டிரம்ப் வந்த மறுநொடி.. மொத்தமாக மாறும் சர்வதேச அரசியல்! 51 லட்சம் கோடியை முதலீடு செய்யும் சவுதி

Subscribe to Oneindia Tamil

சவுதி: அமெரிக்க அதிபராக டிரம்ப் பதவியேற்ற உடனேயே சர்வதேச அரசியல் மொத்தமாக மாற தொடங்கியுள்ளது. பைடன் இருந்தவரை அமெரிக்கா- சவுதி இடையேயான உறவு சிறப்பாக இல்லாத நிலையில், டிரம்ப் வந்த உடனேயே அமெரிக்காவில் சுமார் 600 பில்லியன் டாலரை முதலீடு செய்யவுள்ளதாகச் சவுதி இளவரசர் முகமது பின் சல்மான் அறிவித்துள்ளார்.

மத்திய கிழக்கில் உள்ள முக்கியமான எண்ணெய் வளமிக்க நாடுகளில் ஒன்று சவுதி அரேபியா. கடந்த காலங்களில் சவுதிக்கும் அமெரிக்காவுக்கும் இடையே பெரியளவில் நல்லுறவு இருந்தது இல்லை.

donald trump saudi arabia us

டிரம்ப்:

ஆனால், டிரம்ப் அமெரிக்க அதிபராக முதல்முறை பதவியேற்ற 2017- 2021 காலகட்டத்தில் தான் இதை மாற்றினார். குறிப்பாக 2017ல் அவர் அதிபராகப் பதவியேற்ற உடன் முதல் வெளிநாட்டுப் பயணமாகச் சவுதிக்கே சென்றார். மேலும், இஸ்ரேல்- சவுதி இடையே இருந்த மோதல் போக்கையும் குறைக்க டிரம்ப் பெரியளவில் உதவினார்.

இப்படி இரு தரப்பிற்கும் இடையேயான உறவு மெல்ல மேம்பட்டு வந்த சூழலில், அமெரிக்க அதிபராக பைடன் 2021ல் பதவியேற்ற உடன் நிலைமை மாற தொடங்கியது. மீண்டும் அமெரிக்கா- சவுதி இடையேயான உறவில் விரிசல் விழத் தொடங்கியது. என்ன தான் சவுதி மன்னராக சல்மான் பின் அப்துல்அஜிஸ் அல் சவுத் இருந்தாலும் அவரது மகனும் இளவரசருமான முகமது பின் சல்மான் தான் அங்கு ஆட்சியைக் கவனித்து வருகிறார். ஆனால், முகமது பின் சல்மானிடம் பேசுவதையே பைடன் தரப்பு தவிர்த்து வந்தது.

மிகப் பெரிய முதலீடு:

ஆனால், டிரம்ப் அதிபர் பதவியை ஏற்ற உடனேயே சவுதி- அமெரிக்கா இடையேயான உறவு மாற தொடங்கியது போலவே தெரிகிறது. அடுத்த நான்கு ஆண்டுகளில் அமெரிக்காவில் சுமார் 600 பில்லியன் டாலர்களை (இந்திய மதிப்பில் சுமார் 51 லட்சம் கோடி ரூபாய்) முதலீடு செய்யத் திட்டமிட்டுள்ளதாகச் சவுதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் அறிவித்துள்ளார்.

முகமது பின் சல்மான்:

டிரம்ப் உடன் சமீபத்தில் முகமது பின் சல்மான் தொலைப்பேசி வழியாக உரையாடிய நிலையில், அப்போது டிரம்பிடம் முதலீடு குறித்து முகமது பின் சல்மான் கூறியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாகச் சவுதி பிரஸ் ஏஜென்சி, "அடுத்த நான்கு ஆண்டுகளில் 600 பில்லியன் டாலர் அளவில் அமெரிக்காவுடனான தனது முதலீடுகள் மற்றும் வர்த்தகத்தை விரிவுபடுத்தும் சவுதியின் விருப்பத்தைப் பட்டத்து இளவரசர் உறுதிப்படுத்தினார். இதற்கு மேலும் முதலீடுகள் அதிகரிக்க வாய்ப்பு இருக்கிறது" என்றார்.

அதேநேரம் அமெரிக்காவில் என்ன மாதிரியான விஷயங்களில் முதலீடு செய்யச் சவுதி திட்டமிட்டுள்ளது. வர்த்தகத்தை எப்படி விரிவுபடுத்தத் திட்டமிட்டுள்ளது என்பது குறித்த தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை. அதேநேரம் இது தொடர்பாக வெள்ளை மாளிகை தரப்பில் இதுவரை எந்தவொரு விளக்கமும் அளிக்கப்படவில்லை.

சவுதி- அமெரிக்கா உறவு

முன்பு சவுதியில் இருந்து தான் அமெரிக்கா அதிகப்படியான கச்சா எண்ணெய்யை வாங்கி வந்தது. ஆனால், இப்போது அமெரிக்காவிலேயே போதியளவில் கச்சா எண்ணெய் கிடைப்பதால் அமெரிக்கா சவுதியை நம்பி இருக்கத் தேவையில்லை. அதேநேரம் இதுநாள் வரையிலும் கூட சவுதி ராணுவம் அமெரிக்க ஆயுதங்களையே நம்பி இருப்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+