பெண்களுக்கு ராணுவத்தில் சேர அனுமதி.. சவுதி முடி இளவரசர் அடுத்த அதிரடி!
பெண்களுக்கு ராணுவத்தில் சேர அனுமதி அளித்து சவுதி முடி இளவரசர் அதிரடி உத்தரவை பிறப்பித்து இருக்கிறார்.
ரியாத்: பெண்களுக்கு ராணுவத்தில் சேர அனுமதி அளித்து சவுதி முடி இளவரசர் அதிரடி உத்தரவை பிறப்பித்து இருக்கிறார். சமீப காலமாக சவுதியில் நிறைய சீர்திருத்தங்கள் கொண்டு வரப்பட்டு வருகிறது.
மேலும் இன்னும் நிறைய சமுதாய சீர்திருத்தங்கள் சவுதியில் கொண்டு வரப்படும் என்றும் கூறப்பட்டு இருக்கிறது. இந்த சீர்திருத்தங்களுக்கு பின்பாக சவுதி முடி இளவரசர் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கு இஸ்லாமிய அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து இருக்கிறது. சவுதியில் பெண்கள் பர்தா அணிய கட்டாயம் இல்லை என்று சட்டம் கொண்டுவரப்படலாம் என்று கூறப்பட்டு இருக்கிறது.

முகமது பின் சல்மான்
சவுதியின் முடி இளவரசராக முகமது பின் சல்மான் பதவியேற்றத்தில் இருந்து அங்கு நிறைய மாற்றங்கள் கொண்டு வருகிறார். அங்கு இருக்கும் முக்கிய அதிகாரிகளின் வீட்டில் சொத்துக்கள் எவ்வளவு இருக்கிறது என்று சோதனை நடத்தினார். முடி இளவரசர் மிகவும் கராறானவர் என்றும் கூறப்பட்டது.

தியேட்டர் கட்டப்பட்டும்
இந்த நிலையில் கடந்த மாதம் அங்கு தியேட்டர் கட்டப்படும் என்று கூறப்பட்டது. மார்சில் இருந்து சவுதியில் தியேட்டர்கள் திறக்கப்படும். எண்ணெய் பொருட்களின் விலை குறைவால் சவுதி அதிகம் பாதிக்கப்பட்டு இருக்கிறது. இந்த பொருளாதார பாதிப்பைசமாளிக்க தற்போது பொழுதுபோக்கு விஷயங்களுக்கு அனுமதி அளிக்கப்படுகிறது.

பெண்களுக்கு லைசன்ஸ்
அதேபோல் முன்பு சவுதியில் பெண்கள் கார் ஓட்டுவது தடை செய்யப்பட்டு இருந்தது. அதை முகமது பின் சல்மான் நீக்கினார். 2018ல் இருந்து பெண்கள் கார் ஓட்டலாம் என்று அவர் அறிவித்தார். பலரும் அவரின் இந்த முடிவுக்கு வாழ்த்து தெரிவித்து இருந்தனர்.

ராணுவத்தில் சேரலாம்
தற்போது முதல்முறையாக பெண்கள் ராணுவத்தில் சேரலாம் என்றும் சல்மான் கூறியுள்ளார். சாதாரண வீராங்கனையாக இல்லாமல் பெரிய பொறுப்புகளும் பெண்களுக்கு ராணுவத்தில் வழங்கப்பட இருக்கிறது. இது அந்த நாட்டில் மட்டும் இல்லாமல் உலகம் முழுக்க அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த வருடம் பெண்கள் பணிக்கு அமர்த்தப்படுவார்கள்.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு












Click it and Unblock the Notifications