வேலையாளை அடித்து நொறுக்கிய சவுதிக்காரர்: தீயாக பரவிய வீடியோ

Subscribe to Oneindia Tamil

ரியாத்: சவுதி அரேபியாவைச் சேர்ந்த ஒருவர் தன்னிடம் வேலை செய்யும் ஆசியர் ஒருவரை அடித்ததால் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

சவுதி அரேபியாவைச் சேர்ந்த ஒருவருக்கும், அவரிடம் வேலை செய்யும் ஆசியர் ஒருவருக்கும் இடையே பணம் தொடர்பாக வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் அந்த சவுதி நபர் ஆசியரை பிடித்து கீழே தள்ளி கட்டையால் அடித்து நொறுக்கியுள்ளார். அவர் ஆசியரை அடித்தபோது எடுக்கப்பட்ட வீடியோ சமூக வலைதளங்களில் தீயாக பரவியது.

அந்த சவுதி நபர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக வலைதளங்களில் மக்கள் தெரிவித்தனர். இதையடுத்து போலீசார் அந்த நபரை கண்டுபிடித்து கைது செய்துள்ளனர்.

என்ன தான் காரணமாக இருக்கட்டும் சவுதிக்காரர் எப்படி தனது பணியாளை அடிக்கலாம் என்று மக்கள் சமூக வலைதளங்களில் கொந்தளித்துள்ளனர். இந்த சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் அவர்களை விலக்கிவிடாமல் வேடிக்கை பார்த்தவர்களை சிலர் திட்டியுள்ளனர்.

எதிலும் அவசரம் வேண்டாம் போலீசார் விசாரணையின் முடிவில் என்ன சொல்கிறார்கள் என்று பார்த்துவிட்டு பேசுங்கள் என்று சிலர் சமூக வலைதளங்களில் தெரிவித்துள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+