GSAT-31: விண்ணில் பாய்ந்தது 'ஜிசாட்-31' செயற்கைக்கோள்... இணைய தள சேவை ஸ்பீடு பறக்கும்
கயானா: தகவல் தொடர்பு சேவைகளுக்கான, 'ஜிசாட்-31' செயற்கைக்கோள், பிரெஞ்சு கயானாவில் இருந்து விண்ணில் வெற்றிகரமாக செலுத்தப்பட்டது.
தகவல் தொடர்பு சேவைகளை மேம்படுத்தும் வகையில் ஜிசாட் - 31 என்ற 40-வது செயற்கைக்கோளை இஸ்ரோ ஏவ திட்டமிட்டது. இதன்படி பிரெஞ்ச் கயானாவில் இருந்து, ஏரியான் - 5 ராக்கெட் மூலம் இன்று அதிகாலை 2.30 மணிக்கு விண்ணில் வெற்றிகரமாக செலுத்தப்பட்டது.

2 ஆயிரத்து 535 கிலோ எடை கொண்ட இந்த செயற்கைகோள் தகவல் பரிமாற்றம், பெருங்கடல் ஆய்வு குறித்த தகவல்களை அளிக்கும். தொலை தொடர்பு மற்றும் தொலைக்காட்சி சேவைகளை பெற, இந்த செயற்கைக்கோள் உதவும். தகவல் தொடர்பு சேவைகளுக்கான, 'ஜிசாட்-31' செயற்கைக்கோள், பிரெஞ்ச் கயானாவில் இருந்து விண்ணில் செலுத்தப்பட்டது.
பூமியில் இருந்து 14,638 கிலோ மீட்டர் தொலைவில் இந்த செயற்கைக்கோள் விண்ணில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டது. செல்போன் சேவை, டி.டி.ஹெச் சேவை, டிஜிட்டல் செயற்கைக்கோள் செய்தி சேகரிப்பு, தொலைக்காட்சி இணைப்பு போன்ற பயன்பாட்டிற்கு இந்த செயற்கைக்கோள் உதவும். இந்த செயற்கைக் கோளில் மல்டி-ஸ்பாட் பீம் ஆண்டெனா உள்ளது. இதன் ஆயுட்காலம் 15 ஆண்டுகளாகும்.
முன்னதாக, இந்தியாவில் இணைய தள சேவை வேகத்தை அதிகரிக்க உருவாக்கப்பட்ட ஜி சாட்-11 எனும் அதி நவீன செயற்கைக் கோள் பிரெஞ்ச் கயானாவில் இருந்து ஏரைன்-5 ராக்கெட் மூலம் கடந்த டிசம்பரில் செலுத்தப்பட்டது.
-
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி! -
ரயிலில் உங்க சீட்டில் வேறு யாரேனும் இருந்தால் ரூ.20,000 இழப்பீடு? இந்த உத்தரவு பற்றி தெரியுமா












Click it and Unblock the Notifications