்சியாக பெறும் 26வது வெற்றி இதுவாகும்.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications