"புதிய மைல்கல்" கார் ஓட்ட அனுமதித்த 4 ஆண்டுகளில்.. விண்வெளிக்கு செல்லும் முதல் சவுதி அரேபியா பெண்!
சவுதி அரேபிய பெண் ஒருவர் முதல் முறையாக விண்வெளிக்கு பயணம் மேற்கொள்ள உள்ளார்.
ரியாத்: சவுதி அரேபியாவில் பெண்கள் கார் ஓட்டுவதற்கு அனுமதியளித்த நான்கே ஆண்டில், பெண் ஒருவரை விண்வெளிக்கு அனுப்ப உள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. சவுதி அரேபியாவைச் சேர்ந்த ரயானா பர்ணாவி என்ற பெண், சக நாட்டைச் சேர்ந்த விண்வெளி வீரருடன் விண்வெளி ஆய்வுக்காக பயணம் மேற்கொள்ள உள்ளார்.
சவுதி மன்னர் முகமது சல்மான் கடந்த சில ஆண்டுகளாக உடல்நலக் குறைவால் சிரமங்களை சந்தித்ததன் காரணமாக, பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் பிரதமராக நியமிக்கப்பட்டார். இஸ்லாமிய நாடான சவுதி அரேபியாவில் பெண்களுக்கு ஏராளமான கட்டுப்பாடுகள் முன்பு இருந்தன.
முகம், உடல் தெரியாத அளவுக்கு ஆடைகள் அணிதல், கார் ஓட்டத் தடை, விளையாட்டுப் போட்டிகளை நேரடியாகப் பார்க்கத் தடை, சினிமா பார்க்கத் தடை உள்ளிட்ட பல கட்டுப்பாடுகள் பெண்களுக்கு இருந்தன.

பெண்களுக்கான விதிகளில் தளர்வு
ஆனால் சவுதி அரேபியாவின் பட்டத்து இளவரசராக வந்த முகம்மது பின் சல்மான் பல்வேறு புதிய சீர்திருத்தங்களை கொண்டு வந்தார். இதன் காரணமாக சவுதியில் பெண்கள் கார் ஓட்டுவதற்கும், ஓட்டுநர் உரிமம் பெற்றுக் கொள்ளவும், பெண்கள் திரையரங்குகளில் சென்று சினிமா பார்க்கவும் அனுமதி அளிக்கப்பட்டது. அதுமட்டுமல்லாமல் கடந்த ஆண்டு "விஷன் 2030 என்னும் விண்வெளித் திட்டத்தை சவுதி அரேபியா அரசு தொடங்கியது. தற்போது குறுகிய-நீண்ட விண்வெளிப் பயணங்களுக்காக வீரர்களைத் தேர்வுசெய்து அவர்களுக்குப் பயிற்சியளித்து வருகிறது.

விஷன் 2030
நாட்டின் பொருளாதாரத்தை மறுகட்டமைப்பு செய்யவும், எண்ணெய் ஏற்றுமதியைச் சார்ந்திருக்கும் நிலையை மாற்றவும் இந்த முயற்சியில் அந்நாடு இறங்கியது. அதன் ஒரு பகுதியாக விண்வெளி திட்டத்துக்கான பணிகள் தீவிரப்படுத்தப்பட்டன. முன்னதாக ஐக்கிய அரபு அமீரகம் சார்பாக 2019ம் ஆண்டு விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பியது. இதன் மூலம் விண்வெளி மனிதர்களை அனுப்பிய முதல் அரபு நாடு என்ற பெருமையையும் பெற்றது.

விண்வெளிக்கு செல்லும் சவுதி பெண்
இந்த நிலையில் முதல் முறையாக சவுதி அரேபிய நாட்டைச் சேர்ந்த முதல் பெண் விண்வெளி வீராங்கணையான ரயானா பர்னாவி, சக நாட்டைச் சேர்ந்த விண்வெளி வீரர் அலி அல் கர்னி உள்பட 4 பேர், ஏ.எக்ஸ்-2 விண்வெளி பயணத்தில் இணைய உள்ளதாக சவுதி அரேபியா ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது. இவர்கள் பயணிக்க உள்ள விண்களம், அமெரிக்காவில் இருந்து ஏவப்பட உள்ளது.

முதல் அரபு இஸ்லாமியார்
4 ஆண்டுகளுக்கு முன்னதாக பெண்களுக்கு கார் ஓட்டுவதற்கு அனுமதி கொடுத்த சவுதி அரேபியா அரசு, அடுத்த நான்கே ஆண்டுகளில் விண்வெளி பயணத்திற்கான அனுமதி வழங்கியுள்ளது பலரின் பாராட்டை பெற்று வருகிறது. அதேபோல் 1985ம் ஆண்டு, சவுதி இளவரசரும், ஒரு விமானப்படை விமானியுமான சுல்தான் பின் சல்மான் பின் அப்துல் அஜிஸ் அமெரிக்கா ஏற்பாடு செய்த விண்வெளிப் பயணத்தில் பங்கேற்று, விண்வெளிக்குச் சென்ற முதல் அரபு இஸ்லாமியர் என்ற பெருமையை பெற்றது குறிப்பிடத்தக்கது.
-
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல்












Click it and Unblock the Notifications