குறையப்போகும் பெட்ரோல் - டீசல் விலை? இந்தியா உள்பட ஆசியாவுக்கான ஆயில் விலையை குறைத்த சவுதி.. பின்னணி

Subscribe to Oneindia Tamil

ரியாத்: இந்தியா உள்பட ஆசிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் கச்சா எண்ணெயின் விலையை சவுதி அரேபியா அதிரடியாக குறைத்துள்ளது. நம் நாட்டில் பெட்ரோல், டீசல் விலை குறையுமா? என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி சவுதி அரேபியா திடீரென்று ஆசிய நாடுகளை குறிவைத்து கச்சா எண்ணெய் விலை குறைத்தது பற்றி முக்கிய தகவல் வெளியாகி உள்ளது.

மத்திய கிழக்கு நாடுகளில் ஒன்றாக சவுதி அரேபியா உள்ளது. இங்கு கச்சா எண்ணெய் வளம் அதிகம் உள்ளது. இன்னும் சொல்லப்போனால் சவுதி அரேபியாவின் பொருளாதாரம் கச்சா எண்ணெய் வர்த்தகத்தை சார்ந்து தான் உள்ளது.

இந்நிலையில் தான், திடீரென்று இந்தியா உள்பட ஆசிய நாடுகளுக்கு கச்சா எண்ணெய் விலையை குறைத்து வழங்க சவுதி அரேபியா முடிவு செய்துள்ளது.

கச்சா எண்ணெய் விலை குறைப்பு

அதாவது சவுதி அரேபியா அரசுக்கு சொந்தமாக அராம்கோ நிறுவனம் உள்ளது. இந்த நிறுவனம் மார்ச் மாதத்துக்கான 'அரப் லைட்' ரக கச்சா எண்ணெயின் விலையை ஒரு பேரலுக்கு 30 சென்ட் குறைத்துள்ளது.

30 சென்ட் என்பது 0.30 அமெரிக்கா டாலராகும். இந்திய மதிப்பில் ரூ.25 ஆக உள்ளது. 2020ஆம் ஆண்டின் பிற்பகுதிக்குப் பிறகு ஒரே நேரத்தில் இந்தளவு விலை குறைந்துள்ளது இதுவே முதல் முறை.

தேவைக்கு அதிகமாக ஆயில்

ஆனாலும் கூட இந்த விலை குறைப்பு எதிர்பார்த்த அளவுக்கு இல்லை என்றாலும் விலை குறைப்பு நல்ல செய்தியாகவே பார்க்கப்படுகிறது. சவுதி அரேபியாவின் இந்த முடிவுக்கு முக்கிய காரணம் உள்ளது. அதாவது உலக சந்தையில் தேவைக்கு அதிகமாக எண்ணெய் கிடைப்பதை இது காட்டுகிறது.

சவுதி அரேபியாவை எடுத்து கொண்டால் ஆசிய நாடுகளுக்கு தான் அதிகளவில் கச்சா எண்ணெய் விற்பனை செய்து வருகிறது. 2024ல் சவுதி அரேபியா, சீனாவுக்கு 47.9 பில்லியன் டாலருக்கும், தென்கொரியாவுக்கும் 29.5 பில்லியன் டாலருக்கும் விற்பனை செய்துள்ளது.

அதேபோல், ஜப்பானுக்கும் 28.7 பில்லியன் டாலருக்கும், இந்தியாவிற்கு 19.6 பில்லியன் டாலருக்கும் கச்சா எண்ணெய் விற்பனை செய்தது. இதனால் சவுதி அரேபியாவின் கச்சா எண்ணெய்க்கு ஆசிய நாடுகள் தான் முக்கிய மார்க்கெட்டாக உள்ளது.

விலை குறைப்பின் பின்னணி

ஆனால் தற்போது ரஷ்யா சலுகை விலையில் இந்தியா மற்றும் சீனாவுக்கு கச்சா எண்ணெய் விற்பனை செய்கிறது. இது போதாது என்று அமெரிக்காவும் கச்சா எண்ணெய் உற்பத்தியை அதிகரித்துள்ளது. அதுமட்டுமின்றி உலகிலேயே அதிக கச்சா எண்ணெய் கொண்ட வெனிசுலாவை அமெரிக்கா கட்டுப்படுத்தி அங்கிருந்து உற்பத்தியை உயர்த்தி உலக நாடுகளுக்கும் வழங்க திட்டமிட்டுள்ளது.

இது சவுதி அரேபியாவின் கச்சா எண்ணெய் வர்த்தகத்தை பாதிக்க வாய்ப்புள்ளது. இதனால் தான் தங்களிடம் கச்சா எண்ணெய் வாங்கும் ஆசிய நாடுகளுக்கு சவுதி அரேபியா கச்சா எண்ணெய் விலையை குறைத்துள்ளது. கச்சா எண்ணெய் வர்த்தகத்தை பொறுத்தவரை சவுதி அரேபியாவின் ஒவ்வொரு முடிவும் மிகவும் முக்கியமாக பார்க்கப்படுகிறது.

பெட்ரோல் - டீசல் விலை குறையுமா?

ஏனென்றால் சவுதி அரேபியா ஒவ்வொரு மாதமும் நிர்ணயம் செய்யும் விலையின் அடிப்படையில் தான் பிற நாடுகள் கச்சா எண்ணெய் விலையை நிர்ணயம் செய்கின்றன.

அந்த வகையில் தற்போது சவுதி அரேபியா விலை குறைத்துள்ளதால் பிற நாடுகளும் விலையை குறைக்க வாய்ப்புள்ளது. இப்படியான சூழலில் நம் நாட்டுக்கும் குறைந்த விலையில் கச்சா எண்ணெய் கிடைக்கலாம். இதனால் நம் நாட்டிலும் பெட்ரோல், டீசல் விலையில் குறையுமா? என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+