சவுதி: வெளிநாட்டுக்கு சென்று தீவிரவாதிகளுடன் சேர்ந்த 6 பேருக்கு சிறை
ரியாத்: வெளிநாட்டுக்கு சென்று போராளிகளுடன் சேர்ந்து போராடிய குற்றத்திற்காக 6 பேருக்கு சவுதி நீதிமன்றம் 6 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதித்துள்ளது.
ஈராக் மற்றும் சிரியாவில் உள்ள ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளுடன் சேர்ந்து போராட பல்வேறு நாட்டினர் அங்கு செல்கின்றனர். இந்நிலையில் வெளிநாட்டுக்கு சென்று போராளிகளுடன் சேர்ந்து போராடியது. மன்னரின் கட்டளைக்கு கீழ்படியாதது உள்ளிட்ட குற்றங்களுக்காக சவுதியைச் சேர்ந்த 6 பேருக்கு அந்நாட்டு சிறப்பு நீதிமன்றம் 6 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதித்துள்ளது.
மேலும் அந்த 6 பேரும் தண்டனை காலம் முடிந்து விடுதலையான பிறகு குறிப்பிட்ட காலத்திற்கு வெளிநாடுகளுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. வெளிநாட்டுக்கு சென்று போராடுபவர்களுக்கு 3 முதல் 20 ஆண்டுகள் சிறை, அரசால் தீவிரவாதிகள் என்று அறிவிக்கப்பட்ட தடை செய்யப்பட்ட அமைப்புகளுக்கு உதவினால் 5 முதல் 30 ஆண்டுகள் சிறை என்று சவுதி மன்னர் அப்துல்லா கடந்த பிப்ரவரி மாதம் அறிவித்திருந்தார்.
அல் கொய்தா, ஐஎஸ்ஐஎஸ், நுஸ்ரா முன்னணி, ஹிஸ்புல்லா மற்றும் ஏமனைச் சேர்ந்த ஹவ்தி அமைப்பு ஆகியவை சவுதி அரசால் தடை செய்யப்பட்ட அமைப்புகள் ஆகும்.
வெளிநாட்டுக்கு சென்று போராடிய குற்றத்திற்காக கடந்த மாதம் சுமார் 12 பேர் சவுதியில் கைது செய்யப்பட்டனர். 2 ஆயிரத்து 500க்கும் மேற்பட்ட சவுதியைச் சேர்ந்தவர்கள் வெளிநாடுகளில் தீவிரவாதிகளுடன் சேர்ந்து போராடிக் கொண்டிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர். அதில் பெரும்பாலானவர்கள் சிரியாவில் இருப்பதாக கூறப்படுகிறது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications