சவுதி மீது போர் தொடுக்கும் லெபனான்? அமைச்சர் பேட்டியால் வளைகுடா நாடுகளில் பதற்றம்

Posted By:
Subscribe to Oneindia Tamil

ரியாத்: சவுதி அரேபியா தலைநகர் ரியாத்தில் நடந்த பேட்டி ஒன்றில் நேற்று லெபனான் குறித்து சவூதி அரேபியாவின் வெளியுறவுத் துறை அமைச்சர் பேசினார். அப்போது லெபனான் அரசு சவுதி அரேபியா மீது போர் அறிவித்து இருப்பதாக அவர் கூறினார்.

சவுதியின் வெளியுறவுத் துறை அமைச்சர் 'தாமார் அல் சபான்' இது குறித்து மேலும் கூறுகையில் ''லெபனான் எங்களை எப்போது அழிக்கலாம் என காத்துக் கொண்டு இருக்கிறது'' என்றும் கூறினார்.

மேலும் லெபனானில் நடக்கும் அரசியல் குழப்பங்கள் எல்லாவற்றிற்கும் நாங்கள் காரணம் என அவர்கள் தவறாக நினைத்துக் கொள்வதாவும் அவர் முறையிட்டார். இவரது இந்த பேட்டி காரணமாக மூன்றாம் உலகப் போர் மூளும் அபாயம் உருவாக்கி இருக்கிறது.

சவூதி மீது லெபனான் போர்

சவூதி மீது லெபனான் போர்

சவுதியின் வெளியுறவுத் துறை அமைச்சர் தாமார் அல் சபான் நேற்று தனியார் தொலைக்கட்சி ஒன்றிற்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் ''லெபனானின் முக்கிய இயக்கமான லெபனான் ஹஸபுல்லா இயக்கம் எங்கள் மீது போர் அறிவிக்க காத்து இருக்கிறது'' என்று கூறினார். மேலும் அவர் இது குறித்து பேசுகையில் லெபனான் அரசாங்கம் ஈராக்குடன் சேர்ந்து ஏற்கனவே எங்கள் மீது போர் நடவடிக்கைகளில் இறங்கிவிட்டதாக கூறியுள்ளார்.

லெபனானின் பிரச்சனை

லெபனானின் பிரச்சனை

கடந்த சில மாதங்களாக லெபனானில் நிறைய அரசியல் குழப்பங்கள் நடந்து வருகிறது. இதற்கெல்லம் முக்கிய காரணமாக சவுதி அரேபியா இருப்பதாக கூறப்படுகிறது. லெபனானின் பிரதமர் சில நாட்களுக்கு முன்பு பதவி விலக்கியதற்கு கூட சவுதி அரேபியாதான் காரணம் என லெபனான் ஹஸபுல்லா இயக்கம் தெரிவித்து இருந்தது. இதையடுத்து சவுதியை அழிக்காமல் விட மாட்டோம் எனவும் அந்த இயக்கம் கூறியது.

பெரிய இயக்கம் ஆகி இருக்கிறது

பெரிய இயக்கம் ஆகி இருக்கிறது

முதலில் சிறிய அளவில் தொடங்கப்பட்ட இயக்கமான லெபனான் ஹஸபுல்லா இயக்கம் தற்போது பெரிய அளவில் வளர்ந்து இருக்கிறது. சவுதி அரசால் வழிநடத்தப்பட்ட லெபனானின் முன்னாள் பிரதமர் அல் ஹராரி அந்த இயக்கத்தின் வளர்ச்சியை கட்டுப்படுத்த தவறி விட்டார். மேலும் அவர் அந்த இயக்கம் குறித்த போதிய எச்சரிக்கையை சவுதிக்கு தரவில்லை என்று கூறப்படுகிறது. இதையடுத்தே அவர் அழுத்தம் காரணமாக தனது பதவியில் இருந்து விலகினார்.

மூன்றாம் உலகப் போர் உருவாகுமா

மூன்றாம் உலகப் போர் உருவாகுமா

இந்த நிலையில் லெபனான் ஹஸபுல்லா இயக்கத்தின கோபமான கருத்தும், சவுதி அமைச்சரின் பேட்டியும் இரண்டு நாடுகளுக்கும் இடையில் போரை உருவாக்க இருப்பதாக சொல்லப்படுகிறது. அதுமட்டும் இல்லாமல் இதில் ஈராக்கும் ஈடுபட்டு இருப்பதால் இது கண்டிப்பாக உலக்போராக மாறும் அபாயமும இருக்கிறது. இதன் காரணமாக எணணெய் வள நாடுகள் மீண்டும் பரபரப்பில் ஆழ்ந்து இருக்கிறது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Saudi Arabia has accused Lebanon of declaring war on it. Saudi Arabia announced that attacks by the Lebanese Shi'ite group Hezbollah constituted a declaration of war.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற