பாதியிலேயே நின்ற தங்க எஸ்கலேட்டர்.. இறங்கி வந்த சவூதி மன்னர்!
சவூதி மன்னர் இறங்குவதற்காக பயன்படுத்தப்பட்ட தங்க எஸ்கலேட்டர் பாதி வழியில் நின்ற வீடியோ வெளியாகி டிவிட்டரில் டிரெண்ட் ஆனது.
மாஸ்கோ : சுற்றுப்பயணத்திற்காக ரஷிய தலைநகர் மாஸ்க்கோவிற்கு சென்றிருந்தார் சவூதி மன்னர் சல்மான் பின் அப்துல் அஜிஸ் . அப்போது அவர் இறங்குவதற்கு பயன்படுத்தப்பட்ட தங்க எஸ்கலேட்டர் பாதி வழியில் நின்றுபோனதால் பரபரப்பு ஏற்பட்டது.
இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி பெரிய அளவில் டிரெண்ட் ஆனது.
பயணப் பிரியரான சவூதி மன்னர் சல்மான் பின் அப்துல் அஜிஸுக்கு நேர்ந்த இந்த நிகழ்வு நேற்று இணையம் முழுக்க வைரல் ஆனது.

தங்க எஸ்கலேட்டர்
மிகவும் செல்வம் செழிப்பு பொருந்தியவரான சவூதி மன்னர் சல்மான் தான் இறங்குவதற்கு தங்கத்தால் ஆனா எஸ்கலேட்டரை பயன்படுத்துவது வழக்கம். பார்ப்பதற்கே அழகாக இருக்கும் இந்தப் படிக்கட்டுகள் மிக அதிக பொருட் செலவில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்தப் படிக்கட்டுகள் உருவாக்கப்பட்ட போது பெரும் அளவில் இணையத்தில் இதுகுறித்து பேசப்பட்டது.
|
நடக்கத் தொடங்கிய மன்னர்
மாஸ்கோவுக்கு வந்த இடத்தில் இந்த தங்க எஸ்கலேட்டர் பாதி வழியில் செயல்படாமல் போனது. எஸ்கலேட்டர் பாதியில் செயல்படாமல் போனதால் சவூதி மன்னர் இறங்க முடியாமல் தவித்தார். நடந்து பழக்கம் இல்லாத சவூதி மன்னர் அந்த வயதிலும் கஷ்டப்பட்டு படிகளில் இறங்கிய வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவர் கஷ்டப்பட்டு இறங்குவதை பார்த்து டிவிட்டரில் பலரும் கலாய்த்தும், வருத்தமும் பட்டு இருந்தனர்.
|
எப்படி இதுல இறங்குறது
பாதி வழியில் எஸ்கலேட்டர் நின்றதை கலாய்த்துள்ளார் இவர். ``இந்தப் பக்கமா , அந்தப் பக்கமா எப்படி இதுல இறங்குறது`` என்பது போல இவர் கேட்டு இருக்கிறார்.
|
பின்னாடி போகாத எஸ்கலேட்டர்
இந்த டிவிட்டை எழுதி இருக்கும் இவர் ''நல்லவேளை எஸ்கலேட்டர் பின்பக்கமா போகல , இல்லைனா மன்னர் மறுபடியும் ஏரோபிளேனுக்கே போய் இருப்பார் '' என் கிண்டலாக கூறியுள்ளார்.
|
எப்பா எவ்வளவு வேகம்
எஸ்கலேட்டர் பாதிவழியில் நின்றதால் மன்னர் மிகவும் மெதுவாக கீழே இறங்கிவந்தார் இதை கலாய்த்து இருக்கும் இவர் வடிவேலு பாணியியல் ``என்னா ஸ்பீடு `` என எழுதி கிண்டல் செய்துள்ளார்.
|
கம்பெனியை மூடிடுவாங்க
அந்த தங்க எஸ்கலேட்டரை கலாய்த்து இருக்கும் இந்த டிவிட்டில் `` சிக்கிரமே அந்த தங்க எஸ்கலேட்டர் கம்பெனியை மூட போறாங்கன்னு நினைக்கிறேன் '' என்று கூறியுள்ளார்.
|
என்ன ஒரு அழகான நடை
அவர் மெதுவாக நடந்து செல்வதை கிண்டல் செய்திருக்கிறது இந்த டிவிட். இதில் " அவர் நடக்குறதை பார்த்தா குழந்தை நடக்குற மாதிரி வித்தியாசமா இருக்கு " என்று கூறியுள்ளார்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது












Click it and Unblock the Notifications