சவுதியில் கொலையாளி இந்தியர், ஹெராயின் கடத்திய பாகிஸ்தானியர் தலை துண்டிப்பு
ரியாத்: சவுதி அரபியாவில் கொலை குற்றம் செய்த இந்தியர் மற்றும் போதைப்பொருள் கடத்திய பாகிஸ்தானியர் ஆகியோரின் தலை துண்டித்து மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.
சவுதி அரபியாவில் வேலை செய்து வந்தவர் இந்தியரான விஜய் குமார் சலீம். அவருக்கும், அவருடன் வேலை பார்த்து வந்த ஏமன் நாட்டைச் சேர்ந்தவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது சலீம் கோடாரியால் அந்த ஏமன் நாட்டவரின் தலையில் வெட்டினார். இதில் அந்த நபர் பலியானார். இந்த வழக்கை விசாரித்த சவுதி நீதிமன்றம் சலீமுக்கு மரண தண்டனை விதித்தது.

இதையடுத்து ரியாத் நகரில் வைத்து வியாழக்கிழமை சலீமின் தலை துண்டிக்கப்பட்டு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. மேலும் ஹெராயின் போதைப் பொருள் கடத்திய பாகிஸ்தானியரான ஹபீஸ் விஃபாக் ரசூல் ஷாவுக்கும் வியாழக்கிழமை மதினா நகரில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.
இந்த ஆண்டில் நேற்றைய தண்டனைகளையும் சேர்த்து மொத்தம் 34 பேர் தலை துண்டித்து கொலை செய்யப்பட்டுள்ளனர். சவுதியில் போதைப் பொருள் கடத்தல், பலாத்காரம், கொலை, மத நிந்தனை ஆகிய குற்றங்களுக்கு மரண தண்டனை விதிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
சவுதியில் கடந்த ஆண்டு 87 பேரும், அதற்கு முந்தைய ஆண்டு 78 பேரும் தலை துண்டித்து கொலை செய்யப்பட்டுள்ளனர்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications