சவுதி அரேபியாவில் தியேட்டர்களுக்கு அனுமதி... 2018ல் முதல் தியேட்டர் திறக்கப்படும்!
சவுதி அரேபியாவில் தியேட்டர்கள் திறப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டு இருக்கிறது.
ரியாத்: சவுதி அரேபியாவில் தியேட்டர்கள் திறப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டு இருக்கிறது. இதற்கான அறிவிப்பை சவுதியின் முடி இளவரசர் முகமது பின் சல்மான் தெரிவித்து இருக்கிறார்.
இதன் மூலம் சவுதி நிறைய விஷயங்களில் முன்னேற்றம் அடையும் என்று கூறப்படுகிறது. மேலும் இன்னும் நிறைய சமுதாய சீர்திருத்தங்கள் சவுதியில் கொண்டு வரப்படும் என்றும் கூறப்பட்டு இருக்கிறது.
ஏற்கனவே சவுதியில் 'கோபர்' என்ற இடத்தில் ஒரேயொரு தியேட்டர் மட்டும் செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

நோ தியேட்டர்
35 வருடங்களுக்கு முன்பு சவுதியில் தியேட்டர்கள் செயல்பட்டு வந்தது. ஆனால் சினிமா பார்ப்பது இஸ்லாமிய மார்க்கத்திற்கு எதிரானது என நிறைய இஸ்லாமிய இயக்கங்கள் குரல் கொடுத்து இருந்தது. இஸ்லாமிய இயக்கங்களின் அழுத்தத்தின் காரணமாக சவுதியில் தியேட்டர்களுக்கு தடை வித்திக்கப்பட்டது. இதன் காரணமாக அங்கு இத்தனை நாட்களாக ஒரு தியேட்டர்கள் கூட செயல்படாமல் இருந்தது.

மாற்றங்கள்
இந்த நிலையில் சவுதியின் முடி இளவரசராக முகமது பின் சல்மான் பதவியேற்றத்தில் இருந்து அங்கு நிறைய மாற்றங்கள் கொண்டு வருகிறார். சில நாட்களுக்கு முன்பு அங்கு இருக்கும் முக்கிய அதிகாரிகளின் வீட்டில் சொத்துக்கள் எவ்வளவு இருக்கிறது என்று சோதனை நடத்தினார். இந்த விஷயம் உலகம் முழுக்க வைரல் ஆனது. முடி இளவரசர் மிகவும் கராறானவர் என்றும் கூறப்பட்டது.

ஓட்டுநர் உரிமம்
சவுதியில் பெண்கள் கார் ஓட்டுவது தடை செய்யப்பட்டு இருந்தது. ஆனால் அதை முடி இளவரசராக பதவியேற்றதும் முகமது பின் சல்மான் நீக்கினார். 2018ல் இருந்து பெண்கள் கார் ஓட்டலாம் என்று அவர் அறிவித்தார். அந்த நாட்டில் இது பெண்கள் முன்னேற்றத்தில் பெரிய மைல்கல்லாக பார்க்கப்பட்டது. பலரும் அவரின் இந்த முடிவுக்கு வாழ்த்து தெரிவித்து இருந்தனர்.

அனுமதி
தற்போது இனி தியேட்டர்களுக்கு அனுமதி அளிக்கப்படும் என்று கூறப்பட்டு இருக்கிறது. அதன்படி 2018 மார்சில் இருந்து சவுதியில் தியேட்டர்கள் திறக்கப்படும். எண்ணெய் பொருட்களின் விலை குறைவால் சவுதி அதிகம் பாதிக்கப்பட்டு இருக்கிறது. இந்த பொருளாதார பாதிப்பை போக்கும் வகையில் சவுதியில் இதுபோன்ற பொழுதுபோக்கு விஷயங்களுக்கு அனுமதி அளிக்கப்படும் என்றும் முடி இளவரசர் கூறியுள்ளார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications